
இப்படத்தில் பணிபுரியும் டெக்னீஷியன்களைப்பற்றிய தகவலை சமீபத்தில் வெளியிட்டவர்கள், படத்தில் கமலுடன் நடிக்கப்போகும் கதாநாயகன் பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை.
அதனால் கமலுடன் 3 கதாநாயகிகள் நடிப்பதாக சொன்னார்களே. ஒருவர் பெயர்கூட படத்தின் அறிவிப்பில் இடம்பெறாமல் சஸ்பென்ஸ் வைத்து விட்டார்களே என்று மீடியாக்கள் புலனாய்வு செய்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், தற்போது அந்த மூன்று நாயகிகள் ஒருவர் பெயர் மட்டும் வெளியில் கசிந்துள்ளது. அவர், ஏற்கனவே தமிழில் பூ, மரியான் படங்களில் நடித்த பார்வதி. இவர் தமிழில் நடித்த இரண்டு படங்களிலுமே அருமையாக நடித்திருந்தார். ஆனபோதும், அவருக்கு கோடம்பாக்கத்தில் சரியான படவாயப்புகள் இல்லை.
அதன்காரணமாக மரியானுக்கு பிறகு தனது தாய்மொழியான மலையாள சினிமாவில் சில படங்களில் நடித்தவர் இப்போது பெங்களூர் டேட்ஸ் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், கமலுடன் நடிக்கும் வாய்ப்பு என்றதும் புதிய மலையாள படங்களை ஒத்துக்கொள்ளாமல் உடனடியாக உத்தமவில்லனுக்கு கால்சீட் கொடுத்து விட்டாராம். இப்படத்தில் மற்ற கதாநாயகிகளை விட பார்வதிக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
No comments:
Post a Comment