கடலூரில் ராட்சத அலை பாறையில் மோதி படகு சேதம்

கடலூர் : கடலூர் துறைமுகம் சிங்காரத்தோப்பு மீனவர் கிராமத்தை சேர்ந்தவர்கள் சிவகுமார் (40), பாண்டியன் (38), ரவி (28). இவர்கள் உள்பட 5 பேர் இழுவலை படகில் நேற்று முன்தினம் மாலை கடலுக்குள் மீன் பிடிக்க சென்றனர். நேற்று அதிகாலை 4 மணிஅளவில் துறைமுகம் நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். அமாவாசை தினம் என்பதால் கடலில் அலைகளின் சீற்றம் மிக அதிகமாக காணப்பட்டது. அப்போது லேசான பனிமூட்டமும் இருந்தது.
இதனால் முகத்துவார பகுதி மணலில் படகு சிக்கிக்கொண்டது. படகை மீட்க மீனவர்கள் போராடினர். அப்போது ராட்சத அலைகள் வந்தது. அதில் அதிக வேகத்தில் இழுத்துச் செல்லப்பட்ட படகு, கருங்கல் பாறைகளின் மீது பயங்கர சத்தத்துடன் மோதியது. உடனே, ஆபத்தை உணர்ந்த 5 பேரும் படகில் இருந்து குதித்து உயிர் தப்பினர். அதே நேரத்தில், பாறையில் மோதிய வேகத்தில் படகு உடைந்து நொறுங்கியது. படகில் இருந்த 10 ஆயிரம் மதிப்புள்ள மீன்கள், னீ3 லட்சம் மதிப்புள்ள வலைகள் கடலில் அடித்துச் செல்லப்பட்டன.  மீனவர்கள் போராடி கரை சேர்ந்தனர்.உயிர் தப்பிய மீனவர்கள் கூறுகையில், படகையும் சேர்த்து னீ10 லட்சம் மதிப்பில் இழப்பு ஏற்பட்டுள்ளது. நாங்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினோம் என்றனர்.

No comments:

Post a Comment