
பிந்து மாதவி என்றாலே அந்த போதையூட்டும் கண்கள்தான் நினைவுக்கு வரும். அத்தனை அழகு அவரது கண்கள். அதனால்தான் அவரை ஜூனியர் சில்க் என்று அழைக்கிறார்கள். அவரது கண்களை இன்சூர் செய்யலாமா என்று சில தனியார் கம்பெனிகள் அணுகி இருக்கிறார்கள். அதை மறுத்துவிட்ட பிந்து மாதவி. "கண்தானம் மீது எனக்கு நிறைய அக்கறை உண்டு. என் அழகான கண்கள் அதற்கு பயன்படட்டும், கண்தானம் பற்றி யாராவது விளம்பரப் படம் எடுத்தால் அதில் இலவசமாக நடித்து தருகிறேன்" என்று கூறியிருக்கிறார்.அஜீத்துடன் நடிக்க வேண்டும், நன்றாக தமிழ் பேச வேண்டும், புராண படத்தில் இளவரசியாக நடிக்க வேண்டும் என்பதுடன் பிந்து மாதவியின் இப்போதைய ஆசை. கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம் படங்களில் நடித்த பிந்து மாதவியின் கையில் இப்போது சபாஷ் மாப்ளே, தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படங்களில் நடித்து வருகிறார். தனது தாய் மொழியான தெலுங்கிலும் விரைவில் நடிக்க இருக்கிறார்.
No comments:
Post a Comment