
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள்.
விஜய்சேதுபதி-சுவாதி நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இப்படத்தில், விஜய்சேதுபதி "சுமார் மூஞ்சி குமாரு" என்றொரு கலகலப்பான கதாபாத்திரத்தில் நடித்திருந்திருந்தார்.
தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட இருக்கிறார்கள். தெலுங்குப் படத்துக்கு இதேபெயரைதான் (தெலுங்கில்) வைத்திருக்கிறார்கள். ஆனால் பாலகுமாராவுக்குப் பதில் பாலகிருஷ்ணா. விஜய் சேதுபதிக்கு ஆந்திராவில் அவ்வளவாக ரசிகர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இருந்தாலும், படத்தின் நாயகி சுப்பிரமணியபுரம் சுவாதிக்கு அங்கு நல்ல மார்கெட் இருக்கிறதாம். அந்த மார்கெட்டை நம்பி தெலுங்கில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். வரும் மார்ச் 4-ம் தேதி ஐதராபாத்தில் தெலுங்குப் பதிப்பின் பாடல்களையும் பின்னர் அதே மாதத்திலேயே படத்தையும் வெளியிடப் போகிறார்களாம். தற்போது இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.
No comments:
Post a Comment