’கோச்சடையான்’ இசை விழாவில் அமிதாப்பச்சன்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் 'கோச்சடையான்' படத்தில் தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஷோபனா, ஆதி, ருக்மணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா இயக்கத்தில் மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா நிறுவனம் வெளியிடுகிறது. 'கோச்சடையான்' படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளிபோடப்பட்டு இறுதியாக ஏப்ரல் 11ல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

மேலும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அடுத்த மாதம் (மார்ச்) 9–ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் பாலிவுட் நடிகரும், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான அமிதாப் பச்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட இருக்கிறார்.

கடந்த அக்டோபர் மாதம் 'எங்கே போகுதோ வானம்' என்ற ஒரு பாடல் மட்டும் வெளிவந்துவிட்டது. எஸ்.பி.பி பாடிய அந்தப் பாடல் ஏற்கனவே சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிட்டது. 'மன்னன்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் சொந்த குரலில் ஒரு பாடலை கோச்சடையானுக்காகப் பாடியுள்ளார் என்பது இந்த படத்தின் சிறப்பு. இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார்.

No comments:

Post a Comment