யுவராஜ் அதிரடியில் பஞ்சாப் அபார வெற்றி

புதுடெல்லி: விஜய் ஹசாரே கோப்பைக்கான வடக்கு மண்டல கிரிக்கெட் போட்டியில், பஞ்சாப் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.டெல்லி, பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாசில் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீசியது. டெல்லி அணி கேப்டன் கவுதம் கம்பீர் 8, உன்முக்த் சந்த் 0, அதிரடி வீரர் சேவக் 10, பாட்டியா, மிலிந்த் தலா 8 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.பிஷ்ட், வருண் சூட் தலா 28, சுமித் நார்வால் 18 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். மிதுன் மன்ஹாஸ் அதிகபட்சமாக 98 ரன் எடுத்தார் (115 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்). டெல்லி அணி 49.1 ஓவரில் 228 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. பஞ்சாப் பந்துவீச்சில் சித்தார்த் கவுல் 4, ஹர்பஜன், தாருவார் தலா 2, சந்தீப் ஷர்மா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி 47 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 232 ரன் எடுத்து வென்றது. மனன் வோரா 15, ஜீவன்ஜோத் 0, கிதான்ஷ் கேரா 33, மன்தீப் சிங் 16 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். யுவராஜ் சிங் 96 ரன் (95 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்), குர்கீரத் சிங் 53 ரன் (64 பந்து, 4 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆட்டமிழக்காமல் வெற்றியை உறுதி செய்தனர். பஞ்சாப் அணி 4 புள்ளிகள் பெற்றது.u கிழக்கு மண்டல பிரிவில் அசாம் - ஒடிசா அணிகளிடையே ராஞ்சியில் நடந்த போட்டியில் அசாம் 16.5 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 128 ரன் எடுத்த நிலையில் மழை காரணமாக ஆட்டம் கைவிடப்பட்டது. ஜார்க்கண்ட் - திரிபுரா அணிகள் மோதவிருந்த போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கனமழையால் ரத்தானது. வடக்கு மண்டல பிரிவில் அரியானா - இமாச்சல் அணிகளிடையே டெல்லியில் நடக்கவிருந்த போட்டியும் கைவிடப்பட்டது.

No comments:

Post a Comment