
இன்னும் சிலர் காதலித்து அதை முறித்துக்கொண்டு மீண்டும் நடித்துக்கொண்டிருக்கின்றனர். ஆனால். த்ரிஷா காதல் கிசுகிசுக்களில் சிக்கினாலும் நடிப்புக்கு எந்த இடையூறும் ஏற்படாத வகையில் களத்தில் நின்று கொண்டிருக்கிறார்.
இதற்கிடையே, தெலுங்கு நடிகர் ராணாவுடன் புகைந்த காதல் செய்தியைத் தொடர்ந்து, த்ரிஷாவுக்கு அவரது தாய்குலம் தீவிரமாக மாப்பிள்ளை தேடி வருவதாக கடந்த ஒரு வருடமாகவே செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
ஆனால், இதுபற்றி த்ரிஷா செய்தி வெளியிடுவார் என்று பார்த்தால், அவர் அடுத்தடுத்து நடிக்கவிருக்கும் புதிய படங்கள் பற்றிய செய்திகள்தான் வந்து கொண்டிருக்கின்றன. திருமண செய்திகள் வெளிவந்தபாடில்லை.
ஆனால், தற்போது த்ரிஷா வெளியிட்டுள்ள ஒரு செய்தியில், காதல், திருமணம் இதெல்லாம் நாமாக முடிவு செய்ய முடியாது. எப்போது நடக்குமோ அப்போது அதுவாக நடக்கும். நானும் அந்த நாளை எதிர்பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்.
அதனால் நேரம் கைகூடி வரும்போது அந்த மகிழ்ச்சியான செய்தியை நானே அறிவிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment