தைபே: தைவானில், 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு, அழகை மேம்படுத்தும் சிகிச்சைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டில், மூக்கு சரிசெய்தல், மார்பகத்தை பெரிது படுத்துதல், இரட்டை கண்ணிமை, நிறம் மாற்றுதல், போன்றவற்றுக்காக, இளம் பெண்களுக்கு, பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்படுகிறது. பலருக்கு இந்த சிகிச்சைகள் தோல்வியில் முடிந்து, வாழ்க்கையே பாழாகிவிடுகிறது. இதன் காரணமாக, தைவான் அரசு, 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான, அழகு சிகிச்சைக்கு தடை விதித்துள்ளது.
இதுகுறித்து, தைவான் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது: இளம் பெண்களுக்கு, இதுபோன்ற சிகிச்சைகள் தேவையற்றது. இதனால், உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்படுகிறது. எனவே, அழகுபடுத்துவதற்கான, "பிளாஸ்டிக் சர்ஜரி' இளம் பெண்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி, சிகிச்சை செய்யும் டாக்டருக்கு, 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; அது மட்டுமல்லாது, அவர்கள் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவர்; உச்சகட்டமாக, டாக்டரின் உரிமமும் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:
Post a Comment