86வது ஆஸ்கர் விருதுகள் அறிவிப்பு : 7 விருதுகளை அள்ளியது கிராவிட்டி!!

NT_140303105253000000சர்வதேச அளவில் சினிமா துறையில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதுகள் ஆண்டுதோறு வழங்கப்பட்டு வருகிறது.

அதன்படி 86வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

அதில் உலகளவில் பிரமிப்பையும், பாராட்டையும் பெற்ற 3டி படமான கிராவிட்டி, சிறந்த இயக்குநர், சிறந்த இசை, சிறந்த சவுண்ட் மிக்ஸிங் உட்பட 7 ஆஸ்கர் விருதுகளை குவித்ததுள்ளது.

ஆஸ்கர் விருதுகள் விபரம்…

சிறந்த நடிகர் : டல்லஸ் பையர்ஸ் க்ளப் என்ற படத்திற்காக மாத்யூ மெக்னாக்கிக்கு கிடைத்துள்ளது.

சிறந்த நடிகை : புளூ ஜாஸ்மின் என்ற படத்திற்காக கேத்தி பிளான்செட்டுக்கு கிடைத்துள்ளது.

சிறந்த இயக்குநர் : கிராவிட்டி படத்திற்காக அல்போன்சா கவுரானுக்கு கிடைத்துள்ளது.

சிறந்த படம் : சிறந்த படத்திற்கான விருது 12 இயர்ஸ் ஸ்லேவ் -க்கு கிடைத்துள்ளது.

சிறந்த துணை நடிகர் : டல்லஸ் பையர்ஸ் க்ளப் படத்திற்காக ஜரேடு லெதோவுக்கு கிடைத்துள்ளது.

சிறந்த துணை நடிகை : 12 இயர்ஸ் ஸ்லேவ் என்ற படத்தில் நடித்ததற்காக லுபிடா நியோங்கோவுக்கு கிடைத்துள்ளது.

சிறந்த ஒளிப்பதிவு : கிராவிட்டி படத்திற்காக எம்மானுவல் லுபஸ்கிக்கு கிடைத்துள்ளது.

சிறந்த எடிட்டிங் : கிராவிட்டி படத்திற்காக அல்போன்ஸோ கோரன், மார்க் சேஞ்ஜர் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.

சிறந்த இசை : கிராவிட்டி படத்திற்காக ஸ்டீவன் பிரைஸ்க்கு கிடைத்துள்ளது.

சிறந்த சவுண்ட் எடிட்டிங்: கிராவிட்டி படத்திற்காக க்ளென் ப்ரீமான்டிலுக்கு கிடைத்துள்ளது.

சிறந்த சவுண்ட் மிக்ஸிங் : கிராவிட்டி படத்திற்காக ஸ்கிப் லெவ்சே, நிவ் அடிரி, க்றிஸ்டோபர் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.

சிறந்த விஷுவல் எபெக்ட்ஸ் : கிராவிட்டி படத்திற்காக டிம் வெப்பர், க்றிஸ் லாரன்ஸ் ஆகியோருக்கு கிடைத்துள்ளது.

சிறந்த கதை : 12 இயர்ஸ் ஸ்லேவ் சிறந்த கதைக்கான விருதை பெற்றுள்ளது.

சிறந்த திரைக்கதை : ஸ்பைக் ஜோன்ஸ் என்பவருக்கு ஹெர் என்ற படம் சிறந்த திரைக்கதைக்கான விருதை பெற்றுள்ளது.

சிறந்த குறும்படம் : ஹீலியம் சிறந்த குறும்படத்திற்கான விருதை பெற்றுள்ளது.

சிறந்த அனிமேஷன் குறும்படம் : மிஸ்டர் ஹப்லட் சிறந்த அனிமேஷன் குறும்படத்திற்கான விருதை பெற்றுள்ளது.

சிறந்த வெளிநாட்டு படம் : இத்தாலி நாட்டை சேர்ந்த தி கிரேட் பியூட்டி படத்திற்கு கிடைத்துள்ளது.

சிறந்த ஒப்பனை : டல்லஸ் பையர்ஸ் க்ளப் சிறந்த மேக்கப், ஹேர் ஸ்டைலுக்கான விருதை பெற்றுள்ளது.

சிறந்த ஆடை வடிவமைப்பாளர் : தி கிரேட் கேட்ஸ்பை படத்திற்காக கேத்ரீனி மார்டினுக்கு கிடைத்துள்ளது.

சிறந்த அனிமேஷன் படம் : ப்ரோஷன் சிறந்த அனிமேஷன் படத்திற்கான விருதை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment