
முதலில் வில்லனுடன் விஜய்யை மோத விட்ட முருகதாஸ், இப்போது ரொமான்ஸ் காட்சிகளில் சமந்தாவுடன் விஜய்யை மோத விட்டு வருகிறார். ஆக இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் முடிந்து விடும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், தனது அடுத்த படத்தை செப்டம்பர் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளாராம் விஜய். சிம்புதேவன் சொன்ன ரொமான்ஸ் கலந்த காமெடி கதை ஓ.கே. வாகி விட்டதால், அவருக்கு கால்சீட்டை கொடுத்து விட்டாராம் விஜய். அப்படத்தில் விஜய்க்கு இரண்டு ஜோடிகளாம்.
அதில் ஒருவர்தான் பிரியங்கா சோப்ராவாம். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையான அவர் தமிழன் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு என்பதால் டபுள் ஓ.கே சொல்லிவிட்டாராம்.
ஆனால், இன்னொரு கதாநாயகியைத்தான் இதுவரைக்கும் முடிவு செய்யவில்லையாம். தற்போது கதை, லொகேசன் சம்பந்தப்பட்ட வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் அதை நிலுவையில் வைத்திருக்கிறார் சிம்புதேவன.ஆனபோதும், கோலிவுட்டின் சில முன்னணி நடிகைகள் அந்த வாய்ப்பை கைப்பற்ற போட்டிக்கோதாவில் இறங்கியுள்ளனர். அவர்களில் விஜய்யுடன் ஏற்கனவே நடித்த காஜல்அகர்வால், ஹன்சிகா, அமலாபால் ஆகியோர் முக்கிய இடம் பிடிக்கிறார்களாம்.
No comments:
Post a Comment