தோகா: கத்தார் நாட்டு ஓட்டலில் ஏற்பட்ட வெடி விபத்தில், ஆசிய நாட்டவர்கள் உட்பட, 12 பேர் உயிரிழந்தனர். அரபு நாடான, கத்தாரின், தோகா நகரில், வணிக வளாகத்துடன் இணைந்த ஓட்டல் உள்ளது. இந்த ஓட்டலையொட்டி, பெட்ரோல் "பங்க்' உள்ளது. ஓட்டலின் மேற்கூரையில் இருந்த, எரிவாயு தொட்டி, நேற்று, திடீரென தீப்பிடித்து வெடித்தது. இதில், ஆசிய நாட்டைச் சேர்ந்த வாடிக்கையாளர்கள் உட்பட, 12 பேர் உயிரிழந்தனர். ஓட்டலின் கூரை இடிந்து விழுந்துள்ளதால், இடிபாடுகளில் சிக்கி, 31 பேர் காயமடைந்துள்ளனர். மீட்பு பணிகள் நடக்கின்றன.
No comments:
Post a Comment