சென்னையில் மீண்டும் தீ விபத்து
குடியிருப்பு பகுதியில் 16 அடி நீள ராஜநாகம்
நீலகிரி மாவட்டம், பந்தலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில், இதுவரை, 10க்கும் மேற்பட்ட, ராஜ நாகங்கள் பிடித்து, வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. இந்நிலையில், சேரம்பாடி மின்வாரியத்தில் பணியாற்றி வரும், ஹரிதாஸ் என்பவரின் வீட்டின் முன், நேற்று முன்தினம் இரவு, பெரிய பாம்பு ஒன்று, ஊர்ந்து சென்றுள்ளது.
தகவலறிந்து, பாம்பு பிடிக்கும் ராஜ்குமார், 16 அடி நீளமுள்ள ராஜ நாகத்தை, லாவகமாக பிடித்து, வனத்துறையினரிடம் காண்பித்து, கோட்டமலை வனப்பகுதியில் விட்டார்.

வீட்டிற்குள் பதுங்கிய சிறுத்தை குட்டி

கத்தார் ஓட்டலில் வெடி விபத்து: 12 பேர் பலி
சேவை குறைபாடு : ஏர்டெல்லுக்கு அபராதம்
17 கோடி மக்கள் வசிக்கும் நைஜீரியாவில், கடந்த ஆண்டு அக்டோபர் இறுதி நிலவரப்படி, 15.60 கோடி மொபைல்போன் சந்தாதாரர்கள் உள்ளனர். தொலைத்தொடர்பு சேவையை நான்கு
நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்நிறுவனங்கள் மீது, என்.டி.ஏ., ஏற்கனவே பலமுறை இதுபோன்ற நடவடிக்கை எடுத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகின் காஸ்ட்லி காபி அருந்த வேண்டுமா?
உலகின் காஸ்ட்லி காபி அருந்த வேண்டும் எனஆசைப்படுகிறீர்களா? நீங்கள் தர வேண்டியது அதிகம் இல்லை. வெறும் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும். அப்படி என்ன அதில் விசேஷம்? தங்கத்தூளை சேர்க்கிறார்களா என்றெல்லாம் நீங்கள் கேட்கலாம். இந்த காபி எதில் இருந்து தயாரிக்கப்படுகிறது தெரியுமா? புனுகுப்பூனையின் கழிவிலிருந்து.
உருவாகும் விதம்:
இந்தோனேஷியாவில் உள்ள ஒரு வகை புனுகுப்பூனை காபி செடியில் உள்ள பழங்களை உண்டுவிட்டு, அதுன் கொட்டைகளை, எச்சத்தின் மூலம் வெளியேற்றுக்கிறது. இந்த கொட்டைகளை சேகரித்து சுத்தப்படுத்தி, பதப்படுத்தி வறுத்தெடுக்கின்றனர். இவ்வகை கொட்டைகளிலிருந்து தயாரிக்கப்படும் காபி மிகுந்த சுவையுடையதாய் இருக்கிறதாம். அதனால் இந்தோனேஷியாவில், புனுகு பூனை கழிவு காபி கொட்டை ஒரு கிலோ 25 ஆயிரம் ரூபாய்க்கும் மேல் விற்பனையாகிறது. அதிக விலை கிடைப்பதால் தற்போது இந்த விற்பனையில் கலப்படம் மற்றும் ஏமாற்று வேலைகள் நடக்கின்றன. இதை தடுக்க, உண்மையான காபி கொட்டைகளை அறிவியல் முறைப்படி சோதனை செய்து கண்டு பிடித்து அங்கீகாரம் அளிக்க உள்ளனர்.
18 வயதினருக்கு அழகுபடுத்தும் சிகிச்சை: தைவானில் தடை
இதுகுறித்து, தைவான் சுகாதாரத்துறை அமைச்சர் கூறியதாவது: இளம் பெண்களுக்கு, இதுபோன்ற சிகிச்சைகள் தேவையற்றது. இதனால், உடல்நலத்திற்கு ஆபத்து ஏற்படுகிறது. எனவே, அழகுபடுத்துவதற்கான, "பிளாஸ்டிக் சர்ஜரி' இளம் பெண்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி, சிகிச்சை செய்யும் டாக்டருக்கு, 10 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்படும்; அது மட்டுமல்லாது, அவர்கள் ஓராண்டுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவர்; உச்சகட்டமாக, டாக்டரின் உரிமமும் ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் கூறினார்.
இந்தியர் 5 பேர் சவுதியில் கொலை
பாக்., அசத்தல் வெற்றி: உமர் அக்மல் சதம்
பதுல்லா: ஆசிய கோப்பை தொடரில், 'நடப்பு சாம்பியன்' பாகிஸ்தான் அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. நேற்று நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில், உமர் அக்மல் சதம் அடித்து கைகொடுக்க, 72 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.
வங்கதேசத்தில், 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. பதுல்லாவில் நேற்று நடந்த தொடரின் 3வது லீக் போட்டியில், 'நடப்பு சாம்பியன்' பாகிஸ்தான், அறிமுக ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஆப்கானிஸ்தான் கேப்டன் முகமது நபி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.அக்மல் அபாரம்:
பாகிஸ்தான் அணிக்கு ஷார்ஜீல் கான், அகமது ஷேசாத் ஜோடி சுமாரான துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 55 ரன்கள் சேர்த்த போது ஷார்ஜீ்ல் கான் (25) அவுட்டானார். முகமது ஹபீஸ் (10) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய மற்றொரு துவக்க வீரர் அகமது ஷேசாத், ஒருநாள் அரங்கில் தனது 6வது அரைசதம் அடித்தார். இவர், 50 ரன்கள் எடுத்த போது அவுட்டானார். ஒரு பந்தை கூட சந்திக்காத கேப்டன் மிஸ்பா (0) 'ரன்–அவுட்' ஆனார். அடுத்து வந்த சோகைப் மக்சுத் (13), அப்ரிதி (6) சொற்ப ரன்னில் வௌியேறினர். அன்வர் அலி (21), உமர் குல் (15) நிலைக்கவில்லை. விக்கெட் ஒருபுறம் சரிந்தாலும் தனிநபராக போராடிய உமர் அக்மல், ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை பதம்பார்த்தார். தாவ்லத் ஜத்ரன் வீசிய 50வது ஓவரில், இரண்டு பவுண்டரி, ஒரு சிக்சர் விளாசிய உமர் அக்மல், ஒருநாள் அரங்கில் தனது 2வது சதத்தை பதிவு செய்தார்.
பாகிஸ்தான் அணி 50 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 248 ரன்கள் எடுத்தது. உமர் அக்மல் (102), சயீத் அஜ்மல் (1) அவுட்டாகாமல் இருந்தனர். ஆப்கானிஸ்தான் சார்பில் தாவ்லத் ஜத்ரன், மிர்வைஸ் அஷ்ரப், சமியுல்லா ஷென்வாரி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.அசத்தல் பந்துவீச்சு:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய ஆப்கானிஸ்தான் அணிக்கு முகமது ஷாசத் (9) ஏமாற்றினார். பொறுப்பாக ஆடிய நுார் அலி ஜத்ரன் (44), அஜ்மல் 'சுழலில்' சிக்கினார். பின் இணைந்த அஸ்ஹர் ஸ்டானிக்ஜாய், நவ்ரோஸ் மங்கல் ஜோடி ஆட்டத்தை கையில் எடுத்துக் கொண்டது. மூன்றாவது விக்கெட்டுக்கு 74 ரன்கள் சேர்த்த போது ஸ்டானிக்ஜாய் (40), அப்ரிதியிடம் சரணடைந்தார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த நவ்ரோஸ் மங்கல் (35) 'ரன்–அவுட்' ஆனார்.
அடுத்து வந்த நஜிபுல்லா ஜத்ரன் (1), கேப்டன் முகமது நபி (15), மிர்வைஸ் அஷ்ரப் (4), தாவ்லத் ஜத்ரன் (0), ஷபூர் ஜத்ரன் (0), சமியுல்லா ஷென்வாரி (14) சொற்ப ரன்களில் வௌியேறினர்.
ஆப்கானிஸ்தான் அணி 47.2 ஓவரில் 176 ரன்களுக்கு சுருண்டு, தோல்வி அடைந்தது. பாகிஸ்தான் சார்பில் முகமது ஹபீஸ் 3, சயீத் அஜ்மல், உமர் குல் தலா 2 விக்கெட் கைப்பற்றினர். சிறந்த வெற்றியை பதிவு செய்த பாகிஸ்தான் அணிக்கு (5 புள்ளி), கூடுதலாக ஒரு போனஸ் புள்ளி வழங்கப்பட்டது. ஆட்டநாயகன் விருதை பாகிஸ்தானின் உமர் அக்மல் வென்றார்.

சங்ககராவிடம் சரிந்தது இந்தியா : கடைசி ஓவரில் இலங்கை வெற்றி
பதுல்லா: ஆசிய கோப்பை லீக் போட்டியில் சொதப்பிய இந்திய அணி, இலங்கையிடம் 2 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. துாணாக நின்று சதம் அடித்த சங்ககரா, இலங்கை அணிக்கு கைகொடுத்தார். பொறுப்பாக ஆடிய இந்திய வீரர் ஷிகர் தவானின் ஆட்டம் வீணானது.
ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. பதுல்லாவில் நேற்று நடந்த தொடரின் 4வது லீக் போட்டியில், இந்தியா, இலங்கை அணிகள் மோதின. இலங்கை அணியில் சுரங்கா லக்மலுக்கு பதிலாக அஜந்தா மெண்டிஸ் தேர்வு செய்யப்பட்டார். இந்திய அணியில் வருண் ஆரோன் நீக்கப்பட்டு, ஸ்டூவர்ட் பின்னி சேர்க்கப்பட்டார். 'டாஸ்' வென்ற இலங்கை அணி கேப்டன் மாத்யூஸ், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.
தவான் அபாரம்:
இந்திய அணிக்கு ரோகித் சர்மா (13) மோசமான துவக்கம் கொடுத்தார். பின் ஷிகர் தவான், கேப்டன் விராத் கோஹ்லி சேர்ந்து அசத்தலாக ஆடினர். மலிங்கா வீசிய 5வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த தவான், ஒருநாள் அரங்கில் தனது 6வது அரைசதம் அடித்தார். இரண்டாவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்த போது, அஜந்தா மெண்டிஸ் 'சுழலில்' கோஹ்லி (48) போல்டானார்.
அடுத்து வந்த ரகானே (22) பெரிய அளவில் சோபிக்கவில்லை. தொடர்ந்து அசத்திய தவான், திசாரா பெரேரா வீசிய 26வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்சர் அடித்தார். அபாரமாக ஆடிய இவர் (94), மெண்டிஸ் பந்தில் போல்டாகி, சதம் அடிக்கும் வாய்ப்பை இழந்தார். 'மிடில்–ஆர்டர்' ஏமாற்றம்:
இதற்கு பின் வந்தவர்கள் சொதப்பினர். தினேஷ் கார்த்திக் (4), அம்பதி ராயுடு (18) சொற்ப ரன்னில் வெளியேறினர். ஸ்டூவர்ட் பின்னி 'டக்–அவுட்' ஆனார். மலிங்கா 'வேகத்தில்' அஷ்வின் (18) நடையை கட்டினார். புவனேஷ்வர் குமார் (0), மெண்டிஸ் பந்தில் அவுட்டானார். ரவிந்திர ஜடேஜா, ஒரே ஒரு சிக்சர் மட்டும் அடித்தார். மெண்டிஸ் பந்தில் இரண்டு சிக்சர் விளாசிய முகமது ஷமி ஆறுதல் தந்தார்.
இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 264 ரன்கள் எடுத்தது. ஜடேஜா (22), முகமது ஷமி (14) அவுட்டாகாமல் இருந்தனர்.
இலங்கை சார்பில் அஜந்தா மெண்டிஸ் 4, சேனநாயகே 3 விக்கெட் கைப்பற்றினர்.
குசால் அரைசதம்:
எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இலங்கை அணிக்கு குசால் பெரேரா, திரிமன்னே ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. முகமது ஷமி வீசிய 6வது ஓவரில் அடுத்தடுத்து இரண்டு பவுண்டரி அடித்த திரிமன்னே, அஷ்வின் பந்தை சிக்சருக்கு அனுப்பினார். முதல் விக்கெட்டுக்கு 80 ரன்கள் சேர்த்த போது அஷ்வின் பந்தில் திரிமன்னே (38) அவுட்டானார். முகமது ஷமி, ஸ்டூவர்ட் பின்னி பந்தில் தலா ஒரு சிக்சர் அடித்த குசால் பெரேரா, ஒருநாள் அரங்கில் தனது 3வது அரைசதம் அடித்தார். இவர், 64 ரன்கள் எடுத்த போது அஷ்வினிடம் சரணடைந்தார்.'ஹாட்ரிக்' நழுவல்:ஆட்டத்தின் 32வது ஓவரை வீசிய ரவிந்திர ஜடேஜா 'இரட்டை அடி' கொடுத்தார். இந்த ஓவரின் முதலிரண்டு பந்தில் ஜெயவர்தனா (9), சண்டிமால் (0) அடுத்தடுத்து அவுட்டானார்கள். மூன்றாவது பந்தில் கேப்டன் மாத்யூஸ் 2 ரன்கள் எடுக்க, 'ஹாட்ரிக்' வாய்ப்பு நழுவியது. பின், முகமது ஷமி 'வேகத்தில்' மாத்யூஸ் (6) பெவிலியன் திரும்பினார்.
சங்ககரா சதம்:
அடுத்து வந்த சேனநாயகே (12), சதுரங்கா டி சில்வா (9) நிலைக்கவில்லை. இதையடுத்து இந்தியாவுக்கு வாய்ப்பு ஏற்பட்டது. ஆனால், அபாரமாக ஆடிய சங்ககரா போட்டியை மீண்டும் இலங்கை வசம் கொண்டு வந்தார். முகமது ஷமி பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இவர், ஒருநாள் அரங்கில் தனது 18வது சதத்தை பதிவு செய்தார். இவர், 84 பந்தில் 103 ரன்கள் எடுத்து அவுட்டானார். பின் இணைந்த திசாரா பெரேரா, அஜந்தா மெண்டிஸ் ஜோடி அணியை வெற்றிக்கு அழைத்து சென்றது.
இலங்கை அணி 49.2 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 265 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. திசாரா பெரேரா (11), மெண்டிஸ் (5) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் முகமது ஷமி, ரவிந்திர ஜடேஜா தலா 3, அஷ்வின் 2 விக்கெட் வீழ்த்தினர். இதன்மூலம் இலங்கை அணிக்கு 4 புள்ளிகள் வழங்கப்பட்டன.ஆட்டநாயகன் விருதை இலங்கையின் சங்ககரா வென்றார்.
இந்திய அணி தனது அடுத்த போட்டியில் 'பரம எதிரி'யான பாகிஸ்தானை நாளை சந்திக்கிறது. பைனல் வாய்ப்பை தக்கவைத்துக் கொள்ள இந்திய அணி இப்போட்டியில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
கோஹ்லி சாதனை
நேற்று 48 ரன்கள் எடுத்த கோஹ்லி, 125 இன்னிங்சில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில், வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் விவியன் ரிச்சர்ட்சை (5588 ரன்கள்) பின்னுக்குதள்ளி புதிய சாதனை படைத்தார். இதுவரை கோஹ்லி 125 இன்னிங்சில் 5629 ரன்கள் எடுத்துள்ளார்.
* ஓய்வில்லாமல் விளையாடி வரும் விராத் கோஹ்லி, தொடர்ந்து 100வது ஒருநாள் போட்டியில் பங்கேற்றார். இதன்மூலம் சச்சின் (185 போட்டிகள்), அசாருதின் (126) ஆகியோருக்கு பின் இம்மைல்கல்லை எட்டிய மூன்றாவது இந்தியர் என்ற பெருமை பெற்றார். கோஹ்லி ஒட்டுமொத்தமாக 132 போட்டிகளில் 5629 ரன்கள் எடுத்துள்ளார்.
அஷ்வின் '100'
நேற்று, இலங்கையின் திரிமன்னே, குசால் பெரேராவை அவுட்டாக்கிய இந்தியாவின் அஷ்வின், ஒருநாள் அரங்கில் தனது 100வது விக்கெட்டை பதிவு செய்தார். இதன்மூலம் இந்த இலக்கை எட்டிய 17வது இந்திய பவுலர் என்ற பெருமை பெற்றார். இதுவரை இவர், 77 போட்டியில் 100 விக்கெட் வீழ்த்தியுள்ளார். அதிக விக்கெட் கைப்பற்றிய இந்திய பவுலர்கள் வரிசையில் அனில் கும்ளே (334 விக்கெட்), ஜவகல் ஸ்ரீநாத் (315), அஜித் அகார்கர் (288) முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.

மீண்டும் இந்திய அணியில் இடம் : யூசுப் பதான் நம்பிக்கை
ராஜ்கோட்: விஜய் ஹசாரே உள்ளிட்ட உள்ளூர் போட்டிகளில் திறமையை வெளிப்படுத்தி, மீண்டும் இந்திய அணியில் இடம் பிடிக்க முயற்சிப்பேன்,'' என, பரோடா அணி கேப்டன் யூசுப் பதான் தெரிவித்தார்.
இந்திய அணியின் 'ஆல்–ரவுண்டர்' யூசுப் பதான், 31. இதுவரை 57 ஒருநாள் (810 ரன்கள், 33 விக்கெட்), 22 சர்வதேச 'டுவென்டி–20' (236 ரன்கள், 13 விக்கெட்) போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 2012க்கு பின் தேசிய அணியில் இடம் கிடைக்காமல் தவித்து வருகிறார். தற்போது இவர், விஜய் ஹசாரே டிராபி தொடருக்கான மேற்கு மண்டல பிரிவில் பரோடா அணியின் கேப்டனாக உள்ளார். ராஜ்கோட்டில் இன்று பரோடா அணி, மும்பை அணியை சந்திக்கிறது.
இதுகுறித்து யூசுப் பதான் கூறியது: தற்போது எனது கவனம் முழுவதும் உள்ளூர் போட்டிகளில் மட்டும் உள்ளது. இதில் திறமையை வௌிப்படுத்தும் பட்சத்தில், விரைவில் இந்திய அணிக்காக மீண்டும் விளையாடும் வாய்ப்பை பெறலாம். பேட்டிங்கில் கூடுதல் கவனம் செலுத்தி வருகிறேன். விஜய் ஹசாரே தொடருக்கான இந்த சீசனில் சிறப்பாக விளையாடுவேன் என நம்புகிறேன். மும்பை அணிக்கு எதிரான இன்றைய போட்டி முக்கியமானது. தொடரை வெற்றியுடன் துவக்கும் பட்சத்தில், அடுத்து வரும் போட்டிகளுக்கு உற்சாகம் அளிக்கும். எங்கள் பரோடா அணியில் திறமையைான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு வீரரும் சிறப்பாக விளையாடுவார்கள் என எதிர்பார்க்கிறேன். இன்றைய போட்டியில் விளையாட இர்பான் பதான் தயாராக உள்ளார். பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாடமியில் (என்.சி.ஏ.,), காயத்தில் இருந்து மீண்டு வரும் பயிற்சி மேற்கொண்ட இவர், இன்று பந்துவீச காத்திருக்கிறார்.
இவ்வாறு யூசுப் பதான் கூறினார்.

சர்ச்சை கிளப்பிய உலக கோப்பை டி சர்ட்
சாவோ பாலோ: சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு ('பிபா') சார்பில், 20வது உலக கோப்பை கால்பந்து தொடர், வரும் ஜூன் 12 முதல் ஜூலை 13 வரை, பிரேசிலில் நடக்கவுள்ளது.
உலக கோப்பை தொடரை பார்க்க ரசிகர்கள் வரவுள்ள நிலையில், பாலியல் தொழில் கொடி கட்டிப் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதை தடுக்க பிரேசில் நிர்வாகம் பெரும் பாடுபட்டு வருகிறது. இதனிடையே, விளையாட்டு பொருட்கள் தயாரிக்கும் ஜெர்மனியின் பிரபல அடிடாஸ் நிறுவனம், பெண்களின் பின்னழகை குறிக்கும் வகையில் வெளியிட்ட கால்பந்து 'டி சர்ட்', சர்ச்சை கிளிப்பியுள்ளது.
இது விற்பனைக்கு வந்த ஒரு சில மணி நேரத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு பிரேசில் சுற்றுலாத் துறை கடும் கண்டனம் தெரிவித்தது.
இதையடுத்து, இந்த 'டி சர்ட்டுகளை' திரும்ப பெறுவதாக அறிவித்தது அடிடாஸ் நிறுவனம்.

இலங்கை அணி சிறப்பான ஆட்டம்
பதுல்லா: இந்தியாவுக்கு எதிரான ஆசிய கோப்பை லீக் போட்டியில் இலங்கை அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது.
ஆசிய கிரிக்கெட் கவுன்சில் (ஏ.சி.சி.,) சார்பில், 12வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் வங்கதேசத்தில் நடக்கிறது. வங்கதேச அணிக்கு எதிரான தனது முதல் லீக் போட்டியில் இந்திய அணி வென்றது.
பதுல்லாவில் இன்று நடக்கும் தொடரின் 4வது லீக் போட்டியில், இந்தியா, இலங்கையை சந்திக்கிறது. 'டாஸ்' வென்ற இலங்கை கேப்டன் மாத்யூஸ் 'பீல்டிங்' தேர்வு செயதார். இந்திய அணியில் வருண் ஆரோன் நீக்கப்பட்டு, ஸ்டுவர்ட் பின்னி சேர்க்கப்பட்டார்.
இந்திய அணிக்கு ஷிகர் தவான், ரோகித் சர்மா ஜோடி துவக்கம் அளித்தது. மாத்யூஸ் பந்தில் முதலில் ஒரு பவுண்டரி அடித்த தவான், தொடர்ந்து மலிங்கா பந்தில் இரண்டு பவுண்டரி அடித்தார். சேனநாயகே 'சுழலில்' ரோகித் சர்மா (13) 'பெவிலியன்' திரும்பினார். கோஹ்லி 44 ரன்களில் ஆட்டமிழந்தார். தவான் (94) சத வாய்ப்பை இழந்தார். ராயுடு (18), தினேஷ் கார்த்திக் (4), பின்னி (0) நிலைக்கவில்லை. அஷ்வின் (18), புவனேஷ்வர் (0) விரைவில் வெளியேறினர். இந்திய அணி, 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு, 264 ரன்கள் எடுத்திருந்தது. ஜடேஜா (22), ஷமி (14) அவுட்டாகாமல் இருந்தனர்.
இலங்கை அணிக்கு குசால் பெரேரா, திரிமன்னே ஜோடி சிறப்பான துவக்கம் தந்தது. புவனேஷ்வர் பந்தை திரிமன்னே பவுண்டரிக்கு விரட்டினார். தன் பங்கிற்து ஷமி பந்தை பெரேரா சிக்சருக்கு பறக்கவிட்டார். அரை சதம் கடந்த இவர் 64 ரன்களில் வெளியேறினார். ஜடோஜ சுழலில் ஜெயவர்தனா (9), சண்டிமால் (0) சிக்கினர். மாத்யூஸ் (6) சொற்ப ரன்னில் அவுட்டானார். இலங்கை அணி 37ஓவரில் 5 விக்கெ்ட்டுக்கு 172 ரன்கள் எடுத்திருந்தது. சங்ககரா (42), சேனநாயகே (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

இந்தோனேசியாவில் புகை மூட்டம் : அவசர நிலை அறிவிப்பு
இதனால், அந்த மாகாணம் முழுவதும், புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. மக்கள் சுவாசிக்க சிரமப்படுகின்றனர்; பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது; சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன; இன்னும் சில விமானங்கள் மாற்று வழியில் இயக்கப்படுகின்றன. விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் காட்டுத் தீயை அணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேகங்களில் ரசாயனங்களை தூவி, செயற்கை மழையை வரவழைத்து, வெப்பத்தை தணிக்கும் முயற்சிகளும் நடக்கின்றன. இந்த மாகாணத்தில், அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. புகையால் பாதிக்கப்பட்டுள்ள, 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்களுக்கு, இலவச சிகிச்சை அளிக்க, அனைத்து மருத்துவமனைகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆசிய கோப்பை கிரிக்கெட்: இந்தியா 247/9
இளையராஜாவுக்காக காத்திருக்கும் டைரக்டர் மகேந்திரன்!

மேலும், நான் இயக்கிய பல படங்களின் கதையினை கேட்டதும் அப்படத்திற்கு என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசிக்கிறபோது இளையராஜாவே பலமுறை இந்த தலைப்பை வையுங்கள் என்று சொல்லியிருக்கிறார். அந்த வகையில், உதிரிப்பூக்கள் தலைப்புகூட அவர் வைத்ததுதான். அதனால் இந்த படத்திற்கும் தலைப்பு வைக்கிற பொறுப்பினை அவரிடமே விட்டுவிட்டேன். இளையராஜா என்ன தலைப்பு வைத்தாலும் அதுதான் இந்த படத்தின் டைட்டில் என்பதையும் முடிவு செய்து விட்டேன். அதனால் அவர் படத்திற்கு என்ன பெயர் வைக்கப்போகிறாரோ என்று ஆவலுடன் காத்திருக்கிறேன் என்கிறார் மகேந்திரன்.
அப்பாவாகப்போகிறார் மலையாள நடிகர் ப்ருதிவிராஜ்!

மேலும், 2011ல். சுப்ரியாவை கைப்பிடித்த பிறகு ப்ருதிவிராஜின் மலையாள சினிமா மார்க்கெட் சூடுபிடித்தது. மோகன்லால்-மம்மூட்டிக்குப்பிறகு மலையாளத்தில் ஒரு முக்கியமான நடிகராகி விட்டார். குறிப்பாக போலீஸ் ஸ்டோரி என்றாலே ப்ருதிவிராஜ்தான் என்கிற நிலை உருவாகியிருக்கிறது. ஆக மனைவி தனது வாழ்க்கையில் வந்த பிறகு சினிமாவில் பெரிய வெற்றி கிடைத்தது போல், தனது வாரிசு வந்தபிறகு இன்னும் தனது மார்க்கெட் எகிறும் என்றும் எதிர்பார்த்துககொண்டிருக்கிறாராம் ப்ருதிவிராஜ்.
ரூ.4,956 கோடியில் 660 மெகாவாட் புதிய அனல் மின் நிலையம்

எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டத்தின் கீழ், ரூ.4,956 கோடியில் 660 மெகாவாட் திறன் கொண்ட புதிய அனல் மின் நிலையத்துக்கு முதல்வர் ஜெயலலிதா வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினார்.
தமிழகத்திலேயே முதல் முறையாக, குறைந்த அளவு நிலக்கரியில் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்யும் - சூப்பர் கிரிட்டிக்கல்- தொழில்நுட்பத்தில் இந்த அனல் மின் நிலையம் (நன்ல்ங்ழ் இழ்ண்ற்ண்ஸ்ரீஹப் பட்ங்ழ்ம்ஹப் டர்ஜ்ங்ழ் நற்ஹற்ண்ர்ய்) அமைக்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில், அனல் மின் நிலையத் திட்டத்தை ரூ.3,961 கோடியில் நிறுவுவதற்கான பணி ஆணையை லான்கோ இன்ஃப்ரா டெக் நிறுவனத்தின் செயல் தலைவர் எல். மதுசூதன் ராவிடம் முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்.
எண்ணூர் அனல் மின் நிலைய விரிவாக்கத் திட்டம் என்னும் புதிய திட்டம் - சூப்பர் கிரிட்டிக்கல் - தொழில்நுட்பத்தின் அடிப்படையில் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் 29.03.2012-ஆம் தேதி அறிவித்தார். இந்தத் திட்டப் பணிக்கு தமிழக அரசு 30.03.2012-ஆம் தேதி அனுமதி வழங்கியது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியோடு, பிற அனுமதிகளும் பெறப்பட்ட பிறகு, இந்தத் திட்டத்தை நிறைவேற்றுவதற்கான சர்வதேச ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டன. இந்த ஒப்பந்தப் புள்ளியில் ஹரியாணா மாநிலம், குர்காவ்னில் அமைந்துள்ள லான்கோ இன்ஃப்ரா டெக் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டது.மின் துறை அமைச்சர் நத்தம் ஆர்.விஸ்வநாதன், தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், மின் வாரியத் தலைவர் கே.ஞானதேசிகன், எரிசக்தித் துறைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, லான்கோ இன்ஃப்ரா டெக் நிறுவனத்தின் துணை மேலாண்மை இயக்குநர் எஸ்.சி. மனோச்சா உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
24 மணி நேர இசை விழா தொடங்கியது
மகா சிவராத்திரியையொட்டி, திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே 108 நாதஸ்வரங்கள், 108 தவில்களைக் கொண்டு நடத்தப்படும் 24 மணி நேர நாதஸ்வர இசை விழா வியாழக்கிழமை தொடங்கியது.
இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவன்று திருவண்ணாமலை கிரிவல நாதஸ்வர தவில் இசை சங்கம் சார்பில் 24 மணி நேர நாதஸ்வர இசை விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான இசை விழா வியாழக்கிழமை காலை 6 மணிக்குத் தொடங்கியது.
ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் எதிரே உள்ள உண்ணாமுலையம்மன் தேர் அருகே நடைபெறும் இவ்விழாவை கோவில் முன்னாள் அறங்காவலர் குழுத் தலைவர் தனுசு தொடங்கி வைத்தார். இதையடுத்து 108 நாதஸ்வரங்கள், 108 தவில்களைக் கொண்டு இசை விழா நடத்தப்பட்டு வருகிறது.
குளத்தில் வாசிப்பு:
இதற்கிடையே, வியாழக்கிழமை மாலை 108 நாதஸ்வர வித்வான்கள், 108 தவில் வித்வான்கள் ஒன்று சேர்ந்து கோயில் ராஜகோபுரம் எதிரே உள்ள சர்க்கரை தீர்த்தக் குளத்தில் இறங்கி சுமார் 20 நிமிடங்களாக கச்சேரி நடத்தினர். இதை ஏராளமான பக்தர்கள் கண்டு, மகிழ்ந்தனர்.
இதன்பிறகு, அம்மன் தேர் அருகில் அமைக்கப்பட்டுள்ள மேடைக்கு வந்து வித்வான்கள் தங்களின் இசை விழாவைத் தொடங்கினர்.இவ்விழா வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) காலை 6 மணி வரை தொடர்ந்து 24 மணி நேரமும் நடத்தப்படும் என்று திருவண்ணாமலை மாவட்ட கிரிவல நாதஸ்வர தவில் இசைச் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.
பெற்றோரை இழந்த பெண் குழந்தைகளுக்கு முதல்வர் நிதியுதவி

’கோச்சடையான்’ இசை விழாவில் அமிதாப்பச்சன்

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகிவரும் 'கோச்சடையான்' படத்தில் தீபிகா படுகோன், சரத்குமார், நாசர், ஷோபனா, ஆதி, ருக்மணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா இயக்கத்தில் மீடியா ஒன் குளோபல் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்தை ஈரோஸ் இன்டர்நேஷனல் மீடியா நிறுவனம் வெளியிடுகிறது. 'கோச்சடையான்' படத்தின் ரிலீஸ் தேதி பலமுறை தள்ளிபோடப்பட்டு இறுதியாக ஏப்ரல் 11ல் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
மேலும் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா அடுத்த மாதம் (மார்ச்) 9–ஆம் தேதி சென்னையில் பிரம்மாண்டமான முறையில் நடைபெறவிருக்கிறது. இந்த விழாவில் பாலிவுட் நடிகரும், ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பருமான அமிதாப் பச்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆடியோவை வெளியிட இருக்கிறார்.
கடந்த அக்டோபர் மாதம் 'எங்கே போகுதோ வானம்' என்ற ஒரு பாடல் மட்டும் வெளிவந்துவிட்டது. எஸ்.பி.பி பாடிய அந்தப் பாடல் ஏற்கனவே சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிட்டது. 'மன்னன்' படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் சொந்த குரலில் ஒரு பாடலை கோச்சடையானுக்காகப் பாடியுள்ளார் என்பது இந்த படத்தின் சிறப்பு. இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் வைரமுத்து எழுதியிருக்கிறார்.
அபூர்வ நாயகன் கமல் ஹாசன் புத்தக வெளியீட்டு விழா

நடிகர் கமல் ஹாஸனைப் பற்றி அபூர்வ நாயன் என்ற தலைப்பில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளது.
நடிகர் கமல் ஹாசனைப் பற்றிய அபூர்வ நாயகன் என்ற புத்தக வெளியீட்டு விழா, சென்னை ஆழ்வார் பேட்டையிலுள்ள கமல் ஹாசனின் அலுவலகத்தில் சமீபத்தில் நடைபெற்றது.
இப்புத்தகத்தை உருவாக்கிய ராம்ராஜ் காட்டன் நிறுவன அதிபர் கே.ஆர்.நாகராஜன் புத்தகத்தை வெளியிட, அதன் முதல் பிரதியை கமல் ஹாசன் பெற்றுக் கொண்டார். கமலஹாசன் நற்பணி இயக்கத்தின் உறுப்பினர்கள் இந்த விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கமலஹாசனின் அபூர்வ புகைப்படங்களும், அவர் நடித்த திரைப்படங்கள் குறித்த தகவல்களும் பல முன்னணி கவிஞர்களின் வாழ்வியல் கவிதைகளும் அடங்கிய தொகுப்பாக, களஞ்சியமாக இப்புத்தகம் திகழ்கிறது. உலக அரங்கில் தமிழ் திரைத்துரையை தலைநிமிரச் செய்த கலைஞன் கமலஹாசனின் சாதனைகள் குறித்த பெட்டகமாக திகழும் இப்புத்தகம், நிகழ்காலத்தில் மட்டுமின்றி வருங்கால சரித்திரத்திலும் தனியிடம் பெறுமென்பதில் ஐயமில்லை.
1960-ல் திரைத்துறையில் நுழைந்து, 55 வருடங்களாக தனது உழைப்பின் மூலம் தமிழகத்தின் பெருமையை தரணியில் உயர்த்திய தமிழனுக்கு ராம்ராஜ் காட்டன் நிறுவனத்தின் சமர்ப்பணமாக இப்புத்தகம் அர்ப்பணிக்கப்படுகிறது என்று ராம்ராஜ் நிறுவன அதிபர் கே.ஆர்.நாகராஜன் கூறினார்.
கொழும்பில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நடத்துவதா? - இயக்குநர் வ.கௌதமன் எதிர்ப்பு

கொழும்பில் தனியார் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை நடத்தக் கூடாது என்று இயக்குநர் வ.கௌதமன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, 2009ல் முள்ளிவாய்க்காலில் நடந்த படுகொலை இன்னும் உலகம் முழுக்க வாழும் தமிழர் மனதில் இருந்து நீங்க வில்லை.அந்த ரணமும் இன்னும் ஆறவில்லை.ஒட்டுமொத்த அந்த இனப்படுகொலையில் 1,75,000 தமிழ் உறவுகளும்,இறுதி நாளில்40,000கும் மேற்ப்பட்ட தமிழ் உறவுகளும் படுகொலை செய்யப்பட்டது, உலகம் முழுதும் அறிந்த உண்மை.2009-2014 வரை 5 ஆண்டுகளாக உலகும் முழுக்க உள்ள தமிழர்கள் நீதி கேட்டு போராடிக் கொண்டு இருக்கும் நிலை இன்றைய நிலை.
அதுமட்டுமில்லாமல் வரும் மார்ச் மாதம் ஐநா வில் மனித உரிமை தீர்மானம் நிறைவேறும் நேரத்தில் தனியார் தொலைக்காட்சி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியை கொழும்புவில் நடத்தப் போவதை அறிந்து மிகவும் சொல்லண்ணா துயரத்திற்கு ஆளானோம். அதே நேரத்தில்(மார்ச்10) ஜெனிவாவில் மாபெரும் மக்கள் திரள் போராட்டம் நீதி கேட்டு நடக்கும் நேரத்தில் இந்த நிகழ்ச்சி ந்டப்பது தான் வேதனையானது. மார்ச்1,2 ல் CORAL PROPERTY DEVELOPMENT & CEYLON ARTS CREATION ஆகிய நிறுவனங்களோடு இணைந்து தனியார் தொலைக்காட்சி பம்லப்பட்டி புதிய கதிரேசன் மண்டபத்திலும் மருதானை st.Joseph கல்லூரியிலும் நிகழ்ச்சி நடப்பதாக அறிந்தோம்.
இலங்கையில் தமிழர்கள் ஆடிப்பாடி மகிழ்வாக உள்ளதாக உலகத்திற்க்கு காட்டும் இலங்கை சிங்கள இனவாத அரசின் ராஜதந்திர நிகழ்வாகதான் இது நடக்கிறது. இதற்கு தனியார் தொலைக்காட்சியும் துணை போவது கொடுமையானது. தமிழக முதல்வர் சட்டமன்ற தீர்மானத்தோடு மட்டுமில்லாமல் தேர்தல் அறிக்கையிலும் இலங்கையில் நடைபெற்ற தமிழினப் படுகொலைக்கு தனித் தமிழ் ஈழமே தீர்வு, சர்வதேச பன்னாட்டு விசாரனை தேவை என தமிழர்களுக்கு தொடர்ந்து ஆதரவாக உள்ளார். இந்த சூழலில் கொழும்பில் இப்படி ஒரு நிகழ்வு நடப்பதும்,அதற்கு தனியார் தொலைக்காட்சி துணை போவதும் தமிழக அரசுக்கும் எதிரானது. எங்கள் பினங்களின் மேல் ஏறி நின்று யாரும் பணம் பார்க்க முயல வேண்டாம். எங்கள் உணர்வுகளை நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறொம். இதையும் மீறி நிகழ்ச்சி நடந்தால் மானமுள்ள தமிழர்களுக்கு அவர்கள் பதில் சொல்ல வேண்டி வரும். தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.
45 நாட்களாக சென்னை முழுக்க ஓடிக்கொண்டேயிருந்த விதார்த்!
இன்னும் அரை கோடியைகூட தொடல! -பீல் பண்ணும் ப்ரியாஆனந்த்

உத்தமவில்லனுக்காக வித்தியாசமான மேக்கப்பில் கமல்ஹாசன்!

காதல் முறிந்தாலும் ஹன்சிகாவுடன் நட்பும், நடிப்பும் தொடரும்: சிம்பு

கோச்சடையான் பாடல்களை அமிதாப் வெளியிடுகிறார்!

ரஜினிக்கு உருவான கதையில் அஜீத் நடிக்கிறார்!

யுவன் சங்கர் ராஜா மதம் மாறியது குறித்து இளையராஜாவிடம் கேட்காதீங்க! கெஞ்சிய பி.ஆர்.ஓ.

கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு புதிய படத்தை இயக்குகிறார் மகேந்திரன். இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது ஆஸ்தான இசையமைப்பாளர் இளையராஜாவுடன் கை கோர்த்து களமிறங்குகிறார் இயக்குனர் மகேந்திரன். ஆனால் மகேந்திரன் கடைசியாக இயக்கிய சாசனம் படத்துக்கு இளையராஜா இசையமைக்கவில்லை. நடிகர் நடிகையர் தேர்வு மட்டும் இன்னும் முடியவில்லை. படப்பிடிப்பு மார்ச் மாதம் தொடங்கவிருக்கிறது.
இதனிடையே படத்திற்கான பிரஸ்மீட் சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நேற்று நடைபெற்றது. இந்த பிரஸ்மீட்டில் இளையராஜாவும், மகேந்திரனும் கலந்து கொண்டனர். ஆனால் பிரஸ்மீட்டை ஏற்பாடு செய்த பி.ஆர்.ஓ., முகத்தில் ஒரே டென்ஷன் காணப்பட்டிருக்கிறது. காரணம், இரண்டு பிரபலங்கள் கலந்துகொள்கிறார்கள் என்று கிடையாது.
சில வாரங்களுககு முன் இஸ்லாமியராக மதம் மாறிய யுவன் சங்கர் ராஜா பற்றி பத்திரிகையாளர்கள் அவரின் தந்தை இளையராஜாவிடம் ஏடாகூடமாக எதுவும் கேட்டுவிடக் கூடாது என்றுதான். இது குறித்து முன்னதாகவே சுதாரித்துக் கொண்ட பி.ஆர்.ஓ., பிரஸ்மீட்டில் கேள்வி கேட்கும் வழக்கமுடைய முக்கிய பத்திரிகையாளர்களை அழைத்து மதம் மாறிய யுவன் சங்கர் ராஜா பற்றி எதுவும் கேட்காதீர்கள் என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாராம்.
அவருடைய இந்த பரிதாப நிலைமையை உணந்த பத்திரிகையாளர்கள் இளையராஜாவிடம் யுவன் பற்றி எந்த கேள்வியும் கேட்கவில்லையாம். இதன்பிறகே சம்மந்தப்பட்ட அந்த பி.ஆர்.ஓ., நிம்மதி பெருமூச்சிவிட்டிருக்கிறார்.
நயன்தாரா-ஹன்சிகாவுக்கு இடையே என்ன பிரச்னை! ஏன் அப்படி சென்றார்கள்?

நயன்தாரா-ஹன்சிகா இருவரும் விமானநிலையத்தில் பார்த்தும் பார்க்காத மாதிரி சென்றுள்ளனர்.
சிம்புவும், ஹன்சிகாவும் ஒருவரையொருவர் காதலிப்பதாக ஏற்கனவே அறிவித்தனர். பின்னர் இருவரும் அந்நியோன்யமாக இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி அவர்களின் நெருக்கத்தை உறுதிப்படுத்தியது. இந்நிலையில் சிம்பு, நயன்தாராவுடன் மீண்டும் சேர்ந்து நடிப்பதால் சிம்பு - ஹன்சிகா காதல் முறிவடைந்தது. சரியாக 6 மாதமே நீடித்த இந்த காதல் கதை முடிவுக்கு வந்துவிட்டது.
காரணம், சிம்புவின் முன்னாள் காதலிதான் இந்த நயன்தாரா. முன்பு இதேபோல் சிம்பு-நயன்தாரா இருவரும் ஒருவரையொருவர் காதலித்து பின்னர் பிரிந்துவிட்டார்கள். எனவே, இவர்கள் இருவரும் மீண்டும் ஜோடி சேருவதை விரும்பாத ஹன்சிகா சிம்புடனான காதலை முறித்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரு விமான நிலையத்தில் நயன்தாராவும், ஹன்சிகாவும் சந்தித்துக் கொண்டார்களாம். ஆனால் இருவரும் பேச முயலவில்லையாம். சட்டென முகத்தை திருப்பிக் கொண்டு போய்விட்டதாக கூறுகிறார்கள். நயன்தாரா-ஹன்சிகா இருவரும் இதுவரைக்கும் நேரில் சந்தித்துக் கொண்டதுமில்லை, பேசிக் கொண்டதுமில்லை.
அதற்கான சந்தர்ப்பங்கள் இதுவரை உருவானதும் இல்லை. அப்படி இருந்தும் இருவரும் விமான நிலையத்தில் ஏன் இப்படி நடந்து கொண்டார்கள் என்பதுதான் யாருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. இத்தனைக்கும் சினிமாவில் இவர் வாய்ப்பை அவரோ, அவர் வாய்ப்பை இவரோ தட்டிப்பறித்ததே இல்லை. வாய்ப்பை தட்டிப்பறிக்கவில்லை என்றாலும் ஒருவேளை காதலை தட்டிப்பறித்தார்களோ என்னவோ!
சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஆட்டம் போட்ட அனிருத்!

சிவகார்த்திகேயன் - ஹன்சிகா மொத்வானி முதன் முறையாக ஜோடி சேர்ந்திருக்கும் படம் மான் கராத்தே.
இந்தப் படத்தை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த திருக்குமரன் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
இந்தப்படத்தில் க்ளைமாக்ஸில் இடம்பெறும் கானா பாடலுக்கு தேவாவை அழைத்து பாடவைத்த அனிருத், கூடவே தானும் சேர்ந்து பாடலை பாடியதோடு நடனமும் ஆடியிருக்கிறாராம். இது இந்த வருடத்தின் சிறந்த பாடலாக இருக்கும் என அனிருத் தெரிவித்துள்ளார்.
மேலும் படத்தில் ஸ்ருதிஹாசனும் ஒரு பாடலை பாடியிருக்கிறார். இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் மார்ச்-1ம் தேதி நடக்கவிருக்கிறது. படத்துக்குப் படம் தனது இசையின் மூலம் பாடல்களில் ஏதாவது வித்தியாசம் காட்டிக்கொண்டுதான் இருக்கிறார் அனிருத்.
'எதிர்நீச்சல்' படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அனைத்து பாடல்களையும் சூப்பர் ஹிட்டாக்கித் தந்த அனிருத், இப்போது 'மான் கராத்தே' படத்திலும் அந்த மாயாஜாலத்தை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கலாம்.
உதிரிப்பூக்கள் என்ற தலைப்பை வைத்தது இளையராஜாதான்! இயக்குனர் மகேந்திரன்

"தன்னுடைய புகழ் பெற்ற படமான 'உதிரிப்பூக்கள்' படத்தின் தலைப்பை தேர்வு செய்து கொடுத்ததே இளையராஜாதான்.." என்று இயக்குநர் மகேந்திரன் கூறியுள்ளார்.
தமிழ்ச் சினிமாவின் அடையாள இயக்குனர்களில் ஒருவராக கருதப்படும் மகேந்திரன், தற்போது மீண்டும் படம் இயக்க வந்திருக்கிறார். இந்தப் படத்திற்கு இன்னமும் தலைப்பு வைக்கவில்லையாம். இசை இசைஞானி இளையராஜதான். படத்தின் கதை புதுமைப்பித்தன் எழுதிய ஒரு கதையாம். படத்தின் ஒளிப்பதிவை சஞ்சய் லோக்நாத் மேற்கொள்கிறார். இவர் புகழ்பெற்ற பழம் பெரும் ஒளிப்பதிவாளர் பி.எஸ்.லோக்நாத்தின் மகன். எடிட்டிங் காசி விஸ்வநாதன். சரவணன் என்ற தயாரிப்பாளர் இதனைத் தயாரிக்கிறார். இப்படத்தின் பிரஸ்மீட் நேற்று சென்னையில் உள்ள பிரசாத் ஸ்டுடியோவில் நடைபெற்றது.
அப்போது பேசிய இயக்குனர் மகேந்திரன், "நீண்ட இடைவெளிக்குப் பிறகு புதுமைப்பித்தன் எழுதிய ஒரு கதையை மையப்படுத்தி இந்தப் படத்தை உருவாக்குகிறேன்.
கொஞ்ச நாட்களாக எனக்கு பல பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் என்னுடைய சில விஷயங்களை சமரசம் செய்து கொள்ள முடியாததால் அவற்றை நான் ஒப்புக் கொள்ளவில்லை. இந்தப் படம் ஒரு குடும்பத்துக்குள் நடக்கும் கதை. உங்களுக்கெல்லாம் தெரிந்த கதை தான்.
என் படங்கள் சிலவற்றுக்கு இளையராஜாதான் தலைப்பு வைத்தார். 'உதிரிப் பூக்கள்' என்ற தலைப்புகூட அவர் வைத்ததுதான். அதேபோல இந்தப்படத்துக்கும் அவர்தான் தலைப்பு வைப்பார்.
என் படங்களில் பெரும்பாலான வசனங்களை இளையராஜாதான் எழுதியிருப்பார். குழப்பமாக வேண்டாம். நான் எடுத்த பெரும்பாலான எடுத்த மவுனக் காட்சிகளுக்கெல்லாம் தன் பின்னணி இசையால் அர்த்தமுள்ள வசனங்கள் எழுதியவர் இளையராஜாதான். அதனால் தான் அப்படிச் சொன்னேன். அவர் இல்லாமல் என் படங்கள் எப்போதுமே இல்லை.
நானெல்லாம் சினிமா இயக்க வந்ததே விபத்துதான். ஏதோவொரு உந்துதலால் படம் இயக்க வந்தேன். அதற்கு முன் நிறைய படிச்சபிறகுதான் எனக்கு சினிமா மீது ஆர்வம் வந்துச்சு. ஆனால் அவர் ஒரு பிறவி மேதை'' என்றார்.
தெலுங்கு செல்லும் ’சுமார் மூஞ்சி குமாரு’..!

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிடுகிறார்கள்.
விஜய்சேதுபதி-சுவாதி நடிப்பில் கடந்தாண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா. இப்படத்தில், விஜய்சேதுபதி "சுமார் மூஞ்சி குமாரு" என்றொரு கலகலப்பான கதாபாத்திரத்தில் நடித்திருந்திருந்தார்.
தமிழில் கிடைத்த வரவேற்பை தொடர்ந்து 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா' படத்தை தெலுங்கில் மொழிமாற்றம் செய்து வெளியிட இருக்கிறார்கள். தெலுங்குப் படத்துக்கு இதேபெயரைதான் (தெலுங்கில்) வைத்திருக்கிறார்கள். ஆனால் பாலகுமாராவுக்குப் பதில் பாலகிருஷ்ணா. விஜய் சேதுபதிக்கு ஆந்திராவில் அவ்வளவாக ரசிகர்கள் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இருந்தாலும், படத்தின் நாயகி சுப்பிரமணியபுரம் சுவாதிக்கு அங்கு நல்ல மார்கெட் இருக்கிறதாம். அந்த மார்கெட்டை நம்பி தெலுங்கில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறார்கள். வரும் மார்ச் 4-ம் தேதி ஐதராபாத்தில் தெலுங்குப் பதிப்பின் பாடல்களையும் பின்னர் அதே மாதத்திலேயே படத்தையும் வெளியிடப் போகிறார்களாம். தற்போது இதற்கான வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம்.
காதலும் பிடிக்கும்; காமெடியும் பிடிக்கும் - சொல்கிறார் நந்திதா!!

அடுத்து ''அஞ்சலா'' படம். சுந்தரபாண்டியன் படத்தின் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரனிடம் உதவி இயக்குநராக இருந்த சரவணன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்தில் விமல் ஹீரோ. அஞ்சலா என்ற கேரக்டரில் நடிக்கிறேன். இந்த இரண்டு படங்கள் முடித்ததும் மார்ச் மாதத்திற்கு மேல் கவிதாலயா தயாரிப்பில் பூபதி பாண்டியனின் உதவியாளர் ரவி இயக்கும் படத்தில் பரத்துடன் காமெடி பண்ண காத்திருக்கிறேன். இப்படம் முழுக்க முழுக்க காமெடி சப்ஜெக்ட் படம். நான் நிறைய புதுமுக இயக்குநர்களின் படங்களில் நடித்து வருகிறேன். காதலும், காமெடியும் கலந்து ரொம்ப என்ஜாய் பண்ணி நடிக்கிறேன். எனக்கு காதலும் பிடிக்கும், காமெடியும் பிடிக்கும், இன்னும் வித்தியாசமான கதைகள் அமைந்தால் அதிலும் நான் நடிக்க தயார் என்று கூறியுள்ளார்.
மலைவாழ் பெண்ணாக மனிஷா யாதவ்!

விமலுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பாடகரை தட்டி எழுப்பிய டி.இமான்!

தனது முதல் படமான தமிழன் படத்திலேயே விஜய்- பிரியங்கா சோப்ரா இருவரையும் பாட வைத்தார். அதையடுத்து அவ்வப்போது நடிகர்-நடிகைகளை பாட வைத்து வந்தவர், என்னமோ ஏதோ படத்தில் ஸ்ருதிஹாசன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயன், பாண்டியநாடு படத்தில் ரம்யா நம்பீசன் போன்றவர்களை வரிசையாக பாட வைத்து வந்தார்.
இந்த நிலையில், தற்போது ஒரு ஊர்ல ரெண்டு ராஜா படத்துக்காக விமலையும் பாட வைத்திருக்கிறார் இமான். சிவகார்த்திகேயனைப்போலவே இதுவரை பாடிய அனுபவமே இல்லாத விமல், இமான் பாடிக்காண்பித்த டியூனை சில நாட்களாக பயிற்சி எடுத்து பாடியுள்ளாராம். அந்த வகையில், ஒரு பாடலை பாடி முடிப்பதற்கு 3 மணி நேரம் எடுத்துக்கொண்டாராம் விமல்.
மேலும், ஆரம்பத்தில் பாட கொஞ்சம் சிரமப்பட்ட விமல், பின்னர் அழகாக டியூனை பிடித்து பாடி விட்டாராம். அதைப்பார்த்து அனைவரும் கைதட்டி ஆரவாரம் செய்தார்களாம். இதனால் உற்சாகம் பொங்கி நிற்கும் விமல், இனி தான் நடிக்கும் படங்களில் தனது குரலுககு பொருத்தமான பாடல்கள் கிடைத்தால் கண்டிப்பாக பாடி விட வேண்டும் என்ற முடிவில் இருக்கிறார். ஆக, விமலுக்குள் தூங்கிக்கொண்டிருந்த பாடகரை தட்டி எழுப்பியுள்ளார் இமான்.
கெட்டப்பை போன்று குரலையும் மாற்றிப்பேசும் சீயான் விக்ரம்!

இப்படி அவர் நடித்துள்ள ஒவ்வொரு கெட்டப்புக்காகவும் மாதக்கணக்கில் பயிற்சி எடுத்து நடித்தவர், கடைசியாக நடித்த ஒல்லிகுச்சி வேடத்துக்காகத்தான் ரொம்ப சிரத்தை எடுத்திருக்கிறார். முகமும், உடம்பும் மெலிந்து போய் ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு உருமாற்றிக்கொண்டு நடித்துள்ளார்.
ஒருவழியாக படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போது டப்பிங் பணிகளும் நடந்து கொண்டிருக்கிறது. இதில் ஒவ்வொரு கெட்டப்புக்காகவும் ஒவ்வொரு விதமாக தனது குரலை மாற்றி பேசுகிறாராம் விக்ரம். சினிமாவில் ஹீரோவாக வெற்றி பெறுவதற்கு முன்பு பல நடிகர்களுக்கு டப்பிங் பேசி வந்தவர் விக்ரம் என்பதால், அவரிடம் மிமிக்ரி கலைஞர்களைப்போன்று ஒன்றுக்கு மேற்பட்ட பல குரல்களில் பேசும் திறன் இருப்பதால், தனது குரலில் பலரூபங்களை காண்பித்து வருகிறாராம் சீயான்.
அஜீத்துடன் நடிக்க கெளதம்மேனனை துரத்தும் சமந்தா!

தற்போது தமிழில் விஜய், சூர்யாவுடன் நடிப்பதால், அஜீத்துடன் நடிப்பதற்கான வாய்ப்பு தானாக தேடிவரும் என்று காத்திருந்தாராம் சமந்தா. ஆனால், கெளதம்மேனன் இயக்கத்தில் அஜீத் நடிக்கவிருக்கும் படத்திற்கு அனுஷ்காவை முதலில் ஓ.கே செய்த கெளதம், அவர் முன்பை விட முதிர்ச்சியாக இருப்பதாக சொல்லி இப்போது வேறு நடிகை தேடும் படலத்தில் இறங்கியிருக்கிறார்.
அதனால் . இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொள்வோம் என்று கெளதம்மேனனை சந்திக்க அப்பாயிண்ட்மென்ட் கேட்டு வருகிறாராம் சமந்தா. ஆனால், அவர் தன்னை இந்த நேரத்தில் எதற்காக சந்திப்பார் என்பதை யூகித்துக்கொண்ட கெளதம்மேனன், பிடிகொடுக்காமல் எஸ்கேப்பாகி வருகிறாராம். இருப்பினும் விடாமல் துரத்தும் சமந்தா, அவரது செல்போனுக்கு மெசேஜ் அனுப்பிக்கொண்டேயிருக்கிறாராம்.இதுபற்றி விசாரிக்கையில், நீதானே என் பொன்வசந்தம் தோல்வியடைந்ததால், அந்த செண்டிமென்ட் கருத்தில் கொண்டு, சமந்தாவை சந்திக்க மறுக்கும் கெளதம், வேறு ஒரு நடிகையை அப்படத்துக்கு புக் பண்ணிய பிறகுதான் சமந்தாவை சந்திக்க வேண்டும் என்ற முடிவில் இருப்பதாக அவரது வட்டாரத்தகவல் தெரிவிக்கிறது.
குத்துப்பாட்டு நடிகராகும் இசையமைப்பாளர் அனிருத்!

அவர்களைத் தொடர்ந்து கொலவெறி புகழ் அனிருத், பாடல் காட்சிகளில் தோன்றி அதிரடி ஆட்டம் போட்டு வருகிறார். ஏற்கனவே தான் இசையமைத்த வணக்கம் சென்னை படத்தில் ஒரு பாடலுக்கு கலக்கல் ஆட்டம் போட்ட அனிருத், வேலையில்லா பட்டதாரி படத்தில் தனுஷ், சிவகார்த்திகேயனுடன் இணைந்து ஒரு பாடலில் நடனமாடியுள்ளார்.
அதன்பிறகு இப்போது மான்கராத்தே படத்திலும் ஒரு பாடலுக்கு சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிரடி ஆட்டம் போட்டிருக்கிறாராம். குறிப்பாக, சிவகார்த்திகேயன் மாதிரியே ஹேர் ஸ்டைல் மறறும் கலர்புல்லான காஸ்டியூம் அணிந்து இந்த பாடலில் நடனமாடியுள்ள அனிருத், தனது மூவ்மெண்டும் பேசப்பட வேண்டும் என்பதற்காக, முன்கூட்டியே நடன மாஸ்டரை அழைத்து முறையாக பயிற்சி எடுத்தாராம். அதனால், ஸ்பாட்டில் சிவகார்த்திகேயனுடன் ஆடும்போது அவருக்கு இணையாக தானும் ரவுண்டு கட்டினாராம் அனிருத்.
இப்படி தொடர்ச்சியாக குத்துப்பாடல்களில் கவனத்தை திருப்பியிருக்கும் அனிருத், அடுத்தபடியாக, விஜய், அஜீத்தின் புதிய படங்களுக்கும இசையமைப்பவர், அந்த படங்களிலும் தலா ஒரு பாடலில் தான் நடனமாடி விட வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட இயக்குனர்களிடம் இப்போதே காது கடித்து வருகிறார்.
தீராத இருமலைப் போக்கும் கைமருந்து

பலாச்சுளையை தேனில் நனைத்துச் சாப்பிட்டால், இருமல் போய்விடும். இரண்டு சிட்டிகை சித்தரத்தைப் பொடி, கொஞ்சம் கல்கண்டு பொடி, 1 ஸ்பூன் நெய், மூன்றையும் குழைத்துச் சாப்பிட, வறட்டு இருமலுக்கு மிகவும் நல்லது. வெந்நீரில் தேன் கலந்து குடித்தால், ஜலதோஷம், இளைப்பு, நுரையீரலில் உள்ள சளி நீங்கி விடும். வால்மிளகு-10, அதிமதுரம் 2 செ.மீ, சித்தரத்தை 2 செமீ, திப்பிலி, துளசி இலை 15 போட்டு அவித்து சாறு எடுத்துக் கொண்டு பனங்கற்கண்டுடன் ஒரு நாளைக்கு மூன்று வேளை வீதம் அருந்தவும். இருமலுக்கு மிகவும் நல்லது. மூன்று சொட்டு இஞ்சிச்சாறுடன் தேன் கலந்து சிறு குழந்தைகளுக்குப் புகட்டினால் கக்குவான் இருமல் நிற்கும்.
தாங்க முடியாத அடுக்கு இருமலுக்கு முருங்கைக் கீரையை உப்பு சேர்த்து உள்ளங் கையில் கசக்கவும். சிறிது சுண்ணாம்பு சேர்த்து தொண்டையில் தடவினால் இருமல் குறையும். அரிசித்திப்பிலியை கடாயில் போட்டு வறுத்துப் பொடி செய்து வைக்கவும். சதா இருமும் குழந்தைகள், பெரியவர்கள் யாரும் இதை உட்கொள்ளலாம். ஒரு டீ ஸ்பூன் பொடியில் சிறிது தேன் விட்டுக் குழைத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
இதை, காம்பு நீக்கிய வெற்றிலையின் நடுவில் அரை ஸ்பூன் வைத்து, வாயில் போட்டு வெற்றிலைச் சாறுடன் சேர்த்து சிறிது சிறிதாக சிறிது நேரம் வாயில் அடக்கிக் கொண்டு சாப்பிட்டால் இருமல் குறையும். துளசிச் சாறையும் கல்கண்டையும் கலந்து சர்பத் போலக் காய்ச்சி வைத்துக் கொள்ளுங்கள். வயதுக்குத் தகுந்தபடி இத் துளசிசர்ப்பத்தை சிறிதளவு எடுத்து 2 அல்லது 3 தடவைகள் சாப்பிட இருமல் குணமாகும்.
வறட்டு இருமலால் அவதிப்படுவோர் அதிமதுர வேரினை அவ்வப்போது 1 துண்டு வாயிலிட்டு சுவைத்து வருவது நல்லது. கண்டங்கத்திரி, தூதுவளை, ஆடாதொடை, துளசி இவைகளின் இலை வகைக்கு 1 படி, சித்தரத்தை 1 துண்டு, இஞ்சி 1 துண்டு சேர்த்து இடித்துப் பிழிந்த சாறு 10 முதல் 20 துளி வரையில் வெண்ணையில் கலந்து காலை, மாலை கொடுத்து வர ஓயாத இருமல் நீங்கும். கபக்கட்டு, சிறுபிள்ளைகளுக்குக் காணும் கணைச்சூடு விலகும்.
சளித்தொல்லையை போக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் துளசி

துளசி செடியை நன்கு நறுக்கி சிறிது மிளகுடன் கலந்து கசாயம் போட்டு காலை, இரவு குடித்துவந்தால் குளிர்காய்ச்சல், கோழை, இருமல், தொண்டை வறட்சி நீங்குகிறது. பசுமையான இலையை ஒரு டம்ளர் தண்ணீரில் ஊறப்போட்டு சில மணிநேரம் கழித்து அந்த தண்ணீரை குடித்துவர நாட்பட்ட வாயு, வயிற்று உப்பிசம் நீங்குகிறது. துளசி இலைச்சாறை 2-3 துளிகள் காதுக்குள் விட்டால் காதுவலி குறைகிறது. துளசி இலைச்சாறு சக்தி மிக்க கிருமி நாசினியாகவும், ரத்தத்தை சுத்தம் செய்து நோய் எதிர்ப்பு சக்தியை பெருக்கும் மருந்தாகவும் செயல்படுகிறது. காற்றை சுத்தப்படுத்தி, சுவாசத்தை சீராக்கி சளித்தொல்லையை போக்கும். தினசரி 4 துளசி இலையை பறித்து சாப்பிட்டால் அதன்பலன் தெரியும். கிராமங்களில் இருப்பவர்கள் சளிப்பிடித்தாலோ, மூக்கு ஒழுகினாலோ துளசி இலையின் சாற்றை கொடுப்பார்கள்.
வீட்டில் ஒரு துளசி செடி வளர்த்து தினசரி அதன் இலையை உண்டு வந்தால் சளித்தொல்லையே வராது. காய்ச்சலுடன் கூடிய ஆஸ்துமா நோய்க்கு துளசியை வீரியப்படுத்தி ஹோமியோபதி மருந்தாக பயன்படுத்தப்படுகிறது. துளசி சாறு தொண்டை பகுதியிலுள்ள நோய் கிருமிகளை முற்றிலும் அழிக்கும். தோல் அரிப்பு, சொறி, சிரங்கு உள்ளவர்கள் இதன் சாற்றை பூசி வந்தால் விரைவில் குணம் தெரியும். படர்தாமரைக்கும் இச்சாற்றை பயன்படுத்தலாம். இதன் இலை மற்றும் குச்சிகளை கொண்டு புகை போட்டால் கொசுக்கள் வராது. கருந்துளசி இன்னும் அதிக பலன் தருகிறது. வயிற்றில் குழந்தை இறந்து விட்டால் அதை உடனடியாக வெளியேற்றிவிட வேண்டும். இல்லையேல் தாயின் உயிருக்கு மோசம் ஏற்படும். இதற்கு கருந்துளசி நன்கு பயன்படுகிறது. ஒன்பது கருந்துளசி இலையை மென்று தின்று விட்டு ஒரு மூடி முற்றின தேங்காயை உடைத்து அதை மெதுவாக மென்று உண்டால் தேள் விஷம் முறியும்.
கருந்துளசி இலையை சுத்தம் செய்து சாறு பிளிந்து குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் அஜீரணம், வயிற்று போக்கு குணமாகும். ஜீரணக்கோளாறுகள், காய்ச்சல், இருமல், ஈரல் சம்பந்தமான நோய்கள், காதுவலி, ஆகியவற்றிற்கு துளசி சிறந்த மருந்தாகும். இரத்தத்திலுள்ள விஷத்தன்மையை வெளியேற்றி சுத்தம் செய்கிறது. இப்படி துளசி நம் அன்றாட வாழ்க்கைக்கு அவசியம் தேவை. கருந்துளசி பெரும்பாலும் வீடுகள், தோட்டங்களில் வளர்க்கப்படுகின்றன. வெள்ளை துளசி தரிசு நிலங்கள், வயல் ஓரங்களில் தானாக வளரும். விதைகளை தூவியும் வளர்க்கலாம்.
ஆஸ்துமா, கேன்சர் அண்டாது
ஈஸ்னோபிலியாவும், ஆஸ்துமாவும் வெவ்வேறு காரணங்களால் வரும் நோய்கள் என்றாலும் இரண்டும் சகோதர நோய்கள் என அழைக்கப்படுகிறது. இப்போது இந்நோய்கள் அநேகரிடம் காணப்படுகிறது. இதற்கு துளசி பெரிய நிவாரணி. துளசி கசாயத்தில் மிளகு சேர்த்து குடித்தால் முற்றிலும் குணமாகும். தொடர்ந்து குடித்து வந்தால் இந்த இரு நோய்களும் அண்டாது. தினமும் 20 துளசி இலையை உண்டு தண்ணீர் குடித்தால் ஆரம்பநிலையில் உள்ள புற்று நோய் குணமாகும்.இதேபோன்றுதினமும் காலை மாலை இருவேளை ஒரு கப் தயிருடன் 20 துளசி இலையை உண்டுவந்தால் கேன்சர் குணமாகும். தினமும் ஒரு துளசி இலை சாப்பிட்டால் புற்றுநோய் அண்டாது என்ற ஒரு பழமொழியே உண்டு.
உடல் சூட்டை குறைக்கும்
துளசி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் சூட்டுக்கு எதிராக வேலை செய்யும். இதனால் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் என்ற தவறான கருத்து உள்ளது. துளசி குளிர்ச்சியை ஏற்படுத்தி தேவையற்ற வேட்கையை குறைக்குமே தவிர மோசமான பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதில்லை.
எய்ட்ஸ் குணமாகும்
உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அழிக்கும் கிருமி தான் எய்ட்ஸ் நோய்க்கு காரணம். எனவே நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிப்பதன் மூலம் எய்ட்ஸ் நோயை குணப்படுத்த முடியும் என்பது இயற்கை மருத்துவ கருத்து. அதிக சக்தியான நோய்கிருமிகளையும் அழிக்கும் சக்தி துளசிக்கு இருப்பதால் துளசி இலை எய்ட்ஸ் நோய்க்கு சிறந்த மருந்து. எய்ட்ஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்கு 5 வகையான துளசிகள் பயிரிடப்படுகின்றன. மணிப்பூரில் சாஜிவா ஜெயிலில் உள்ள கைதிகளில் 750க்கும் மேற்பட்டவர்களுக்கு எய்ட்ஸ் நோய் தாக்கியது கண்டறியப்பட்டபோது துளசி இலை மற்றும் அக்குபிரஷர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் நல்ல பலன் கிடைத்ததாக சிறைஅதிகாரி பாண்டகர் தெரிவித்துள்ளார்.
அமலா பாலின்கனவு பலிக்குமா?

சிம்பு-ஹன்சிகாவுக்கு தோரணம் கட்ட தயாராகும் ரசிகர்கள்!

இதனால் அஜீத்-ஷாலினியைப்போன்று சிம்பு-ஹன்சிகா ஜோடியை கொண்டாடி வந்தவர்கள், ட்ராக் மாறிடுமோ என்று சிலகாலம் தடுமாறி நின்றனர்.
ஆனால், நயன்தாரா வெறும் தோழிதான். ஹன்சிகாதான் இனி நிரந்தர காதலி என்று சிம்பு ஸ்டேட்மெண்ட் விட்டதையடுத்து இப்போது அவரது ரசிகர்களுக்கான குழப்பம் நீங்கி விட்டது. அதனால், சிம்பு-ஹன்சிகா முதன்முதலாக ஜோடி சேர்ந்துள்ள வாலு படத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள் சிம்புவின் ரசிகர்கள்.
அப்படம் வெளியாகும்போது, இதுவரை சிம்பு படத்திற்கு இல்லாத அளவுக்கு பெரும் பப்ளிசிட்டிகளை முடுக்கி விட திட்டமிட்டுள்ளனர்.
குறிப்பாக, விஜய்-அஜீத் படங்கள் வெளியாகும் நாளன்று எப்படி, பாலாபிஷேகம், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று அமர்க்களப்படுத்துவர்களோ அந்த அளவுக்கு சிம்பு-ஹன்சிகாவின் கட்அவுட்களுக்கு அபிஷேகம், தோரணம் என்று பரபரப்பு கூட்ட இப்போதே தயார்நிலையில் இருக்கிறார்கள் சிமபுவின் ரசிக கோடிகள்.
28ந் தேதி 13 படங்கள் ரிலீஸ்!

தமிழ்நாட்டில் சுமார் 1200 தியேட்டர்கள் உள்ளன. இவற்றில் ரிலீஸ் படங்களை திரையிடும் தியேட்டர்கள் சுமார் 800 இதில் வல்லினம் மட்டும் 400 தியேட்டர்களில் ரிலீசாகிறது. இதுபோக மீதமுள்ள 400 தியேட்டர்களைத்தான் மற்ற படங்கள் திரையிடப்படுகிறது.
தமிழ் தெரியாது என்பதால் காஜலை நிராகரிக்கும் கோடம்பாக்கம்!

இது கதிர்வேலன் காதல் படத்தை அடுத்து, உதயநிதி நடிக்கும் நண்பேன்டா படத்தில் முதலில் கமிட்டாகியிருந்த காஜலை, பின்னர் கழட்டி விட்டதும் இந்த பிரச்னைக்காகத்தானாம். இதையடுத்து, தன்னை கோடம்பாக்கம் நிராகரிப்பதின் காரணத்தை தெரிந்து கொண்ட காஜல், அடுத்து தமிழ்நாட்டுக்குள் வரும்போது, தனக்குத் தெரிந்த ஒன்றிரண்டு தமிழ் வார்த்தைகளை கடித்து துப்பியாவது, தனக்கும் தமிழ் தெரியும் என்பதை நிரூபிக்க முடிவு செய்திருக்கிறாராம்.
விஜய், பாலா படங்கள் கைமீறிப் போனதால் அதிர்ச்சியில் ஜி.வி.பிரகாஷ்குமார்!

இதனால், பலத்த அதிர்ச்சியடைந்திருக்கும் ஜி.வி.பிரகாஷ், இன்னும் சிறிது காலம் நடிப்பிலேயே சென்று கொண்டிருந்தால், எஞ்சியுள்ள இயக்குனர்களும் தன்னை தண்ணி தெளித்து விடுவார்கள் என்பதை புரிந்து கொண்ட அவர், பென்சில் படத்தின் ரிலீசுக்குப்பிறகு நடிப்பா? இசையா? என்று திட்டவட்ட முடிவெடுக்க உள்ளாராம்.
சிவகார்த்திகேயனுடன் நடிக்க அதிக சம்பளம் கேட்கும் முன்னணி நடிகைகள்!

அதனால், இப்போது விரலுக்கேற்ற வீக்கமாய், வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்த ஸ்ரீதிவ்யாவிடம் பேசியுள்ளார்களாம். மீண்டும் சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் வாய்ப்பு என்றதும், சம்பளத்தைப்பற்றி வார்த்தை பேசாமல் அக்ரிமென்டில் சைன் பண்ண துடித்துக்கொண்டிருக்கிறாராம் நடிகை. சம்பளம் எவ்வளவு வேண்டும் என்று கேட்டதற்கு, நீங்களா பார்த்து என்ன கொடுத்தாலும் வாங்கிக்கொள்கிறேன் என்று கூறி விட்டாராம் நடிகை. இது போதாதா நம்ம ஆட்களுக்கு, இனி ஸ்ரீதிவ்யா போன்ற நடிகைகள்தான் நம்ம கம்பெனி ஆர்ட்டிஸ்ட் என்று தனுஷ்தரப்பு அம்மணியை மொத்த குத்தகை எடுத்து விட்டார்களாம்.
காக்காக்களுக்கு பயிற்சி கொடுக்கிறார் பி.வாசு!

மேலும், தற்போது இந்த படத்தில் ஐஸ்வர்யாராய் நடிப்பது உண்மை என்று திட்டவட்டமாக கூறி வரும் பி.வாசு. முதலில் என் படத்தில் நடிப்பதா? இல்லை மணிரத்னம் படத்தில் நடிப்பதா? என ஐஸ்வர்யாராய் குழப்பத்தில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.இதற்கிடையே, தனது அனிமேஷன் படத்தில் ஐஸ்வர்யாராயுடன் இணைந்து சில காக்காக்களும் முக்கிய வேடத்தில் நடிக்கின்றன. அதனால், குறிப்பிடத்தக்க சில காக்காக்களுக்கு மட்டும் பயிற்சி கொடுக்க பிரான்ஸ் நாட்டில் இருந்து பயிற்சியாளர்கள் வரவிருக்கிறார்கள். அவர்கள் மூலம் அந்த காக்காக்களுக்கு 3 மாதங்கள் சிறப்பு பயிற்சி கொடுக்கப்போகிறோம் என்று தெரிவித்துள்ளார் அவர்.
சமுத்திரகனி வைத்திருக்கிற நம்பிக்கையை காப்பாற்றப் போகிறாராம் அமலாபால்!

நிமிர்ந்துநில் படத்தில் என்னை சவாலான காட்சிகளில் நடிக்க வைத்த அவர், அப்படத்தில் நான் நடித்துக்கொண்டிருக்கும்போதே, என்னை மனதில் கொண்டு இந்த கதையை எழுதியிருக்கிறார். அந்த அளவுக்கு எனது நடிப்பு அவரை பாதித்திருக்கிறது. அதனால் என்னை நம்பி இந்த வாய்ப்பு அவர் கொடுத்திருப்பதால், இதுவரை நடிக்காத அளவுக்கு நடிப்பில் பெரிய அளவில் ஸ்கோர் பண்ணி சமுத்திரகனி என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை காப்பாற்றப்போகிறேன் என்கிறார் அமலாபால்.
மீண்டும் இணையும் ’முள்ளும் மலரும்’ மகேந்திரன் - இளையராஜா!

20கிலோ எடையை அதிகரிக்க ஒன்றரை கோடி செலவு செய்த நடிகர்!

சிவகார்த்திகேயன் படங்களில் தொடரும் சென்டிமென்ட்

ஏ.ஆர்.ரகுமான் மலேசியா வருகை : தமிழர்கள் வருத்தம்?

ஷகீலாவாக தலைகாட்டும் அஞ்சலி?

ஐதராபாத் ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் விஜய், ஏ.ஆர்.முருகதாஸ் படத்தின் படப்பிடிப்பு

ராஜீவ் கொலையாளிகள் விடுதலை: "தமிழக அரசின் முடிவுக்கு தமிழ்த் திரையுலகம் ஆதரவு'
