ஜகார்த்தா: இந்தோனேசியாவில், காட்டுத் தீயால் ஏற்பட்ட புகை மூட்டத்தால், மக்கள் அவதிக்குள்ளானதால், அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின், சுமத்ரா தீவில் உள்ள காடுகளை அழித்து, தொழிற்சாலை கட்டுவதற்காக, சிலர், காடுகளுக்கு தீ வைப்பதை, வழக்கமாகக் கொண்டுள்ளனர். இந்த ஆண்டும், சில விஷமிகள் வைத்த தீயால், ரியூ மாகாணத்தில் உள்ள காட்டில், தீ பரவி வருகிறது.
இதனால், அந்த மாகாணம் முழுவதும், புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. மக்கள் சுவாசிக்க சிரமப்படுகின்றனர்; பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது; சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன; இன்னும் சில விமானங்கள் மாற்று வழியில் இயக்கப்படுகின்றன. விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேகங்களில் ரசாயனங்களை தூவி, செயற்கை மழையை வரவழைத்து, வெப்பத்தை தணிக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. இந்த மாகாணத்தில், அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புகையால் பாதிக்கப்பட்டுள்ள, 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு, இலவச சிகிச்சை அளிக்க, அனைத்து மருத்துவமனைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

No comments:
Post a Comment