ஆனபோதும், ஒளிப்பதிவாளர் ரவி கே.சந்திரன் ஜீவாவைக்கொண்டு இயக்கும் யான் படத்தில் கமிட்டானார். முதல் படத்தை விட இந்த படத்தில் இன்னும் மெச்சூரிட்டியான வேடம் என்பதால், இந்த முறை பர்பாமென்ஸ் ரீதியாக தான் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, மாதக்கணக்கில் உடற்பயிற்சி செய்து உடல் எடையை குறைத்த துளசி, ஒரு கூத்துப்பட்டறை ஆசிரியர் முலம் நடிப்பு பயிற்சியும் எடுத்துக்கொண்டே களத்தில் இறங்கினார்.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களாக நடத்தப்பட்டு வரும் யான் படப்பிடிப்பு தற்போது இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. கடந்த சில வாரங்களாக மொராக்கோ சென்று பாடல் மற்றும் சண்டை காட்சிகளை படமாக்கியுள்ளனர்.
ஆனால், பாடல் காட்சிகளில் கிளாமர் உடைதரித்து நடனமாடிய துளசியைதான் பனிப்பொழிவு அதிகமாக நடுநடுங்க வைத்து விட்டதாம். இதனால் ஹோட்டல் அறையை விட்டே வெளியே வரமாட்டேன் என்று அடம் பிடித்தாராம் துளசி.
அதனால், சிறு குழந்தை போன்று சிணுங்கிய அவரை, ஸ்பாட்டுக்கு வரவைக்க வழி தெரியாமல் தவித்தவர்கள், கடைசியில் இந்தியாவில் இருந்து துளசியின் தாய்குலமான மாஜி நடிகை ராதாவை மொராக்கோ வரவைத்து அதன்பிறகுதான் துளசியை வெளியே கொண்டு வந்தார்களாம்.
இருப்பினும், பனிப்பொழிவின் தாக்கத்தினால் அந்த பாடலில் நடித்து முடிக்கும் வரை சிணுங்கிக்கொண்டேதான் இருந்தாராம் துளசிநாயர்.
No comments:
Post a Comment