பதுல்லா: இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி.,) சார்பில், 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. வங்கதேச அணிக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில் இந்திய அணி வென்றது.
பதுல்லாவில் இன்று நடக்கும் தொடரின் 4வது லீக் போட்டியில், இந்தியா, இலங்கையை சந்திக்கிறது. 'டாஸ்' வென்ற இலங்கை கேப்டன் மாத்யூஸ் 'பீல்டிங்' தேர்வு செயதார். இந்திய அணியில் வருண் ஆரோன் நீக்கப்பட்டு, ஸ்டுவர்ட் பின்னி சேர்க்கப்பட்டார்.
இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி துவக்கம் அளித்தது. மாத்யூஸ் பந்தில் முதலில் ஒரு பவுண்டரி அடித்த தவான், தொடர்ந்து மலிங்கா பந்தில் இரண்டு பவுண்டரி அடித்தார். சேனநாயகே 'சுழலில்' ரோகித் சர்மா (13) 'பெவிலியன்' திரும்பினார். கோஹ்லி 44 ரன்களில் ஆட்டமிழந்தார். தவான் (94) சத வாய்ப்பை இழந்தார். ராயுடு (18), தினேஷ் கார்த்திக் (4), பின்னி (0) நிலைக்கவில்லை. அஷ்வின் (18), புவனேஷ்வர் (0) விரைவில் வெளியேறினர். இந்திய அணி, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு, 264 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா (22), ஷமி (14) அவுட்டாகாமல் இருந்தனர்.
இலங்கை அணிக்கு குசால் பெரேரா, திரிமன்னே ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. புவனேஷ்வர் பந்தை திரிமன்னே பவுண்டரிக்கு விரட்டினார். தன் பங்கிற்து ஷமி பந்தை பெரேரா சிக்சருக்கு பறக்கவிட்டார். அரை சதம் கடந்த இவர் 64 ரன்களில் வெளியேறினார். ஜடோஜ சுழலில் ஜெயவர்தனா (9), சண்டிமால் (0) சிக்கினர். மாத்யூஸ் (6) சொற்ப ரன்னில் அவுட்டானார். இலங்கை அணி 37ஓவரில் 5 விக்கெ்ட்டுக்கு 172 ரன்கள் எடுத்திருந்தது. சங்ககரா (42), சேனநாயகே (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

No comments:
Post a Comment