
தனது முதல் படமான தமிழன் படத்திலேயே விஜய்- பிரியங்கா சோப்ரா இருவரையும் பாட வைத்தார். அதையடுத்து அவ்வப்போது நடிகர்-நடிகைகளை பாட வைத்து வந்தவர், என்னமோ ஏதோ படத்தில் ஸ்ருதிஹாசன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன், பாண்டியநாடு படத்தில் ரம்யா நம்பீசன் போன்றவர்களை வரிசையாக பாட வைத்து வந்தார்.
இந்த நிலையில், தற்போது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்துக்காக விமலையும் பாட வைத்திருக்கிறார் இமான். சிவகார்த்திகேயனைப்போலவே இதுவரை பாடிய அனுபவமே இல்லாத விமல், இமான் பாடிக்காண்பித்த டியூனை சில நாட்களாக பயிற்சி எடுத்து பாடியுள்ளாராம். அந்த வகையில், ஒரு பாடலை பாடி முடிப்பதற்கு 3 மணி நேரம் எடுத்துக்கொண்டாராம் விமல்.
மேலும், ஆரம்பத்தில் பாட கொஞ்சம் சிரமப்பட்ட விமல், பின்னர் அழகாக டியூனை பிடித்து பாடி விட்டாராம். அதைப்பார்த்து அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்களாம். இதனால் உற்சாகம் பொங்கி நிற்கும் விமல், இனி தான் நடிக்கும் படங்களில் தனது குரலுககு பொருத்தமான பாடல்கள் கிடைத்தால் கண்டிப்பாக பாடி விட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். ஆக, விமலுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பாடகரை தட்டி எழுப்பியுள்ளார் இமான்.
No comments:
Post a Comment