சிவகார்த்திகேயனுடன் நடிக்க அதிக சம்பளம் கேட்கும் முன்னணி நடிகைகள்!

Top heroines asking more salary to act with Sivakarthikeyanமான்கராத்தே படத்தில் ஹன்சிகாவுடன் இணைந்து நடித்துள்ளார் சிவகார்த்திகேயன். இந்த நிலையில், எதிர்நீச்சலைத் தொடர்ந்து மீண்டும் தனுஷ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கவும் முன்னணி நடிகையாக புக் பண்ண திட்டமிட்டார் தனுஷ். சிவகார்த்திகேயன் ஆசைப்பட்ட மாதிரி நயன்தாராவிடம்கூட பேசிப்பார்த்தார். ஆனால், அவர் மசியவில்லை. தொடர்ந்து ஜெய், சிவகார்த்திகேயன் என்று வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடித்து மார்க்கெட்டை இறக்கிக்கொள்ள வேண்டாமே என்று நிராகரித்து விட்டாராம்.அதையடுத்து தமன்னா, அமலாபால் என்று சென்றபோது, கோடிக்கணக்கில் கூலி கேட்டார்களாம். என்னுடன் நடித்தபோதெல்லாம் இந்த அளவு சம்பளம் கேட்கவில்லையே என்று கேட்டதற்கு, முன்னணி ஹீரோக்களுடன் என்றால் கோடிக்கு கீழே இறங்கி வரத்தயார். ஆனால், வளர்ந்து வரும் நடிகர்களுக்காக இறங்கி வர முடியாது என்று உசரத்தில் நின்றே பேசினார்களாம்.

அதனால், இப்போது விரலுக்கேற்ற வீக்கமாய், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த ஸ்ரீதிவ்யாவிடம் பேசியுள்ளார்களாம். மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் வாய்ப்பு என்றதும், சம்பளத்தைப்பற்றி வார்த்தை பேசாமல் அக்ரிமென்டில் சைன் பண்ண துடித்துக்கொண்டிருக்கிறாராம் நடிகை. சம்பளம் எவ்வளவு வேண்டும் என்று கேட்டதற்கு, நீங்களா பார்த்து என்ன கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறேன் என்று கூறி விட்டாராம் நடிகை. இது போதாதா நம்ம ஆட்களுக்கு, இனி ஸ்ரீதிவ்யா போன்ற நடிகைகள்தான் நம்ம கம்பெனி ஆர்ட்டிஸ்ட் என்று தனுஷ்தரப்பு அம்மணியை மொத்த குத்தகை எடுத்து விட்டார்களாம்.

No comments:

Post a Comment