சர்ச்சை கிளப்பிய உலக கோப்பை டி சர்ட்

சாவோ பாலோ: சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சார்பில், 20வது உலக கோப்பை கால்பந்து தொடர், வரும் ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை, பிரேசிலில் நடக்கவுள்ளது.

உலக கோப்பை தொடரை பார்க்க  ரசிகர்கள் வரவுள்ள நிலையில், பாலியல் தொழில் கொடி கட்டிப் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதை தடுக்க பிரேசில் நிர்வாகம் பெரும் பாடுபட்டு வருகிறது. இதனிடையே, விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் ஜெர்மனியின் பிரபல அடிடாஸ் நிறுவனம், பெண்களின் பின்னழகை குறிக்கும் வகையில் வெளியிட்ட கால்பந்து 'டி சர்ட்', சர்ச்சை கிளிப்பியுள்ளது. 

இது விற்பனைக்கு வந்த ஒரு சில மணி நேரத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு பிரேசில் சுற்றுலாத் துறை கடும் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து, இந்த 'டி சர்ட்டுகளை' திரும்ப பெறுவதாக அறிவித்தது அடிடாஸ் நிறுவனம்.

FIFA World Cup, brazil

No comments:

Post a Comment