‘ஒரு கன்னியும் மூணு களவாணிகளும்’ பிப்-28ல் ரிலீஸ்..!

ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும் படத்தை வரும் 28ம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
ராகவா லாரன்ஸ் நடிப்பில் கடந்த 2010ல் வெளியான இரும்புக் கோட்டை முரட்டு சிங்கம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் சிம்பு தேவன் இயக்கியிருக்கும் ஒரு கன்னியும் மூன்று களவாணிகளும். இந்தப்படத்தில் அருள்நிதி ஹீரோவாக நடிக்க, பிந்துமாதவி மற்றும் ‘உதயம் என்.எச்-4 படத்தில் நடித்த அர்ஷிதா ஷெட்டியும் நாயகிகளாகவும் நடித்துள்ளார்.
இவர்களுடன், நாசர், ‘ஆடுகளம்’ நரேன், ஜெயபிரகாஷ், இளவரசு ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். இதுதவிர நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் ‘பக்ஸ்’முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடராஜன் சங்கரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்நிலையில் வரும் பிப்-28 ஆம் தேதி படத்தை திரைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளனர். இதுவரை சீரியஸாக நடித்து வந்த அருள்நிதி, முதல்முறையாக இந்த படத்தில் ரொமாண்டிக் காமெடி கேரக்டரில் நடித்துள்ளார். மு.க.தமிழரசு இந்த படத்தை தயாரித்துள்ளார்.

1 comment:

  1. http://kanavuthirutan.blogspot.com/2014/04/blog-post_6.html

    ReplyDelete