
சென்னை : சென்னையில் இருந்து நேற்று அதிகாலை 3 மணிக்கு பாங்காக் செல்லும் ஏர் ஏசியா விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் பயணம் செய்ய வந்த பயணிகளை சுங்க அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த சலீம் சையது மீரான் (34) என்பவர் சுற்றுலா பயணியாக செல்ல வந்தார். அதிகாரிகளின் சோதனையின்போது, சலீம் சையது மீரான் வைத்திருந்த பையில் அசைவு தெரிந்தது. இதையடுத்து அவரது பையை திறந்து பார்த்தபோது, அதற்குள் 18 நட்சத்திர ஆமைகள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து அவரை கைது செய்து ஆமைகளை அதிகாரிகள் கைப்பற்றினர். பின்னர் வேளச்சேரியில் உள்ள வனத்துறை அதிகாரிகளிடம் நட்சத்திர ஆமைகள், சலீம் சையது மீரானை ஒப்படைத்தனர். அவரிடம், தொடர்ந்து விசாரணை நடத்தப்படுகிறது.
No comments:
Post a Comment