--
துப்பாக்கி என்ற மாபெறும் வெற்றிப்படத்தை தொடர்ந்து விஜய்யும் ஏ.ஆர்.முருகதாஸும் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்திருக்கிறார்கள்.
இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கிறார். கொலவெறி புகழ் அனிருத் இசையமைக்கிறார். இருவரும் ஜோடி சேரும் முதல் படம் இது. சமீபத்தில் இந்தப் படத்தின் படிப்பிடிப்பு சென்னை விமான நிலையத்தில் நடந்தது. இந்நிலையில் படத்தின் தலைப்பு குறித்து 'தளபதி'யின் ரசிகர்களிடையே பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
முதலில் இப்படத்திற்கு 'வாள்' என்று பெயர் வைத்திருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அப்படத்திற்கு 'வாள்' என்ற பெயர் வைக்கப்படவில்லையாம். இப்போது விஜய்யின் 57வது படத்திற்கு 'தீரன்' என்ற பெயர் வைக்கப்பட்டிருப்பதாக நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.
மேலும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரலாம். இப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு கொல்கத்தாவில் தொடங்கியது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment