காவியக் காதல்

காவியக் காதல்

அம்பிகாபதி கவிச்
சக்கரவர்த்தி கம்பரின் மகன்.
அமராவதி குலோத்துங்க சோழ மன்னனின்
மகள். 
கம்பர் குலோத்துங்கனின் அவைக்களப்
புலவராக ஒட்டக்கூத்தருடன் சமமாக
இருந்தார். அமராவதி அம்பிகாபதியின்
புலமை மற்றும் இலக்கிய
அறிவை வியந்து அவன் மேல் காதல்
கொண்டாள்.



 
அமராவதி காதலுக்கு ஒட்டக்கூத்தர்
வாயிலாகக் கடும் எதிர்ப்பு உருவானது.
அதன்படி மன்னன் குலோத்துங்கன் அவர்கள்
காதலுக்கு ஒரு நிபந்தனை விதித்தான்.
அம்பிகாபதி காதல் ரசம் இல்லாமல்
தொடர்ந்து நூறு பாடல்கள் பாட வேண்டும்.
பாடி முடித்தால்
அமராவதியை அடையலாம். தவறினால் மரண
தண்டனையை ஏற்க வேண்டும்.

இதனையேற்று அம்பிகாபதி பாட
ஆரம்பித்தான்.
அமராவதி ஒரு தட்டில்
நூறு மலர்களை வைத்துக்
கொண்டு ஒவ்வொரு பாடலுக்கும்
ஒரு மலராக
எடுத்து வேறு ஒரு தட்டிலிட்டாள்.
இவ்வாறு பாடும் பொழுது முதல் பாடலான
இறைவணக்கப் பாடல் கணக்கிலெடுத்துக்
கொள்ளப்பட மாட்டாது. 

இதனை உணராத
அமராவதி, அம்பிகாபதி இறைவணக்கப்
பாடலுடன் சேர்த்து நூறு பாடல்களைப்
பாடி முடித்ததும் பரவசத்தில்
தன்னை மறந்து அம்பிகாபதியை நோக்கிச்
சென்றாள்.

அவளை பார்த்ததும் தன்னை மறந்து காதல் ரசம் ததும்பும்
ஒரு பாடலைப் பாடி விட்டான்.
ஒட்டக்கூத்தர் அவனைக் கையும் களவுமாகப்
பிடித்து மரண
தண்டனை அடையும் படிச் செய்துவிட்டார்.

முடிவில் அழிந்தது காதல், காதலியை அடைய வேண்டிய
அம்பிகாபதி உணார்ச்சி மிகுதியால்
காலனை அடைய நேர்ந்தது.

காதல் காவியமாக மாற வேண்டும்,கண்டவர்கள் முன்னிலையில் காமமாக மாற கூடாது

அட்மின்..

No comments:

Post a Comment