பெண் சிசு கருக்கலைப்பு தடுக்க அதிரடி டாக்டர்கள் மட்டுமே ஸ்கேன் செய்யலாம்

நாகர்கோவில் : பெண் சிசு கருக்கலைப்புகளை  தடுக்க ஸ்கேனிங் பரிசோதனையில் புதிய கட்டுப்பாடுகளை கொண்டு வர இந்திய மெடிக்கல் கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம்  அறிவுறுத்தியது.இந்நிலையில் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் பரிசோதனைகளை இனி டாக்டர்கள் மட்டும் நடத்த வேண்டும்என்று மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.பணியில் உள்ள எம்பிபிஎஸ் டாக்டர்கள் 2017க்கு முன்னர் 6 மாத அல்ட்ரா சோனோகிராபி கோர்ஸ் முடிக்க வேண்டும். ஆயுர்வேதம், ஹோமியோபதி ஆகியவற்றில் பட்டம் பெற்ற டாக்டர்கள் ஸ்கேனிங் செய்ய அனுமதியில்லை.உரிய அனுமதி இல்லாதவர்கள் ஸ்கேனிங் செய்வது சட்ட விரோதம் என்றும், இது மூன்று ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் வரை அபராதமும் விதிக்கப்பட வேண்டிய குற்றம் ஆகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 19ம் தேதி புதிய உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. பயிற்சி பெற்ற டாக்டர்கள் சேவை செய்கின்ற லேபுகளுக்கு மட்டுமே இனி லைசென்சு வழங்கப்படும். தற்போதுள்ள நிறுவனங்கள் தகுதி அடிப்படையில் 2017க்கு முன்னதாக லைசென்சு பெற விண்ணப்பிக்க வேண்டும்.சட்டத்திற்கு புறம்பாக செயல்படுகின்ற தனியார் லேபுகள் மீது மாவட்ட மருத்துவ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவில் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment