
திடீரென்னு தன் தந்தை வயதுள்ள ஆஞ்சநேயன் என்ற தொழில் அதிபரை திருமணம் செய்து கொண்டு ஷாக் கொடுத்தார். அதன் பிறகும் தொடர்ந்த நடித்து வருகிறார். இவர் நடித்த புலிவால் சமீபத்தில் வெளிவந்தது. தற்போது அதிதி படத்தில் நந்தாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
அதோடு வருகிற ஏப்ரல் மாதம் திருவனந்தபுரத்தில் நடக்கும் மாநில வில்வித்தை போட்டியில் கலந்து கொள்ள தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
2012ம் ஆண்டு நடந்த போட்டியில் மாநில அளவில் முதல் இடத்தை பிடித்தார் அனன்யா. கேரள மாநில அணிக்காக தேசிய அளவிலும் விளையாடி இருக்கிறார்.
அடுத்த போட்டியில் கலந்து கொள்ளப்போவது பற்றி அனன்யா கூறியதாவது: "வில்வித்தையில் தேசிய அளவில் முதல் இடம் பிடிப்பது என் லட்சியம். ஐந்து வருட போராட்டத்துக்கு பிறகுதான் மாநில அளவில் சாம்பியன் ஆனேன்.
சென்ற ஆண்டு சென்னையில் தேசிய போட்டிகள் நடந்தது. அப்போது நான் ஒரு தெலுங்கு படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருந்ததால கலந்து கொள்ள முடியவில்லை. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் முழு நேரமும் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
வருகிற சம்மர்ல நடக்கிற போட்டியில் கலந்துகிட்டு நிச்சயம் ஜெயிப்பேன். ஒரு நாள் தேசிய சாம்பியன் ஆவேன். என் முயற்சிகளுக்கு என் கணவர் ஆஞ்சநேயன் முழு ஆதரவும், ஊக்கமும் தந்து வருகிறார்" என்கிறர் அனன்யா.
No comments:
Post a Comment