வீரம் படத்தை அடுத்து அஜீத் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாத இறுதியில் துவங்கும் என்று கூறப்படுகிறது.
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் ஏற்கனவே நடிப்பதாக இருந்து அது நடக்காமல் போனது. இதையடுத்து தற்போது அவர்கள் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மங்காத்தாவில் அஜீத் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வந்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே அதே லுக்கை ஆரம்பம், வீரம் ஆகிய படங்களிலும் தொடர்ந்தார்.
கௌதம் மேனன் படத்தில் அஜீத் நரைத்த முடியுடன் வராமல் கருப்பு முடியுடன் இளமையாக வருகிறாராம். அவரது ரசிகர்களும் இதைத் தான் எதிர்பார்க்கின்றனர்.
முதன் முதலாக அஜீத்தை சந்தித்து கதை சொன்ன கௌதம் மேனன் போலீஸ் அதிகாரி கதையை தெரிவித்தார். தற்போதும் அவர் அஜீத்தை போலீஸ் அதிகாரியாக தான் தனது படத்தில் நடிக்க வைக்கிறாராம். போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அஜீத் தற்போது ஜிம்மே கதி என்று இருக்கிறாராம். இந்த படத்திற்காக அவர் 8 பேக்ஸ் வைக்கிறாராம்.
ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் அஜீத் இதுவரை 7 கிலோ எடையை குறைத்துள்ளாராம். அவர் எடையைக் குறைக்க தான் படக்குழுவினர் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
அஜீத்தை வைத்து தான் இயக்கும் படத்திற்கு இசையமைக்குமாறு கௌதம் மேனன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானிடம் கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
கௌதம், அஜீத் சேரும் இந்த படத்தின் படப்பிடிப்பை 5 மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். படத்தை தீபாவளி ஸ்பெஷலாக வெளியிட நினைக்கிறார்கள்.

No comments:
Post a Comment