இந்தியர் 5 பேர் சவுதியில் கொலை

ரியாத்: சவுதி அரேபியாவில், ஐந்து இந்தியர்களை உயிரோடு எரித்து புதைத்ததாக, மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சவுதியில், சாப்வா என்ற இடத்தில், 2010ல், ஒரு பெண்ணை கிண்டல் செய்ததாக, ஐந்து இந்தியர்கள் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் இருந்தனர். அங்கிருந்த பண்ணையில் வேலை செய்த, மூன்று பேர், குடி போதையில், இந்த ஐந்து பேரையும், குழியில் தள்ளி, உயிரோடு எரித்து புதைத்துள்ளனர். இது தொடர்பாக, 25 பேர் கைது செய்யப்பட்டனர். நேரடி குற்றத்தில் ஈடுபட்ட, மூன்று பேர், நீதிமன்றத்தில், ஆஜராகி, வாக்குமூலம் அளித்தனர். இவர்கள் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பாதி எரிந்த நிலையில் கிடந்த, ஐந் து பேரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. அதில், சிலரது அடையாள அட்டையும், மோதிரமும், உடைகளும், விசாரணைக்காக, போலீசார் எடுத்துச் சென்றுள்ளனர்.

No comments:

Post a Comment