விஜய், பாலா படங்கள் கைமீறிப் போனதால் அதிர்ச்சியில் ஜி.வி.பிரகாஷ்குமார்!

G.V.Prakash upsetவெயில் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ்குமார். ஏ.ஆர்.ரகுமானின் சகோதரியின் மகனான இவர், குறுகிய காலத்திலேயே பாரதிராஜா, பாலா, விஜய் போன்ற முன்னணி கலைஞர்களின் படங்களுக்கு இசையமைக்கும் அளவுக்கு உயர்ந்து நின்றார். இதனால் வளர்ந்த இசையமைப்பாளர்கள் ஜி.வி.பிரகாஷினால் பாதிக்கப்படும் நிலை உருவானது.ஆனால், இப்படி வேகமாக வளர்ந்து கொண்டிருந்த அவர், தற்போது பென்சில் படத்தில் நாயகனாக நடித்து வருவதையடுத்து, இசையில் சரியான ஆர்வம் காட்டுவதில்லை என்று பரதேசிக்கு பிறகு தான் இயக்கும் கரகாட்ட படத்திற்கு இசையமைக்க இளையராஜாவை தேடிச்சென்று விட்டார் பாலா. அவரைத் தொடர்ந்து இப்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். ஆக, தலைவா படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷினால் விஜய் படத்தை தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை.

இதனால், பலத்த அதிர்ச்சியடைந்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், இன்னும் சிறிது காலம் நடிப்பிலேயே சென்று கொண்டிருந்தால், எஞ்சியுள்ள இயக்குனர்களும் தன்னை தண்ணி தெளித்து விடுவார்கள் என்பதை புரிந்து கொண்ட அவர், பென்சில் படத்தின் ரிலீசுக்குப்பிறகு நடிப்பா? இசையா? என்று திட்டவட்ட முடிவெடுக்க உள்ளாராம்.

No comments:

Post a Comment