உடலுக்கு உகந்ததா முந்திரி

முந்திரி, பாதாம், பிஸ்தா போன்றவைகள் கொலஸ்ட்ரால் கிடையாது. "என்னது முந்திரியில் கொலஸ்ட்ரால் கிடையாதா? ஆச்சர்யத்துடன் சிலர் கேட்பது எங்கள் காதில் விழுகிறது. கொலஸ்ட்ரால்தான் இல்லை. ஆனால், அதிகளவில் கலோரிகள் நிரம்பியுள்ளன.

நடுத்தர அளவிலான 18 முந்திரிகளில் (சுமார் ஒரு அவுன்ஸ்) 165 கலோரி சக்தியுள்ளது. 22 பாதாம் பருப்புகளில் 170 கலோரிகளும், 14 வால்நட் கொட்டைகளில் 185 கலோரிகளும் நிறைந்துள்ளன. தையமின், நியாசின், பாஸ்ப‌ரஸ், போலேட், செலினியம், காப்பர், மெக்னீஷியம், மங்கனீஸ், வைட்டமின் ஈ போன்ற ஏராளமான சத்துக்களும் இவற்றில் உள்ளன. மேலும், தாவரப் பொருட்களில் காணப்படும் ஃப்ளேவினாய்டு வகை சத்துக்களும் அதிகம் உள்ளன. இதய நாள நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கும். ரத்தத்தில், எல்.டி.எல். என்ற கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்.

பொதுவாக இந்த வகை கொட்டைப் பருப்புகளை மாமிச உணவுக்கு மாற்றாக‌ உணவுப் பட்டியலில் சேர்க்கலாம். பலவித கொட்டைப் பருப்புகளை சேர்த்து கலந்து அதில் தினமும் 75 கிராம் அளவில் சேர்த்துக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment