பிளஸ் 2 தேர்வு மையங்களில் கெடுபிடி : முறைகேடுகளை தவிர்க்க நடவடிக்கை

கடலூர் : மாவட்டத்தில் நேற்று துவங்கிய பிளஸ் 2 பொதுத் தேர்வில் முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, கடும் சோதனைக்கு பிறகே மாணவர்கள் தேர்வு மையங்களில் அனுமதிக்கப்பட்டனர். பல மையங்களில் பறக்கும் படை நிலைக்குழுவினர் கண்காணித்
தனர்.
தமிழகத்தில், பள்ளிக் கல்வித் துறை சார்பில், பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வு நேற்று, துவங்கியது. வரும் 25ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது. தேர்வின் போது, முறைகேடுகளைத் தவிர்க்கும் பொருட்டு, முன் எப்போதும் இல்லாத அளவிற்கு பள்ளிக் கல்வித்துறை விரிவான ஏற்பாடுகளை செய்திருந்தது.
கடலூர் மற்றும் விருத்தாசலம் என இரண்டு கல்வி மாவட்டங்களைச் சேர்ந்த 187 மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 29 ஆயிரத்து 196 மாணவ, மாணவிகள் தேர்வு எழுதினர்.
இதற்காக கடலூர் கல்வி மாவட்டத்தில், 49 மையங்களும், விருத்தாசலம் கல்வி மாவட்டத்தில் 27 மையங்களும் அமைக்கப்பட்டிருந்தன.
கடுமையான சோதனைக்குப் பிறகே மாணவர்கள், மையங்களுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தேர்வுப் பணியில் முதன்மைக் கண்காணிப்பாளர்களாக 76 பேர், துறை அலுவலர்களாக 76, அறை கண்காணிப்பாளர்களாக 1,500, பறக்கும் படை அதிகாரிகளாக ஒரு குழுவுக்கு 2 பேர் வீதம் 82 குழுக் களுக்கு அதிகாரிகளைச் சேர்த்து 180, அலுவலக பணியாளர்களாக 160 பேர் ஈடுபட்டிருந்தனர்.கடலூர் மாவட்டத்திற்கு, தேர்வுப் பணி மேற்பார்வையாளராக நியமிக்கப்பட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர் பூஜா குல்கர்னி, கலெக்டர் கிர்லோஷ்குமார், முதன்மைக் கல்வி அதிகாரி ஜோசப் அந்தோணிராஜ் உட்பட கல்வித் துறை அதிகாரிகள் தேர்வு மையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
சிதம்பரம்: சிதம்பரம் நகரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு நந்தனார் ஆண்கள் மற்றும் பெண்கள் பள்ளி, ராமசாமி செட்டியார் பள்ளி, வீனஸ் மெட்ரிக், காமராஜ் மெட்ரிக், நிர்மலா மெட்ரிக் பள்ளி ஆகிய மையங்களில் தேர்வு நடந்தது. 14 மேல்நிலைப் பள்ளி, கிள்ளை மற்றும் வல்லத்துரை மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 1,399 மாணவர்கள், 1513 மாணவிகள் தேர்வு எழுதினர். 34 ஆசிரியர்கள் கொண்ட 17 பறக்கும் படையினர் தேர்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டனர்.

No comments:

Post a Comment