சேவை குறைபாடு : ஏர்டெல்லுக்கு அபராதம்

அபுஜா: சென்ற ஜனவரியில், மொபைல்போன் சேவை குறைபாடு காரணமாக, நைஜீரிய தொலைத்தொடர்பு ஆணையம் (என்.டி.ஏ.,), பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு, 18.50 கோடி நைரா (ரூ.6.80 கோடி) அபராதம் விதித்துள்ளது. குறைபாடுகளுக்கு தீர்வு காணும் வரை, நைஜீரியாவில் பார்தி ஏர்டெல் நிறுவனம், 'சிம்' கார்டுகள் விற்பனை செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மார்ச் 7ம் தேதிக்குள் அபராதம் செலுத்தத் தவறினால், அத்தொகையை செலுத்தும் வரை, நாள்தோறும் 25 லட்சம் நைரா செலுத்த வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதே போன்று, நைஜீரியாவில் செயல்படும், எம்.டி.என்., குளோபோகாம் நிறுவனங்களும், மோசமான மொபைல்போன் சேவைக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
17 கோடி மக்கள் வசிக்கும் நைஜீரியாவில், கடந்த ஆண்டு அக்டோபர் இறுதி நிலவரப்படி, 15.60 கோடி மொபைல்போன் சந்தாதாரர்கள் உள்ளனர். தொலைத்தொடர்பு சேவையை நான்கு
நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் மீது, என்.டி.ஏ., ஏற்கனவே பலமுறை இதுபோன்ற நடவடிக்கை எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment