கூடலூர்: வீட்டிற்குள் பதுங்கிய சிறுத்தை குட்டியை, வனத்துறையினர் மீட்டு, முதுமலை வனப்பகுதியில் விடுவித்தனர். நீலகிரி மாவட்டம், மரப்பாலத்தைச் சேர்ந்த, லதா என்பவரின் வீட்டிற்குள், சிறுத்தை குட்டி ஒன்று புகுந்தது. பூனை போல் இருந்ததால், இதை பார்த்து அவர் அதிர்ச்சியடைவில்லை; இருப்பினும், சீறியவாறு இருந்ததால், அச்சம் ஏற்பட்டது. தகவலறிந்த வனத்துறையினர், நேற்று காலை, சிறுத்தை குட்டியை மீட்டு, முதுமலை புலிகள் காப்பக வனத்தில் விட்டனர். வனச் சரகர் கணேசன் கூறுகையில், ""பிடிப்பட்ட பெண் சிறுத்தை குட்டிக்கு, ஒரு வயது இருக்கும். அது, நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்தது. உணவாக மீன் வழங்கப்பட்டு, முதுமலை வனப் பகுதியில் விடப்பட்டது,'' என்றார்.

No comments:
Post a Comment