மைனா’ விதார்த் நடிப்பில் வெளிவரவிருக்கும் புதிய படம் ”ஆள்”. இந்தியில் வெளியான ஆமீர் என்ற படத்தின் கதையை தழுவி உருவாகியுள்ள இப்படத்தில் முதன்முறையாக கோட்-சூட் அணிந்து டிப்-டாப்பாக நடித்திருக்கிறார் விதார்த்.
ஆனால் இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான கதையில் நடித்திருக்கிறார். படம் முழுக்க ஓடிக்கொண்டேயிருக்கும் ஒரு வேடம். அவரை அப்படி ஓட வைப்பது யார்? எதை சொல்லி அப்படி ஓட வைக்கிறார் என்பதுதான் சஸ்பென்ஸ்.
இப்படம் பற்றி விதார்த் கூறுகையில், முதலில் இந்த படத்தில் நடிக்க வேண்டும் என்று என்னை கேட்டபோது நான் ஒரு படப்பிடிப்புக்காக பாங்காங்கில் இருந்தேன்.
அப்போது கண்டிப்பாக நடிப்பதாக சொன்னேன் ஆனால் கதை கேட்கவில்லை. சென்னைக்கு வந்த பிறகு இந்தியில் வெளியான ஆமீர் படத்தின் தழுவல்தான் என்று டிவிடியை கொடுத்தனர். படம் பார்த்து பயந்து விட்டேன். இந்த கதையில் நம்மால் நடிக்க முடியுமா? என்று மிரண்டு போய் நின்றேன்.
ஆனால், டைரக்டர் ஆனந்த் கிருஷ்ணா என்னிடம் வேலை வாங்கிய விதம், மைனா படத்தில் நடித்தபோது, பிரபுசாலமன் சார் என்னை எப்படி நடிக்க வைத்தாரோ அதேபோல் இருந்தது. அதனால் இந்த கதையில் நம்மால் ஸ்கோர் பண்ண முடியும் என்ற நம்பிக்கை எனக்கு ஏற்பட்டது. அதனால் துணிச்சலாக களமிறங்கினேன்.
மேலும், இப்படத்துக்காக 45 நாட்களாக நடந்த படப்பிடிப்பில் ஓடிக்கொண்டேயிருந்தேன். 3 கேமராக்கள் என்னை பின்தொடர, சென்னை முழுக்க ஓடியிருக்கிறேன்.
அந்த அளவுக்கு கடுமையாக உழைத்தேன். ஆனால் இப்போது படத்தை பார்க்கையில் எனது நடிப்பு எனக்கே ஆச்சரியத்தை கொடுக்கும் வகையில் உள்ளது.
No comments:
Post a Comment