நாய்க் குட்டியை கட்டியணைத்து உறங்கும் பிரபல நடிகை!

அமலா பால் தனது செல்லபிராணியான நாய்க் குட்டியை கட்டி பிடித்து தூங்குவதை பழக்கமாக கொண்டிருக்கிறார்.
நடிகைகள் பலர், தங்கள் வீட்டில் நாய், பூனை, பறவை உள்ளிட்ட செல்லப்பிராணிகளை வளர்த்து வருவது வழக்கம். படப்பிடிப்பு இல்லாத சமயத்தில் அவர்களுடைய பொழுது போக்கே இந்த செல்லப் பிராணிகள்தான்.
அதனுடன் கொஞ்சி விளையாடி மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் செல்லப் பிராணிகளுக்காக பிரத்யேக ஏசி ரூம் என்று ஆயிரக்கணக்கிலும் செலவு செய்கின்றனர்.
நடிகை அமலா பால் தனது செல்லப் பிராணியாக நாய்க் குட்டி ஒன்றை வளர்த்து வருகிறார். உறங்கும்போது இந்த நாய்க் குட்டியை அருகிலேயே படுக்க வைத்துக்கொள்வதுடன் அதை கட்டிப்பிடித்துதான் கண்ணே அசருகிறார். அதுமட்டுமில்லங்க, அந்த நாய்க் குட்டியை தினமும் கட்டிப்பிடித்து தூங்கினால்தான் அமலாபாலுக்கு தூக்கமே வருகிறதாம்.

No comments:

Post a Comment