மாஜி காதலர்கள் சிம்பு -நயன்தாரா சேர்ந்து நடிக்கும் காட்சி படமாகிறது
மாஜி காதலர்கள் சிம்பு நயன்தாரா நடிக்கும் காட்சி நாளை படமாகிறது. சிம்பு, நயன்தாரா ஜோடி இணைந்து நடித்த படம் வல்லவன். நெருங்கி பழகிவந்த சிம்பு, நயன்தாரா காதல் ஜோடிகளாகவும் வலம் வந்தனர். இந்நிலையில் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். இதில் மனம் உடைந்த நயன்தாரா நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். சுமார் ஒரு வருட இடைவெளிக்கு பிறகே நடிக்க வந்தார். இதற்கிடையில் பிரபு தேவாவுடன் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது. பிறகு அவரிடமிருந்தும் பிரிந்தார். காதல் வாழ்க்கையை மறந்து மீண்டும் நடிப்பில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்ததுடன், கடந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்தவர் என்ற பெயரையும் தட்டிச்சென்றிருக்கிறார்.

இதற்கிடையில் பசங்க பட இயக்குனர் பாண்டிராஜ், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதில் சிம்புக்கு ஜோடியாக நடிக்க தேவதை போன்ற ஹீரோயினை தேடிவருவதாக இயக்குனர் கூறி இருந்தார். தேவதை என்றால் அது நயன்தாராதான் என சிம்பு கூறினாராம். இதையடுத்து நயன்தாராவை அணுகி சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க கேட்டார் பாண்டிராஜ். அவரும் பழைய சம்பவங்களை மறந்து நடிக்க சம்மதித்தார். இதற்காக பெரிய தொகை அவருக்கு சம்பளமாக தரப்படுகிறது. சிம்பு, நயன்தாரா நடிக்கும் காட்சி நாளை படமாகிறது. நேற்று நயன்தாரா நடித்த காட்சி மட்டும் படமானது. சிம்பு அமெரிக்காவில் இருந்து நாளை திரும்புகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
Nimirnthu Nil

The movie features Ravi is a dual role, a 24 years old young man and a 48 year old man, and is a high voltage action thriller in which the lead role will turn a revolutionist to fight for the social causes. The lead protagonist is a disciplined young man who changes his outlook towards the society after he faces certain problems. The movie also documents the lives of the main characters as they turn old in fight for their principles.
Director Samuthirakani has once again done a tremendous job as he sets a steady pace of the movie which always keeps you on the edge for the whole course of the movie. Though more is expected from talented Ravi, nevertheless he has done a decent job. The young actress Amala has also given a good account of her in the movie. The only distraction is the background score in the movie.
கோச்சடையான் மனைவிக்கு கொடுக்கும் சத்தியம்: தேன் சொட்டும் ஒரு பாட்டு

சத்தியம் சத்தியம் இது சத்தியம்
மாலை சூடிய காலைக் கதிரின் மேலே
சத்தியம் இது சத்தியம்
ஒரு குழந்தை போலே…
ஒரு வைரம் போலே…
தூய்மையான என் சத்தியம் புனிதமானது
இப் பிறவியில் இன்னொரு பெண்ணைச்
சிந்தையிலும் தொடேன்
பிறிதோர் பக்கம் மனம் சாயாப்
பிரியம் காப்பேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
சேவை செய்வேன்
நெற்றிப் பொட்டில் முத்தம் பதித்து
நித்தம் எழுவேன்
கைப்பொருள் யாவும் கரைந்தாலும்
கணக்கு கேளேன்
ஒவ்வொரு வாதம் முடியும் போதும்
உன்னிடம் தோற்பேன்
சத்தியம் இது சத்தியமே
மார்பு கொடுப்பேன்
நோய் மடியோடு நீ வீழ்ந்தால்
தாய் மடியாவேன்
அப்பா கமல் படத்தில் பின்னணி பாட ஆசைப்படும் ஸ்ருதிஹாசன்!

அந்த வகையில, சிறு வயதில் இருந்தே இசையில் அதிக ஈடுபாடு கொண்டவரான ஸ்ருதிஹாசனை, தனது உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராகவே அறிமுகம் செய்தார் கமல்.
மிகப்பெரிய என்ட்ரியை அவர் கொடுத்தபோதும் அதன்பிறகு ஸ்ருதிஹாசனுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மாறாக, நடிப்பதற்கே சான்ஸ் கிடைத்தது.
அதனால் லக் என்ற இந்தி படத்தில் நடிகையாக பிரவேசித்த அவர் தற்போது இந்திய அளவில் பேசப்படும் நடிகையாகி விட்டார். இந்த நிலையில், தனது தந்தை கமலுடன் நடிப்பதற்கு இரண்டு முறை வாய்ப்புகள் தேடிவந்தும், கால்சீட் இல்லை என்று தவிர்த்து விட்டார் ஸ்ருதி.
இருப்பினும், அப்பாவுடன் நடிக்கும் சூழ்நிலைகள் அமையாதபோதும், அவர் நடிக்கும் படத்தில் தனது பங்களிப்பை செலுத்த ஆசைப்படுகிறார் ஸ்ருதி.
அதனால் விஸ்வரூபம்-2 படத்தையடுத்து கமல் நடிக்கும் உத்தமவில்லன், த்ரிஷ்யம் ரீமேக் படங்களில் பின்னணி பாடும் வாய்ப்பு கேட்டுள்ளாராம் அவர். ஆக, சமீபத்தில் என்னமோ ஏதோ, மான்கராத்தே படங்களில பின்னணி பாடிய ஸ்ருதிஹாசன், விரைவில் கமல் படங்களிலும் பின்னணி பாடுவார் என்று தெரிகிறது.
உடலுக்கு உகந்ததா முந்திரி

நடுத்தர அளவிலான 18 முந்திரிகளில் (சுமார் ஒரு அவுன்ஸ்) 165 கலோரி சக்தியுள்ளது. 22 பாதாம் பருப்புகளில் 170 கலோரிகளும், 14 வால்நட் கொட்டைகளில் 185 கலோரிகளும் நிறைந்துள்ளன. தையமின், நியாசின், பாஸ்பரஸ், போலேட், செலினியம், காப்பர், மெக்னீஷியம், மங்கனீஸ், வைட்டமின் ஈ போன்ற ஏராளமான சத்துக்களும் இவற்றில் உள்ளன. மேலும், தாவரப் பொருட்களில் காணப்படும் ஃப்ளேவினாய்டு வகை சத்துக்களும் அதிகம் உள்ளன. இதய நாள நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கும். ரத்தத்தில், எல்.டி.எல். என்ற கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்.
பொதுவாக இந்த வகை கொட்டைப் பருப்புகளை மாமிச உணவுக்கு மாற்றாக உணவுப் பட்டியலில் சேர்க்கலாம். பலவித கொட்டைப் பருப்புகளை சேர்த்து கலந்து அதில் தினமும் 75 கிராம் அளவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கதை கேட்பதை தள்ளி வைத்த ஜி.வி.பிரகாஷ்குமார்!

ஆனால் அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதனால் அடுத்தபடியாக தன்னிடம் கதை சொல்ல சுற்றிக்கொண்டிருந்த உதவி இயக்குனர்களிடம், முதல் படமே தோற்று விட்டதால் தொடர்ந்து படம் தயாரிக்க வேண்டும் என்ற மூடே போய் விட்டது என்று அவர்களை விரட்டியடித்து விட்டார்.
இந்தநிலையில், பென்சில் படத்தில் நாயகனாக நடித்து வரும் அவரை மனதில் கொண்டு கதை பண்ணிய மேலும் சில இயக்குனர்களும் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்களாம். ஆனால், பென்சில் என்ற ஒரு படத்தில் நடிக்க வந்ததால், நான் இசையமைக்க வேண்டிய சில முன்னணி டைரக்டர்களின் படங்கள் வேறு இசையமைப்பாளர்களுக்கு திரும்பி விட்டன.
அதனால் பென்சில் படத்தின் வெற்றிக்குப்பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பது பற்றி முடிவெடுப்பேன். அதனால் அப்படி நான் மீண்டும் நடிப்பதாக இருந்தால் உங்களையெல்லாம் அழைத்து கதை கேட்கிறேன் என்று அந்த டைரக்டர்களிடம் சொல்லி விட்டார் ஜி.வி.பிரகாஷ்.
இதனால் ஜி.வி.பிரகாஷ்குமார் தொடர்ந்து படம் தயாரிப்பார், நடிப்பார் என்று அவருக்காக கதை பண்ணிக்கொண்டு மாதக்கணக்கில் காத்திருந்த இயக்குனர்கள் இப்போது அவர் தனது முடிவை வெளிப்படையாக சொல்லி விட்டதால், அதே கதைகளுடன் வேறு நடிகர்கள் பக்கம் திரும்பி விட்டனர்.
விஜய் படத்தை கைப்பற்ற போட்டிக் கோதாவில் குதித்த நடிகைகள்

முதலில் வில்லனுடன் விஜய்யை மோத விட்ட முருகதாஸ், இப்போது ரொமான்ஸ் காட்சிகளில் சமந்தாவுடன் விஜய்யை மோத விட்டு வருகிறார். ஆக இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் முடிந்து விடும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், தனது அடுத்த படத்தை செப்டம்பர் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளாராம் விஜய். சிம்புதேவன் சொன்ன ரொமான்ஸ் கலந்த காமெடி கதை ஓ.கே. வாகி விட்டதால், அவருக்கு கால்சீட்டை கொடுத்து விட்டாராம் விஜய். அப்படத்தில் விஜய்க்கு இரண்டு ஜோடிகளாம்.
அதில் ஒருவர்தான் பிரியங்கா சோப்ராவாம். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையான அவர் தமிழன் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு என்பதால் டபுள் ஓ.கே சொல்லிவிட்டாராம்.
ஆனால், இன்னொரு கதாநாயகியைத்தான் இதுவரைக்கும் முடிவு செய்யவில்லையாம். தற்போது கதை, லொகேசன் சம்பந்தப்பட்ட வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் அதை நிலுவையில் வைத்திருக்கிறார் சிம்புதேவன.ஆனபோதும், கோலிவுட்டின் சில முன்னணி நடிகைகள் அந்த வாய்ப்பை கைப்பற்ற போட்டிக்கோதாவில் இறங்கியுள்ளனர். அவர்களில் விஜய்யுடன் ஏற்கனவே நடித்த காஜல்அகர்வால், ஹன்சிகா, அமலாபால் ஆகியோர் முக்கிய இடம் பிடிக்கிறார்களாம்.
உத்தமவில்லன் கமலுக்கு ஜோடியாகும் பூ பார்வதி!

இப்படத்தில் பணிபுரியும் டெக்னீஷியன்களைப்பற்றிய தகவலை சமீபத்தில் வெளியிட்டவர்கள், படத்தில் கமலுடன் நடிக்கப்போகும் கதாநாயகன் பற்றி எந்த தகவலையும் வெளியிடவில்லை.
அதனால் கமலுடன் 3 கதாநாயகிகள் நடிப்பதாக சொன்னார்களே. ஒருவர் பெயர்கூட படத்தின் அறிவிப்பில் இடம்பெறாமல் சஸ்பென்ஸ் வைத்து விட்டார்களே என்று மீடியாக்கள் புலனாய்வு செய்து கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில், தற்போது அந்த மூன்று நாயகிகள் ஒருவர் பெயர் மட்டும் வெளியில் கசிந்துள்ளது. அவர், ஏற்கனவே தமிழில் பூ, மரியான் படங்களில் நடித்த பார்வதி. இவர் தமிழில் நடித்த இரண்டு படங்களிலுமே அருமையாக நடித்திருந்தார். ஆனபோதும், அவருக்கு கோடம்பாக்கத்தில் சரியான படவாயப்புகள் இல்லை.
அதன்காரணமாக மரியானுக்கு பிறகு தனது தாய்மொழியான மலையாள சினிமாவில் சில படங்களில் நடித்தவர் இப்போது பெங்களூர் டேட்ஸ் என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார்.
இந்நிலையில், கமலுடன் நடிக்கும் வாய்ப்பு என்றதும் புதிய மலையாள படங்களை ஒத்துக்கொள்ளாமல் உடனடியாக உத்தமவில்லனுக்கு கால்சீட் கொடுத்து விட்டாராம். இப்படத்தில் மற்ற கதாநாயகிகளை விட பார்வதிக்கு முக்கியத்துவம் வாய்ந்த வேடம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி…

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்பது ஐந்து பெண் மக்களைப் பெறுவதைக் குறிக்கவில்லையாம்..!
கீழ்கண்ட விபரப்படிக்கான ஐந்து பேரைக் கொண்டிருப்பவன், அரசனே ஆனாலும் கூட அவனது வாழ்க்கை வே அழிவை நோக்கி போகு என்பதுதான் உண்மையான அர்த்தம்…
1) ஆடம்பரமாய் வாழும் தாய்,
2) பொறுப்பில்லாமல் வாழும் தந்தை,
3) ஒழுக்கமற்ற மனைவி,
4) ஏமாற்றுவதும் துரோகமும் செய்யக்கூடிய உடன் பிறந்தோர் மற்றும்
5) சொல் பேச்சு கேளாத பிடிவாதமுடைய பிள்ளைகள் என்பதாகும்..
கௌதம் மேனனுக்காக 8 பேக்ஸ் வைக்கும் அஜீத்
கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் ஏற்கனவே நடிப்பதாக இருந்து அது நடக்காமல் போனது. இதையடுத்து தற்போது அவர்கள் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
மங்காத்தாவில் அஜீத் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வந்தார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கவே அதே லுக்கை ஆரம்பம், வீரம் ஆகிய படங்களிலும் தொடர்ந்தார்.
கௌதம் மேனன் படத்தில் அஜீத் நரைத்த முடியுடன் வராமல் கருப்பு முடியுடன் இளமையாக வருகிறாராம். அவரது ரசிகர்களும் இதைத் தான் எதிர்பார்க்கின்றனர்.
முதன் முதலாக அஜீத்தை சந்தித்து கதை சொன்ன கௌதம் மேனன் போலீஸ் அதிகாரி கதையை தெரிவித்தார். தற்போதும் அவர் அஜீத்தை போலீஸ் அதிகாரியாக தான் தனது படத்தில் நடிக்க வைக்கிறாராம். போலீஸ் அதிகாரியாக நடிக்கும் அஜீத் தற்போது ஜிம்மே கதி என்று இருக்கிறாராம். இந்த படத்திற்காக அவர் 8 பேக்ஸ் வைக்கிறாராம்.
ஜிம்மில் கடுமையாக ஒர்க் அவுட் செய்யும் அஜீத் இதுவரை 7 கிலோ எடையை குறைத்துள்ளாராம். அவர் எடையைக் குறைக்க தான் படக்குழுவினர் காத்துக் கொண்டிருக்கிறார்களாம்.
அஜீத்தை வைத்து தான் இயக்கும் படத்திற்கு இசையமைக்குமாறு கௌதம் மேனன் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானிடம் கேட்டுள்ளார் என்று கூறப்படுகிறது.
கௌதம், அஜீத் சேரும் இந்த படத்தின் படப்பிடிப்பை 5 மாதத்திற்குள் முடிக்க திட்டமிட்டுள்ளார்கள். படத்தை தீபாவளி ஸ்பெஷலாக வெளியிட நினைக்கிறார்கள்.

Anjaan story

சென்னையில் 65 இடங்களில் சில்லறை மெஷின்கள்
சென்னையில் உள்ள 65 வங்கிகளில் சில்லறை மெஷின்கள் வைக்கப்பட்டுள்ளன. 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளை செலுத்தி 1, 2, 5 ரூபாய் நாணயங்களை பெற்றுக்கொள்ளலாம். இது பயனுள்ள வகையில் இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
சென்னைவாசிகள் தினமும் சந்திக்கும் பிரச்சினைகளில் முக்கியமானது சில்லறை பிரச்சினை. சிறிய பிரச்சினை என்றாலும் ரோட்டில் கட்டிப்புரள்கிற அளவுக்கு பெரிய விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. மாநகரப் பேருந்துகளில் பயணிகளுக்கும் நடத்துநர்களுக்கும் சில்லறைச் சண்டை என்பது வாடிக்கை. முட்டை வியாபாரிகளும் இந்த இம்சையை அனுபவிக்கிறார்கள்.
சில்லறை பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நாடு முழுவதும் ‘காயின் வெண்டிங் மெஷின்களை’ ரிசர்வ் வங்கி அமைத்து வருகிறது. சென்னையில் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் வங்கி, கனரா வங்கி, ஆக்சிஸ் வங்கி உள்பட அரசு மற்றும் தனியார் வங்கிகளில் சில்லறை மெஷின் வைக்கப்பட்டுள்ளன.

சென்னையின் முக்கிய பகுதிகளான அண்ணா சாலை, கிண்டி, தி.நகர் உள்ளிட்ட இடங்களில் 65 மிஷின்கள் பயன்பாட்டுக்கு வந்துள்ளன.ரூ.1, ரூ.2, ரூ.5 நாணயங்கள் வெளியேற்ற இந்த மெஷினில் 3 துவாரங்கள் இருக்கின்றன. 10, 20, 50, 100 ரூபாய் நோட்டுகளை உள்ளே செலுத்தினால் அந்த துவாரங்கள் வழியாக சில்லறைகளை பெற்றுக்கொள்ளலாம்.
சென்னை அண்ணா சாலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் சில்லறை எடுத்துக்கொண்டிருந்த சந்திரா கூறியது: என்னிடம் 4 நூறு ரூபாய் நோட்டுகள் மட்டுமே இருக்கிறது. பேருந்தில் 5 ரூபாய் டிக்கெட்டுக்கு 100 ரூபாய் கொடுத்து நடத்துநரிடம் அர்ச்சனை வாங்க முடியாது. பெட்டிக் கடையில் சில்லறை கேட்டதற்கு, ஐஓபி வங்கிக்குள் இருப்பதாக சொன்னார். ஒரே நொடியில் 100 ரூபாய்க்கு சில்லறை கிடைத்துவிட்டது. பொதுமக்கள் பார்வையில்படும்படி மெஷினை வைத்தால் நன்றாக இருக்கும்.
அண்ணா சாலை இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் மக்கள் குறைதீர்ப்பு துணை பொது மேலாளர் சந்திரமோகன் கூறியது: வங்கிக்கு வருவோருக்கு காயின் வெண்டிங் மெஷின் பயனுள்ளதாக இருக்கிறது. நல்ல திட்டம் என்று பாராட்டுகிறார்கள்.
பேஸ்புக்யில் இருந்து கொண்டே சுட சுட செய்திகளை அறிந்துகொள்ள இப்பக்கத்தை LIKE செய்யுங்க! ! ! !
பிராய்லர் சிக்கன் சாப்பிடுவதால் ஆபத்துகள் :
பிராய்லர் கோழி தற்போது கிலோ 180rs க்கு விற்பனை செய்யப்படுவதன் நோக்கம் தெரியுமா ?
பிறந்து 55நாட்களில் கல்லீரல்,தமனி,நுரையீரல் என்று எல்லாத்தையும் இழக்கும் ஒரு செயற்கை பிராணியை தான் நாம் ஹலால் என்று முட்டாள் தனமாக உண்டு வாழ்கிறோம் ... இந்த விசயத்தில் கொஞ்சம் சிந்தியுங்கள் நண்பர்களே ...
இன்னும் சில நாட்களில் கோழி கறியினால் வரப்போகும் பிரச்சனைகளால் 120rs-இல் இருந்து 40rs நோக்கி குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் , இவர்களின் திட்டத்தின் படி 180rs என்று விலையை உயர்த்தி , பிறகு 120rs என்ற சமநிலையை கொண்டு வரும் நோக்கத்தில் தான் இப்படி செய்கின்றனர்
மேலும் இதை விரும்பி சாப்பிடும் நமக்கு எலும்புகளில் இருக்கும் சத்து முற்றிலும் அழிகிறது,,, மஞ்சள் காமாலை , இரைப்பை,, கல்லீரல் செயலிழப்பு என்று வியாதிகளின் எண்ணிக்கையை அடுக்கலாம் ... .ப்ராய்லர் கோழி மற்றும் முட்டைகளை அதிகமாக சாப்பிட்ட நாமக்கல் மக்களுக்கு இப்போது புற்று நோய் பிரச்சனை அதிகமாக பரவி வருகிறது .... அவர்கள் படும் கஷ்டங்களை கோழி பண்ணைகளின் தலைவர்களான சில அரசியல்வாதிகள் வியாபார நோக்கத்துடம் உண்மை மக்களிடம் போகாமல் பார்த்துக்கொள்கின்றனர்....
நாமக்கலின் HEALTH CARE ORGANIZATION எவ்வளவோ முயற்ச்சி எடுத்தும் அவர்களால் இந்த உண்மையை ஆனந்த விகடன் புத்தகத்தில் ஆறாம் திணை என்ற தொகுப்பில் மட்டும் தான் விழிப்புணர்வை ஏற்படுத்த முடிந்தது .....
உடலின் ஏழு சுவைகளையும் வளர்க்க ஆறு சுவைகளில் காய் கனிகளும் ஏராளமாகப் புலால் உணவும் அன்றைய ஐந்து திணைகளிலும் இருந்தன. ஆடு, மாடு, கோழி, காடை, கௌதாரி என அன்றைய தமிழர் புசிக்காத புலால் இல்லை. பச்சை ஊனைப் புசித்து, புறங்கையில் வழியும் குருதியையும் புலால் நெய்யையும் பூட்டிய வில்லில் தடவி நின்ற போர் வீரன்குறித்து சங்க இலக்கியங்கள் பல இடங்களில் பேசுகின்றன.
இன்றைக்கு அசைவம் சாப்பிடுவதுபற்றி இருவேறு கருத்துகள் இருக்கின்றன. ஒன்று... அசைவம் சாப்பிட்டால், உடம்பு வளரும்; மூளை வளராது; சைவமே சிறந்தது என்பது. இரண்டாவது... அசைவம் சாப்பிடுவோருக்குக் காய், கனிகள் ஒரு பொருட்டே அல்ல என்பது. இவை இரண்டில் எது சரி? உண்மை இவை இரண்டுக்கும் நடுவில் இருக்கிறது என்பதே சரி!
அசைவம் சாப்பிட்டால், மூளை வளராது என்பது உழைக்கும் வர்க்கத்தை இழிவுபடுத்தும் ஒரு கருத்து. நோபல் பரிசு வாங்கியவர்களில் 99 சதவிகிதத்தினரும், உலகை உலுக்கி மாற்றிய 'மைக்ரோசாஃப்ட்’, 'ஆப்பிள்’ முதலாளிகளும் அசைவப் பிரியர்கள்தான். புலாலில் உள்ள புரதமும் சில நுண் சத்துக்களும் பொதுவாகக் காய், கனிகளில் குறைவு. உதாரணத்துக்கு, 100 கிராம் ஈரலில், 6,000 மைக்ரோ கிராம் இரும்புச் சத்து உண்டு. 100 கிராம் கேரட்டில் 300 மைக்ரோ கிராம்தான் இரும்புச் சத்து இருக்கிறது. ஆகையால், அசைவத்தின் ஆற்றலைக் கேள்விக்குறியாக்க வேண்டியது இல்லை. ஆனால், அசைவம் மட்டுமே போதுமா? அசைவத்தை எப்படிச் சாப்பிட வேண்டும்? எவ்வளவு சாப்பிட வேண்டும் என்பதுதான், முக்கியமான ஒரு கேள்வி!
ஏனென்றால், போருக்குப் போகும் வீரன் சாப்பிட்டது, காரில் போகும் சுகவாசிக்கு அப்படியே சரிப்படாது. அன்று முதல் இன்று வரை கட்டுமரத்தில் நெடுஞ்சாணாக நின்று கடலை ஆளும் மீனவர் சாப்பிட்ட அளவு, நோஞ்சானாக கேண்டில் லைட் டின்னரில் 'ஃபிஷ் ஃப்ரை’ ஆர்டர் செய்யும் சாஃப்ட்வேர் இன்ஜினீயருக்குச் சரி வராது. உழைக்கும் அளவுக்கும் வாழும் நிலத்துக்கும் உண்ணும் அளவைத் தீர்மானிப்பதில் எப்போதுமே முக்கியமான பங்கு உண்டு. அசைவம் சாப்பிடலாம். ஆனால், அளவாகச் சாப்பிடுங்கள். ஐந்து பேர்கொண்ட ஒரு குடும்பம் வாரத்துக்கு ஒரு நாள் அரை கிலோ ஆட்டு இறைச்சியோ, ஒரு கிலோ கோழிக் கறியோ, ஒரு கிலோ மீனோ சாப்பிட்டால் போதுமானது. அதையும்கூட இரண்டு நாட்களாகப் பிரித்து எடுத்துக்கொண்டால், இன்னும் சிறப் பானது. ஏனைய நாட்களில் காய், கனிகளுக்கு இடம் கொடுங்கள். வாரத்தில் ஒரு நாள் - குறைந்தது ஒரு வேளையேனும் வயிற்றுக்கு ஓய்வு கொடுத்து விரதம் இருங்கள். எல்லாமே விருந்துதான். எல்லாவற்றுக்குமே ஒரு புரிதல் தேவைப்படுகிறது!
அட்டகாசமான கறி விருந்து சாப்பிட்டால், மறுநாளே கொள்ளு ரசம், சோறு, இஞ்சித் துவையலுடன் எளிமையாக அன்றைய சாப்பாட்டை முடித்துக்கொள்ளும் வழக்கம் நம் முன்னோர்களிடம் உண்டு. ஆட்டின் இறைச்சி உடலுக்குத் தேவையான வலுவைத் தரும் என்றால், கொள்ளும் இஞ்சியும் கொழுப்பைக் கரைக்கும் என்பதை அறிந்துவைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள். நாம் எதை அறிந்துவைத்திருக்கிறோம்?

மாமிசம் சாப்பிடும்போது, நிச்சயம் இஞ்சி, பூண்டு, சீரகம், மல்லி, பெருங்காயம் இருக்க வேண்டும் என்கிறது தமிழ் மருத்துவம். இது வரை எந்தத் தமிழர் வீட்டு அடுப்பங்கரையிலும் இந்தக் கறி மசாலா இல்லாமல் கிடாக் கறி சமைக்கப்பட்டது கிடையாது. ஆனால், புதிதாக வெளிநாட்டில் இருந்து இங்கு மூலைக்கு மூலை முளைத்து உள்ள பன்னாட்டு கறிக் கடைகள் பொரித்தும் அவித்தும் தரும் கறி பக்கோடாக்களில் கறி மசாலாவை நீங்கள் பார்க்க முடியாது தெரியுமா? சரி, கண்ணாடிக் குளிர் அறைகளில், நண்பர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுகிறீர்களே... அந்தக் கறியில் என்னென்னஎல்லாம் கலந்து இருக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? தெரிந்துகொள்ளுங்கள்... நூற்றுக்கணக்கான ரசாயனக் காரணிகள் அவற்றில் உண்டு. ஏகப்பட்ட ரசாயன உப்புகள் உண்டு. குறிப்பாக, புற்றுநோய்க்கு வரவேற்பு வளைவுகள் வைக்கும் சோடியம் நைட்ரேட், மோனோ சோடியம் க்ளூட்டமேட் உப்புகள் உண்டு.
கோழி நல்ல உணவு. ஆனால், அது தானாக இரை தேடி வளர்ந்த கோழியாக இருக்க வேண்டும். ஊசி போட்டு வளர்ந்த கோழியாக இருக்கக் கூடாது. கோழிக் கறி பொதுவாக உடல் சூட்டைத் தந்து நோய் போக்கக் கூடியது. சாதாரண சளி, இருமல், மந்தம் போக்கக் கூடியது; உடல் தாதுவை வலுப்படுத்தி ஆண்மையைப் பெருக்கக்கூடியது என்கிறது சித்த மருத்துவம். கோழியில் நார்ச் சத்து அதிகம்; வைட்டமின் பி 12 சத்தும் அதிகம். உடல் எடை அதிகரிக்காது, வலுவுடன் ஆரோக்கியத்துடன் இருக்க சிக்கனுக்கு இணை எதுவும் இல்லை என்கிறது நவீன உணவியல்.
நம் ஊரில் கருங்கோழி எனும் நாட்டு இனக் கோழி இன்றும் இருக்கிறது. காலில் அதிக மயிருடன் ஷூ போட்டதுபோல் மிடுக்காக இருக்கும். அந்தக் கோழியின் சதைப் பகுதியும்கூட கருஞ்சிவப்பு நிறமாக இருக்கும். தமிழ் மருத்துவம் தசை சூம்பி வலுவிழந்து இருக்கும் பக்கவாத நோயினருக்கும், பிற தசை நோயினருக்கும் இந்தக் கோழியைத்தான் உணவாக, மருந்தாகப் பன்னெ டுங்காலமாக உரக்கச் சொல்லிவருகிறது. நாம் இப்போது சாப்பிடும் கோழி இறைச்சி யின், பின்னணி குறித்து, 'கூவாத கோழியும், குடை சாயும் இறையாண்மையும்’ என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் சுந்தரராசன் கூறும் தகவல்கள் அதிரவைப்பவை.
'பிராய்லர் கோழிகளின் செழுமை யான தோற்றத்துக்காக அளிக்கப் படும் 'ரோக்ஸார்சோன்’ (Roxar-sone) என்ற மருந்து மனிதர்களுக்குப் புற்றுநோயை உருவாக்க வல்லது என்கிறது அமெரிக்காவின் பிட்ஸ்பர்க்கில் அமைந்துள்ள டியூக்கேன் பல்கலைக்கழக ஆய்வு முடிவுகள். குழந்தைப் பருவத்திலேயே சிறுமிகள் பூப்படைதல், ஆண்மைக் குறைவு உள்ளிட்ட பல்வேறு நோய்களும், இந்த பிராய்லர் கோழிகளையும் லேயர் கோழிகள் இடும் முட்டைகளையும் தொடர்ந்து உட்கொள்ளும் மனிதர்களுக்கு ஏற்பட வாய்ப்புகள் இருப்பதாகப் பல்வேறு ஆய்வு கள் தெரிவிக்கின்றன!'' என்று புத்தகத்தில் தந்து இருக்கும் எச்சரிக்கைப் பட்டியல் அபாயகரமானது...
Vijay News
தாராபுரத்தைச் சேர்ந்த இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் கூண்டோடு கலைக்கப்பட்டு அதன் நிர்வாகிகள் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் இளைய தளபதி விஜய் மக்கள் இயக்கம் ஜாபர் சாதிக் தலைமையில் செயல்பட்டு வந்தது. தற்போது இந்த இயக்கத்தின் மாநிலப் பொறுப்பாளர் ஆனந்த், துணைத் தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் இளைய தளபதி விஜய்யை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கின்றனர். அவர்களுக்கு தேவையானதை செய்து தருபவர்களுக்கு மட்டும் இயக்கத்தில் முன்னுரிமை தருகிறார்கள். அங்கு ஜனநாயகம் கிடையாது. பண நாயகம் தான் உள்ளது. இவை எல்லாவற்றையும் நடிகர் விஜய்க்கும், அவரது தந்தைக்கும் பல முறை தபால் மூலம் தகவலை கொண்டு சென்றும் பலன் இல்லை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும், தாராபுரம் விஜய் மக்கள் இயக்க நகர தலைவர் ஜாபர் சாதிக், நகர துணைத் தலைவர் ஜூபேர், நகர இளைஞரணி தலைவர் ராமதாஸ், நகர இளைஞரணி துணைச் செயலாளர் மாரிமுத்து, ஒன்றியத் செயலாளர் கார்த்திகேயன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும், இயக்க தொண்டர்களும் இயக்கத்தை முழுமையாக கலைத்துவிட்டார்களாம்.
இதன் அடுத்த கட்டமாக அவர்கள் அனைவரும் ஆம் ஆத்மி கட்சின் தமிழக பொறுப்பாளரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான கிறிஸ்டினா சாமி முன்னிலையில் அந்த கட்சியில் இணைந்துவிட்டார்களாம்.
இதனையடுத்து தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு இயக்க முன்னணி நிர்வாகிகளுக்கும் தூதுவிடும் படலம் அரங்கேறி வருகின்றதாம். இதற்கு ஏற்ப எதிர் முகாமில் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்து வருகின்றதாம். இதில் குஷியான ஆம் ஆத்மி தரப்பு விரைவில் தமிழகத்தில் இருந்து பல முக்கிய இளைஞர்கள் ஆம் ஆத்மியில் இணைய உள்ளனர் என உற்சாகம் பொங்க சொல்கின்றது.
Balu mahendra
What follow are his words, that are translated from his blog.
About two years ago, my movie Veedu, which grabbed two National Awards, and a few International Awards, was to be screened in an International film festival for women, at Chennai.
I wished to give a new digital copy of my movie to the organizers. But, when I opened the case, in which I had stored the negative copy of Veedu, I found that the negatives of the movie were totally damaged in a way that not even a single copy could be made out of it. I rushed to see the fate of my other movies - Sandhya Raagam and Marupadiyum. Those negatives were also beyond repairable.
A pain of losing my three children right before my eyes engulfed me.
I had spent many sleepless, tearful nights thinking about my movies which were destroyed during my time itself. I have never been able to walk out of the loss, even now.
I have no strength left in me to see what happened to my other children: Kokila - my first movie, Azhiyadha Kolangal – my first Tamil movie, Moodupani, Moondram Pirai – the movie that got National Awards for me and Kamal Haasan. I don’t want to see their state. I will never be able to bear the pain of losing them. Instead, I will live on, with a blind faith that they are hale and healthy.
Veedu, Sandhya Raagam and Marupadiyum were considered to be some of Tamil Cinema’s important movies. Had they been preserved in the way they should have been, this demise would not have happened.
#Azhiyadha #Kolangal was released in 1977, #Veedu in 1987 and Marupadiyum in 1993. If these movies cannot be printed again, what would have happened to our earlier Tamil Classics? What happened to our Parasakthi(s), Ratha Kanneer(s), and Pasamalar(s)?
Cinema runs in the blood of Tamilians. It is the only entertainment that our people can afford without a big hole in their budget. Our media’s biggest revenue streams are from cinema. Tamil music is the cinema songs. Tamil prose is the cinema dialogues and scripts. Tamil art is the cinema posters. The rules of fashion are framed by cinema.
Cinema makes a big mark in our everyday lives, and our everyday politics. All our Chief Ministers right from Mr CN Annadurai to Mr M Karunanidhi and Ms J Jayalalitha are from this field. And, looking at the prevailing trends among actors, not just the past, even the future politicians are likely to be from this field.
In spite of all its importance and cultural value, no one seems to care about preserving Tamil cinema. No one seems to consider the fact that Tamil cinema’s biggest classics can never be seen in theatres. Researchers will never be able to research on the changes and transformations that were brought in our cinemas over the years.
To see our classics, we will have to visit the National Film Archive, Pune or search for pirated DVD copies or watch it in TV along with advertisement baggage.

An easier, yet fruit bearing alternative, would be setting up a Film Archive for Tamil cinema in Tamil Nadu, with state of art equipment and devices. Every movie should store its duplicate negative copy and its digital version here. This repository should be of international standards, equal to those of America, France and Germany.
The initial costs for setting up the repository can be shared by the Tamil film fraternity (actors, producers, musicians and other technicians) and Tamil Nadu Government. If we want our children to enjoy our classics, the steps for setting up such a repository have to happen immediately.
As a #Tamilan, as a person deeply passionate about Tamil cinema, I plead the Tamil Nadu Government and the Tamil film fraternity, to take the necessary steps. And, do it as early as possible.
அஜித்
சொல்லிருந்தார் படம் அதிகமான
தியேட்டர்ல ரிலிஸ் ஆகுரது முக்கியம்
இல்ல அதிகமான தியேட்டர்ல படம்
ஓடுரது தான்
முக்கியம்னு சரிங்கனா இப்பொம்
யாருபடங்கன அதிகமான தியேட்டர்ல
50 நாள் ஒடிருக்கு சத்தியமா நான்
இப்போம் அஜித கின்டல் பன்னல
எங்களுக்கு அவர கிண்டல் பன்ன
மனசு வராது அஜித் ரசிகர்கள் கிட்ட
ஒரு கருத்த முன் வக்கிரன் நீங்க
என்னதான் பில்டப் பன்னாலும் fake
பன்னி tease பன்னாலும் விஜய் தான்
சூப்பர் ஸ்டார் இத யாரலையும் மாத்த
முடியாது எப்பவும் கல்க்ஷ்ன்ல படம்
அதிக நாட்கள் ஓடுரது ல நாங்க தான்
நம்பர் 1ல இருந்துருக்குரோம்
இருப்போம் இத நீங்க ஏத்துகாம
போனாலும் இது தான் நிஜம்
இது உங்கலுக்கே தெரியும்
மறுபடியும் சொல்றன் நான் அஜித
கின்டல் பன்னல நாங்க அஜித்
எங்களுக்கு ஒரு சக
போட்டியாளரா நினனக்கிறோம்
நீங்கதான் எங்கல கண்டு வயத்தரிச்சல்
படுரீங்க அதுனால தான் fake
பன்னி tease பன்ரீங்க
இதுக்கு எதிர்ப்பு காட்ட எங்கல
ஒரு சிலர் அஜித tease பன்னராங்க
ஆஞ்சுனேயே படம்
ரிலிஸ்க்கு முன்னாடி அஜித் குமதம்
பத்திரிக்கையில நான் தான் அடுத்த
சூப்பர்
ஸ்டார்னு அவரே பேட்டி தந்தாரு அத
நாங்க தப்பா சொல்ல அவரோட
தன்னம்பிகை அது ஆனா அதே அஜித்
அசல் படம்
ரிலிஸ்க்கு முன்னாடி அலிட்மேட்
ஸடார் ணு பட்டம்
போடதிங்கணு சொன்னாரு நான்
அதுக்கு தகுதி அனாவனா இல்லனு சொன்னாரு உன்மைக்கும்
இது அஜித்தோட எதார்த்தாமான பதில்
நல்ல இயல்பான நல்ல மனசு உள்ளவர்
அஜித் அதான் அப்படி சொன்னார்
மறுபடியும் சொல்றன் நான் அஜித
கின்டல் பன்னல விஜய் தான் சூப்பர்
ஸ்டார்னு சொல்றதுக்கு எராளாமான
உதாரனம் இருக்கு
1. Super star of tomorrow vijay tv
award ரசிகள் vote
பன்னி கொடுத்தா award
2. Next generation குழந்தைங்க
ரசிகர்கள் விஜய்க்கு தான் அதிகம்
3. Movie running days
ரஜினிக்கு அப்பரம் விஜய்
அன்னாக்கு தான் அதிக centre ல 100
நாள் 200 நாள் படங்கள் அதிகம்
4. Collection ல விஜய் தான் No. 1 ல
இருககாரு.

ரஜினி field க்கு வரும்
போது அவருக்கு senior நடிகர்கள்
யாருமே மாஸ்ல இல்ல
சிவாஜி கௌரவ வேடம் நடிக்க
அரம்பிச்சுடாரு எம் ஜி ஆர் சினிமா ல
இல்ல ஆனா ரஜினி இருக்கும்
போதே விஜய் அடுத்த சூப்பர்
ஸடார்னு பெயர்
யெடுத்துடாரு இப்பவே அரிசியல்
ரீதி ஆன மாஸ் வர அரம்பிச்சுட்டு
கொழுப்பைக் கரைக்கும் கொள்ளு

புரதத்தில் சுப்பீரியர் புரதம் என்றும், இன்ஃபீரியர் புரதம் என்றும் இருவகை உண்டு. பொதுவாக அசைவ உணவுகளின் மூலம் கிடைப்பதெல்லாம் சுப்பீரியர் புரதம். பருப்பு உணவு மூலம் கிடைப்பது இன்ஃபீரியர் புரதம். சோயாவும் கொள்ளும் சுப்பீரியர் புரத வகையைச் சேர்ந்தவை. எனவே, சைவ உணவுக்காரர்களுக்கு, அசைவ உணவுகளின்மூலம் கிடைக்கிற உயர்தர புரதத்தை அள்ளிக் கொடுக்கும் ஒரே தானியம் கொள்ளு.கொள்ளின் பலன்கள் கொழுப்பைக் கரைப்பதில் கொள்ளுக்கு முதலிடம். உடலிலுள்ள தேவையற்ற தண்ணீரைக் கொள்ளு எடுத்துவிடும். கொள்ளுத் தண்ணீர் ரத்தத்தை சுத்திகரிப்பதுடன், உடலிலுள்ள நச்சுத் தன்மைகளை எல்லாம் எடுத்து விடும். வளரும் குழந்தைகளுக்கும், உடற்பயிற்சி செய்வோருக்கும் மிகவும் உகந்தது. ஆயுர் வேதத்தில் கொள்ளை தலையில் வைத்துக்கொண்டாடாத குறைதான். பெரும்பாலான நோய்களுக்கு கொள்ளு மருந்தாகப் பயன்படுகிறது. பைல்ஸ் எனப்படுகிற மூல நோய்க்கு, ருமாட்டிசம் பிரச்னைக்கு, இருமல் மற்றும் சளியை விரட்ட, காய்ச்சலைக் கட்டுப்படுத்த... இப்படி கொள்ளு குணமாக்கும் பிரச்னைகளின் பட்டியல் நீள்கிறது.
அல்சர் எனப்படுகிற வயிற்றுப் புண்ணுக்கும், சிறுநீரகக் கற்களை வெளியேற்றவும், அதீத ரத்தப் போக்கைக் கட்டுப்படுத்தவும்கூட கொள்ளு உதவுவதாக ஆயுர்வேதம் சொல்கிறது. சிக்குன்குனியா நோய் பாதித்தவர்களுக்குக் கூட கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சூப் வைத்துக் கொடுக்கச் சொல்லிப் பரிந்துரைக்கப்படுகிறது. ஆந்திராவில் மஞ்சள் காமாலை நோய்க்கு கொள்ளை மருந்தாக உபயோகிக்கிறார்கள். அது மட்டுமின்றி, கொள்ளை வேக வைத்து மசித்து, சருமப் பிரச்னைகளுக்குத் தடவுகிறார்கள்.சூட்டைக் கிளப்புமா?
கொள்ளு சூட்டைக் கிளப்பும் என்றும், அதனால் அடிக்கடி அதை எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும் மக்களிடையே ஒரு எண்ணம் உண்டு. கொள்ளு சூடானது என்பது உண்மைதான், அதாவது, வளர்சிதை மாற்ற விகிதத்தை வேகப்படுத்தும். அதனால்தான் கொழுப்பைக் குறைக்க கொள்ளு எடுத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
குதிரைக்கு கொள்ளு கொடுப்பதன் பின்னணியும் இதுதான். குதிரை குண்டாக இருந்தால் அதனால் வேகமாக ஓட முடியாது. கொள்ளு கொடுப்பதால் தான் குதிரை கொழுப்பின்றி, சிக்கென்று இருக்கிறது. உடல் திண்மையுடன் வேகமாக ஓடுகிறது. எனவே அதை வைத்து உடனே மனிதர்களுக்கு கொடுக்கக்கூடாது என்ற மனநிலைக்கு வரவேண்டாம். தொடர்ந்து ஒருவர் கொள்ளு ஏதாவது ஒரு முறையில் சாப்பிட்டு வந்தால் அவருக்கு எந்தவித நோயும் வராது. எதிர்காலத்தில் உடலில் எந்த பிரச்னையும் ஏற்படாது.
எப்படியெல்லாம் எடுத்துக் கொள்ளலாம்?
கொள்ளு வேக வைத்த தண்ணீரில் சிட்டிகை உப்பும், மிளகுத்தூளும் சேர்த்து தினமும் அப்படியே குடிக்கலாம். வேக வைத்த கொள்ளை, சாலட் போல சாப்பிடலாம். கொள்ளை வெறும் கடாயில் வறுத்துப் பொடித்துக் கொண்டு, சாம்பார், ரசம், பொரியல், கூட்டு என எல்லாவற்றிலும் சேர்க்கலாம். உணவின் மூலம் உடலுக்குள் சேரும் கொழுப்பிலிருந்து இது நம்மைக் காப்பாற்றும். அசைவம் சாப்பிடுகிறவர்கள், குறிப்பாக மட்டன் பிரியர்கள், அத்துடன் கொள்ளு சேர்த்து சமைக்கலாம். மட்டன் அதிக கொழுப்பு நிறைந்தது.
கொள்ளு அந்த கொழுப்பை உடலில் தங்க விடாமல் காக்கும். அதற்காக தினமும் மட்டன் சாப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை. இது என்றோ ஒரு நாளைக்குத்தான். மதியமோ, இரவோ பலமான விருந்து சாப்பிடப் போகிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அன்றைய தினம் காலையில் நொய்யரிசியும், கொள்ளும் சேர்த்துக் கஞ்சி செய்து குடித்தால், அடுத்தடுத்த வேளைகள் சாப்பிடப் போகிற உணவின் கொழுப்பினால் உடலுக்கு பாதிப்பு வருவது தவிர்க்கப்படும்.
வேர்க்கடலை கொழுப்பு அல்ல
வேர்க்கடலை என்றதுமே முதலில் நினைவுக்கு வருவது அதில் உள்ள கொழுப்புச் சத்து தான். இதனால் உடல் பருமன் கூடும், ரத்த அழுத்தம் அதிகரிக்கும். இதய நோய்கள் போன்ற பிரச்னைகள் வரும் என்ற நம்பிக்கை தான் இருந்து வருகின்றது. ஆனால் வருகின்ற ஆராய்ச்சிகளில் இந்த நம்பிக்கைகளுக்கு எந்த ஒரு ஆதாரம் இல்லை என்றே தெரிகிறது. காரணம் வேர்க்கடலையில் உடலுக்கு தேவையான நல்ல கொழுப்பு சத்தும் அதனுடன் அதிகமான புரத சத்தும் இருக்கின்ற படியால் அவை உடலுக்கு தீங்கு விளைவிப்பதில்லை.
முக்கியமாக சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த ஆரோக்கியமான உணவாகும். ஏனெனில் இதிலுள்ள சர்க்கரையின் அளவு ரத்தத்தில் மிக மிக குறைந்த அளவே சேருவதால் பயமில்லாமல் சாப்பிடலாம். மேலும் இதில் இருக்கும் மெக்னீசியம் என்ற வேதிப்பொருள் இன்சுலினை சுரக்கச் செய்யும் ஹார்மோனை துரிதப்படுத்தி சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது. ஆகவே இவர்கள் அன்றாட உணவில் தைரியமாக வேர்க்கடலையை சேர்த்துக் கொள்ளலாம். வேர்க்கடலையில் ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்தும் சோடியத்தின் அளவு மிகவும் குறைவாக காணப்படுவதால் வேர்க்கடலை சாப்பிடுபவர்களுக்கு ரத்த அழுத்தம் அதிகரிக்காது. மாறாக ரத்த கொதிப்பு குறையும். வேர்கடலையில் நைட்ரிக் அமிலம் என்ற வேதிப்பொருள் உள்ளது. இவை வேர்க்கடலையைச் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் உற்பத்தியாகும் நைட்ரேட் ரத்தக் குழாய்களை விரிவடையச் செய்வதால் ரத்த ஓட்டம் சீராகிறது. மேலும் இதில் காணப்படும் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்ஸ் போன்ற உயிர் வேதிப் பொருட்கள் மாரடைப்பு போன்ற இருதய நோய்கள் உருவாக்காமல் தடுக்கிறது.
வேர்க்கடலை நார்ச்சத்து மிகுந்த உணவு என்பதால் வேர்க்கடலை சாப்பிட்டால் மலசிக்கல் ஏற்படாது. ஆகவே கர்ப்பிணிகள் கூட வேர்க்கடலையை சாப்பிடுவது நல்லது. வேர்க்கடலையின் தோலை நீக்காமல் சாப்பிட வேண்டும். ஏனெனில் அதில் தான் நிறையச் சத்துக்கள் அடங்கியுள்ளது. மேலும் வேர்க்கடலையைப் பச்சையாகச் சாப்பிடுவதைவிட, வேர்க்கடலையை அவித்தோ, வறுத்தோ சாப்பிடுவதால் சிலருக்கு ஏற்படும் அஜீரணத்தை தவிர்க்கலாம். பொதுவாக உடல் எடையை குறைப்பவர்கள் நொறுக்கு தீணிக்கு பதிலாக வேர்க்கடலையை சாப்பிடலாம்,
ஏனெனில் இவை சாப்பிட்ட திருப்தி விரைவிலேயே கிடைப்பதால் மேலும் மேலும் எதையாவது சாப்பிட்டு உடல் எடையை கூட்டும் நிலை வராது. ஆனாலும் இதில் உடல் எடையைக் கூட்டும் புரத சத்து அதிகமிருப்பதால் அளவோடு சாப்பிடுவது தான் இவர்களுக்கு நல்லது. இதிலுள்ள கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆரோக்கியமான எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் முதுமையில் ஏற்படும் ஆஸடியொபோராசிஸ் என்ற எலும்பு சம்பந்தமான நோயையும் தடுக்க உதவுகிறது.