சுந்தர்.சி. இயக்கத்தில், விஷால், அஞ்சலி, வரலட்சுமி சரத்குமார் மற்றும் பலர் நடித்துள்ள படம் 'மதகஜராஜா'.
இப்படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை அறிவிக்கப்பட்டு, ஒரு சில பிரச்சனைகளால் படம் ரிலீசாகவில்லை. இந்நிலையில் படத்தை ரிலீஸ் செய்யும் முயற்சியில் கடந்த சில மாதங்களாக செயல்பட்டு வந்த படக்குழுவினருக்கு இப்போது 'மதகஜராஜா'வை ரிலீஸ் செய்யும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது.
இந்த படத்தின் பிரச்சனைகளை முடித்து வைத்த பெருமை விஜய்யின் மேனேஜர் பி.டி.செல்வகுமாரையே சேரும் என கோலிவுட்டில் கூறப்படுகிறது. தயாரிப்பாளர் ஜெமினி பிலிம் சர்க்யூட் மற்றும் அவரை எதிர்த்து வழக்கு தொடர்ந்தவரிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தி அதில் வெற்றியும் பெற்ற செல்வகுமார், மதகஜ ராஜா படத்தை தானே ரிலீஸ் செய்வதாக கூறியுள்ளார்.
அதனால் பிரச்னைகள் முடிந்து வரும் மார்ச் 7ஆம் தேதி தமிழகமெங்கும் மதகஜ ராஜா ரிலீஸாக உள்ளது. பாண்டியநாடு வெற்றிக்கு பிறகு விஷாலின் மார்க்கெட் உயர்ந்திருக்கும் சமயத்தில் இந்த படம் ரிலீஸ் ஆவதால் கண்டிப்பாக மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று கோலிவுட்டில் எதிர்பார்ப்பு இருக்கிறது.
No comments:
Post a Comment