
நடிகர் கமல் ஹாஸனைப் பற்றி அபூர்வ நாயன் என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் கமல் ஹாசனைப் பற்றிய அபூர்வ நாயகன் என்ற புத்தக வெளியீட்டு விழா, சென்னை ஆழ்வார் பேட்டையிலுள்ள கமல் ஹாசனின் அலுவலகத்தில் சமீபத்தில் நடைபெற்றது.
இப்புத்தகத்தை உருவாக்கிய ராம்ராஜ் காட்டன் நிறுவன அதிபர் கே.ஆர்.நாகராஜன் புத்தகத்தை வெளியிட, அதன் முதல் பிரதியை கமல் ஹாசன் பெற்றுக் கொண்டார். கமலஹாசன் நற்பணி இயக்கத்தின் உறுப்பினர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கமலஹாசனின் அபூர்வ புகைப்படங்களும், அவர் நடித்த திரைப்படங்கள் குறித்த தகவல்களும் பல முன்னணி கவிஞர்களின் வாழ்வியல் கவிதைகளும் அடங்கிய தொகுப்பாக, களஞ்சியமாக இப்புத்தகம் திகழ்கிறது. உலக அரங்கில் தமிழ் திரைத்துரையை தலைநிமிரச் செய்த கலைஞன் கமலஹாசனின் சாதனைகள் குறித்த பெட்டகமாக திகழும் இப்புத்தகம், நிகழ்காலத்தில் மட்டுமின்றி வருங்கால சரித்திரத்திலும் தனியிடம் பெறுமென்பதில் ஐயமில்லை.
1960-ல் திரைத்துறையில் நுழைந்து, 55 வருடங்களாக தனது உழைப்பின் மூலம் தமிழகத்தின் பெருமையை தரணியில் உயர்த்திய தமிழனுக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சமர்ப்பணமாக இப்புத்தகம் அர்ப்பணிக்கப்படுகிறது என்று ராம்ராஜ் நிறுவன அதிபர் கே.ஆர்.நாகராஜன் கூறினார்.
No comments:
Post a Comment