
நயன்தாரா-ஹன்சிகா இருவரும் விமானநிலையத்தில் பார்த்தும் பார்க்காத மாதிரி சென்றுள்ளனர்.
சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். பின்னர் இருவரும் அந்நியோன்யமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி அவர்களின் நெருக்கத்தை உறுதிப்படுத்தியது. இந்நிலையில் சிம்பு, நயன்தாராவுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதால் சிம்பு - ஹன்சிகா காதல் முறிவடைந்தது. சரியாக 6 மாதமே நீடித்த இந்த காதல் கதை முடிவுக்கு வந்துவிட்டது.
காரணம், சிம்புவின் முன்னாள் காதலிதான் இந்த நயன்தாரா. முன்பு இதேபோல் சிம்பு-நயன்தாரா இருவரும் ஒருவரையொருவர் காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார்கள். எனவே, இவர்கள் இருவரும் மீண்டும் ஜோடி சேருவதை விரும்பாத ஹன்சிகா சிம்புடனான காதலை முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு விமான நிலையத்தில் நயன்தாராவும், ஹன்சிகாவும் சந்தித்துக் கொண்டார்களாம். ஆனால் இருவரும் பேச முயலவில்லையாம். சட்டென முகத்தை திருப்பிக் கொண்டு போய்விட்டதாக கூறுகிறார்கள். நயன்தாரா-ஹன்சிகா இருவரும் இதுவரைக்கும் நேரில் சந்தித்துக் கொண்டதுமில்லை, பேசிக் கொண்டதுமில்லை.
அதற்கான சந்தர்ப்பங்கள் இதுவரை உருவானதும் இல்லை. அப்படி இருந்தும் இருவரும் விமான நிலையத்தில் ஏன் இப்படி நடந்து கொண்டார்கள் என்பதுதான் யாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. இத்தனைக்கும் சினிமாவில் இவர் வாய்ப்பை அவரோ, அவர் வாய்ப்பை இவரோ தட்டிப்பறித்ததே இல்லை. வாய்ப்பை தட்டிப்பறிக்கவில்லை என்றாலும் ஒருவேளை காதலை தட்டிப்பறித்தார்களோ என்னவோ!
No comments:
Post a Comment