
எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தின் கீழ், ரூ.4,956 கோடியில் 660 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்திலேயே முதல் முறையாக, குறைந்த அளவு நிலக்கரியில் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் - சூப்பர் கிரிட்டிக்கல்- தொழில்நுட்பத்தில் இந்த அனல் மின் நிலையம் (நன்ல்ங்ழ் இழ்ண்ற்ண்ஸ்ரீஹப் பட்ங்ழ்ம்ஹப் டர்ஜ்ங்ழ் நற்ஹற்ண்ர்ய்) அமைக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், அனல் மின் நிலையத் திட்டத்தை ரூ.3,961 கோடியில் நிறுவுவதற்கான பணி ஆணையை லான்கோ இன்ஃப்ரா டெக் நிறுவனத்தின் செயல் தலைவர் எல். மதுசூதன் ராவிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் என்னும் புதிய திட்டம் - சூப்பர் கிரிட்டிக்கல் - தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 29.03.2012-ஆம் தேதி அறிவித்தார். இந்தத் திட்டப் பணிக்கு தமிழக அரசு 30.03.2012-ஆம் தேதி அனுமதி வழங்கியது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியோடு, பிற அனுமதிகளும் பெறப்பட்ட பிறகு, இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. இந்த ஒப்பந்தப் புள்ளியில் ஹரியாணா மாநிலம், குர்காவ்னில் அமைந்துள்ள லான்கோ இன்ஃப்ரா டெக் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.மின் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், மின் வாரியத் தலைவர் கே.ஞானதேசிகன், எரிசக்தித் துறைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, லான்கோ இன்ஃப்ரா டெக் நிறுவனத்தின் துணை மேலாண்மை இயக்குநர் எஸ்.சி. மனோச்சா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment