காஜல்அகர்வாலுக்கு பீதியை ஏற்படுத்திய தீபிகா படுகோனே!

Kajal Agarwal fear of  Deepika Padukoneதமிழில் முன்னணி ஹீரோக்களுடன் தொடர்ந்து நடித்த போதும் படங்களின் தோல்வி காரணமாக, ஆந்திரா சென்று நடித்து வருகிறார் காஜல்அகர்வால். அதிலும், அங்குள்ள இளவட்டங்களான மகேஷ்பாபு, ராம்சரண், நாகசைதன்யா போன்றவர்கள் அவரது பாக்கெட்டில் இருப்பதால், எளிதாக படங்களை புக்காகிக்கொண்டிருக்கின்றன.ஆனால், இந்த மூவரில் காஜல், முக்கியமான ஹீரோவாக கருதப்பட்டு வரும் ராம்சரண், தற்போது தான் நடிக்கும் புதிய படமொன்றிற்கு பாலிவுட்டிலிருந்து தீபிகா படுகோனேயே அழைத்து வந்திருக்கிறாராம். தெலுங்கு, இந்தி என இரண்டு மொழிகளையும் கருத்தில் கொண்டு தான் நடித்து வரும் சில படங்கள் உருவாவதால், அந்த படங்களுக்கு இந்தியில் பிரபலமான நடிகைகளை புக் பண்ணுகிறார் ராம்சரண்.

அந்த வகையில், பிரியங்கா சோப்ராவை ஜோடியாக்கி அவர் நடித்த ஜாஞ்சீர் என்ற படம் படுதோல்வியடைந்து விட்டதையடுத்து, தற்போது தான் நடிக்கும் புதிய படத்திற்கு தீபிகாவை புக் பண்ணியிருக்கிறார் ராம்சரண். இதையடுத்து, இதுவரை மும்பையிலேயே நிலைகொண்டிருந்த தீபிகா, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆந்திராவில் ஒரு கிளை அலுவலகத்தை திறந்துள்ளார்.

இதனால் ராம்சரணின் பாசறை நடிகையான காஜல்அகர்வால்தான் நொந்து போயிருக்கிறார். ஒருவேளை ராம்சரணுடன், தீபிகா இணைகிற படம் பெரிய அளவில் ஹிட்டாகி விட்டால் தன்னை கழட்டி விட்டு அந்த இடத்தை தீபிகாபடுகோனேவுக்கு கொடுத்து விடுவாரோ என்ற பீதியில் இருக்கிறார் காஜல்.

No comments:

Post a Comment