சூதாட்டப் படத்துக்கு யு சான்றிதழ்

திருக்குமரன் என்டர்டெயின்மெண்டின் அடுத்த வெளியீடு தெகிடி. தெகிடி என்றால் தாயம் போன்ற சூதாட்ட விளையாட்டை குறிக்கிற சொல். ஏமாற்றுவதற்கும் தெகிடி என்று பொருள் உண்டு.

இந்த விஷயங்கள் எல்லாம் பத்திரிகையாளர் சந்திப்பில் படத்தின் இயக்குனர் பி.ரமேஷ் சொன்னவை. இவர் நாளைய இயக்குனர் செஷன் டூ வில் முதல் பரிசு வென்றவர்.

தெகிடி க்ரைம் த்ரில்லர் ட்ராமா. அசோக் செல்வன், ஜனனி அய்யர் நடித்துள்ளனர். ஒரு கொலையைச் சுற்றி நடக்கும் மர்மங்கள்தான் ஒன் லைன். இந்த மாதம் 28ஆம் தேதி படத்தை வெளியிடுகின்றனர். அதனை முன்னிட்டு படத்தை சென்சாருக்கு திரையிட்டனர்.

படத்தைப் பார்த்தவர்கள் அனைவரும் பார்க்கத் தகுந்த யு சான்றிதழ் தந்தனர். ஆக, வரிச்சலுகைக்கு படம்
தகுதியாகிறது.
img1140222033_1_1

No comments:

Post a Comment