
அழகிய தீயே படத்தில் அறிமுகமான மலையாள நடிகை நவ்யா நாயர், மாயக்கண்ணாடி, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, ராமன் தேடிய சீதை உள்பட சில தமிழ் படங்களிலும் 50க்கும் மேற்பட்ட மலையாளப் படங்களிலும் நடித்துள்ளார். 2010ம் ஆண்டு பெங்களூர் என்ஜினீயர் சந்தோஷ் மேனனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார். இடையில் சில மலையாள சீரியல்களில் நடித்தார்.இப்போது மீண்டும் சினிமாவில் நடிக்கிறார். மலையாளத்தில் ஹிட்டான த்ரிஷியத்தை பி.வாசு கன்னடத்தில் ரீமேக் செய்கிறார். இதில் மோகன்லால் நடித்த கேரக்டரில் ரவிச்சந்திரன் நடிக்கிறார். மீனா கேரக்டரில் நவ்யா நாயர் நடிக்கிறார்.
இதுபற்றி இயக்குனர் பி.வாசு கூறியிருப்பதாவது: த்ரிஷியத்தை கன்னடத்தில் ரீமேக் செய்யும் எண்ணம் வந்த உடனேயே அதில் மீனாவைத்தான் நடிக்க வைக்க நினைத்தேன். காரணம் அவர் அதில் பிரமாதமாக நடித்திருப்பதோடு, கன்னட ரசிகர்களுக்கும் நன்கு அறிமுகமானவர், பெங்களூரில் வசிப்பவர். ஆனால் அதற்குள் அவரை தெலுங்கு ரீமேக்கிற்கு புக் செய்து விட்டார்கள். அதனால் அவரைபோன்ற குடும்ப பாங்கான நடிகை தேடியபோதுதான் நவ்யா நாயர் பெங்களூரில் வசிப்பதை அறிந்து அவரை தொடர்பு கொண்டு நடிக்க கேட்டேன் உடனே ஒப்புக் கொண்டார். விரைவில் படப்பிடிப்பு துவங்குகிறது என்றார்.
No comments:
Post a Comment