Sankara nayagi's invitation is awaiting your response
|

Sankara nayagi's invitation is awaiting your response
|

Invitation to connect on LinkedIn
|

மாஜி காதலர்கள் சிம்பு -நயன்தாரா சேர்ந்து நடிக்கும் காட்சி படமாகிறது
மாஜி காதலர்கள் சிம்பு நயன்தாரா நடிக்கும் காட்சி நாளை படமாகிறது. சிம்பு, நயன்தாரா ஜோடி இணைந்து நடித்த படம் வல்லவன். நெருங்கி பழகிவந்த சிம்பு, நயன்தாரா காதல் ஜோடிகளாகவும் வலம் வந்தனர். இந்நிலையில் இவர்களுக்குள் மனக்கசப்பு ஏற்பட்டு பிரிந்தனர். இதில் மனம் உடைந்த நயன்தாரா நடிக்காமல் ஒதுங்கி இருந்தார். சுமார் ஒரு வருட இடைவெளிக்கு பிறகே நடிக்க வந்தார். இதற்கிடையில் பிரபு தேவாவுடன் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்தது. பிறகு அவரிடமிருந்தும் பிரிந்தார். காதல் வாழ்க்கையை மறந்து மீண்டும் நடிப்பில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார் நயன்தாரா. தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்ததுடன், கடந்த ஆண்டில் அதிக படங்களில் நடித்தவர் என்ற பெயரையும் தட்டிச்சென்றிருக்கிறார்.

இதற்கிடையில் பசங்க பட இயக்குனர் பாண்டிராஜ், சிம்பு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதில் சிம்புக்கு ஜோடியாக நடிக்க தேவதை போன்ற ஹீரோயினை தேடிவருவதாக இயக்குனர் கூறி இருந்தார். தேவதை என்றால் அது நயன்தாராதான் என சிம்பு கூறினாராம். இதையடுத்து நயன்தாராவை அணுகி சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க கேட்டார் பாண்டிராஜ். அவரும் பழைய சம்பவங்களை மறந்து நடிக்க சம்மதித்தார். இதற்காக பெரிய தொகை அவருக்கு சம்பளமாக தரப்படுகிறது. சிம்பு, நயன்தாரா நடிக்கும் காட்சி நாளை படமாகிறது. நேற்று நயன்தாரா நடித்த காட்சி மட்டும் படமானது. சிம்பு அமெரிக்காவில் இருந்து நாளை திரும்புகிறார் என்பது குறிப்பிடத் தக்கது.
Nimirnthu Nil

The movie features Ravi is a dual role, a 24 years old young man and a 48 year old man, and is a high voltage action thriller in which the lead role will turn a revolutionist to fight for the social causes. The lead protagonist is a disciplined young man who changes his outlook towards the society after he faces certain problems. The movie also documents the lives of the main characters as they turn old in fight for their principles.
Director Samuthirakani has once again done a tremendous job as he sets a steady pace of the movie which always keeps you on the edge for the whole course of the movie. Though more is expected from talented Ravi, nevertheless he has done a decent job. The young actress Amala has also given a good account of her in the movie. The only distraction is the background score in the movie.
கோச்சடையான் மனைவிக்கு கொடுக்கும் சத்தியம்: தேன் சொட்டும் ஒரு பாட்டு

சத்தியம் சத்தியம் இது சத்தியம்
மாலை சூடிய காலைக் கதிரின் மேலே
சத்தியம் இது சத்தியம்
ஒரு குழந்தை போலே…
ஒரு வைரம் போலே…
தூய்மையான என் சத்தியம் புனிதமானது
இப் பிறவியில் இன்னொரு பெண்ணைச்
சிந்தையிலும் தொடேன்
பிறிதோர் பக்கம் மனம் சாயாப்
பிரியம் காப்பேன்
சத்தியம் சத்தியம் இது சத்தியமே
சேவை செய்வேன்
நெற்றிப் பொட்டில் முத்தம் பதித்து
நித்தம் எழுவேன்
கைப்பொருள் யாவும் கரைந்தாலும்
கணக்கு கேளேன்
ஒவ்வொரு வாதம் முடியும் போதும்
உன்னிடம் தோற்பேன்
சத்தியம் இது சத்தியமே
மார்பு கொடுப்பேன்
நோய் மடியோடு நீ வீழ்ந்தால்
தாய் மடியாவேன்
அப்பா கமல் படத்தில் பின்னணி பாட ஆசைப்படும் ஸ்ருதிஹாசன்!

அந்த வகையில, சிறு வயதில் இருந்தே இசையில் அதிக ஈடுபாடு கொண்டவரான ஸ்ருதிஹாசனை, தனது உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராகவே அறிமுகம் செய்தார் கமல்.
மிகப்பெரிய என்ட்ரியை அவர் கொடுத்தபோதும் அதன்பிறகு ஸ்ருதிஹாசனுக்கு இசையமைக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மாறாக, நடிப்பதற்கே சான்ஸ் கிடைத்தது.
அதனால் லக் என்ற இந்தி படத்தில் நடிகையாக பிரவேசித்த அவர் தற்போது இந்திய அளவில் பேசப்படும் நடிகையாகி விட்டார். இந்த நிலையில், தனது தந்தை கமலுடன் நடிப்பதற்கு இரண்டு முறை வாய்ப்புகள் தேடிவந்தும், கால்சீட் இல்லை என்று தவிர்த்து விட்டார் ஸ்ருதி.
இருப்பினும், அப்பாவுடன் நடிக்கும் சூழ்நிலைகள் அமையாதபோதும், அவர் நடிக்கும் படத்தில் தனது பங்களிப்பை செலுத்த ஆசைப்படுகிறார் ஸ்ருதி.
அதனால் விஸ்வரூபம்-2 படத்தையடுத்து கமல் நடிக்கும் உத்தமவில்லன், த்ரிஷ்யம் ரீமேக் படங்களில் பின்னணி பாடும் வாய்ப்பு கேட்டுள்ளாராம் அவர். ஆக, சமீபத்தில் என்னமோ ஏதோ, மான்கராத்தே படங்களில பின்னணி பாடிய ஸ்ருதிஹாசன், விரைவில் கமல் படங்களிலும் பின்னணி பாடுவார் என்று தெரிகிறது.
உடலுக்கு உகந்ததா முந்திரி

நடுத்தர அளவிலான 18 முந்திரிகளில் (சுமார் ஒரு அவுன்ஸ்) 165 கலோரி சக்தியுள்ளது. 22 பாதாம் பருப்புகளில் 170 கலோரிகளும், 14 வால்நட் கொட்டைகளில் 185 கலோரிகளும் நிறைந்துள்ளன. தையமின், நியாசின், பாஸ்பரஸ், போலேட், செலினியம், காப்பர், மெக்னீஷியம், மங்கனீஸ், வைட்டமின் ஈ போன்ற ஏராளமான சத்துக்களும் இவற்றில் உள்ளன. மேலும், தாவரப் பொருட்களில் காணப்படும் ஃப்ளேவினாய்டு வகை சத்துக்களும் அதிகம் உள்ளன. இதய நாள நோய்கள் மற்றும் புற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கும். ரத்தத்தில், எல்.டி.எல். என்ற கெட்ட கொலஸ்ட்ராலின் அளவைக் குறைக்கும்.
பொதுவாக இந்த வகை கொட்டைப் பருப்புகளை மாமிச உணவுக்கு மாற்றாக உணவுப் பட்டியலில் சேர்க்கலாம். பலவித கொட்டைப் பருப்புகளை சேர்த்து கலந்து அதில் தினமும் 75 கிராம் அளவில் சேர்த்துக் கொள்ளலாம்.
கதை கேட்பதை தள்ளி வைத்த ஜி.வி.பிரகாஷ்குமார்!

ஆனால் அந்த படம் எதிர்பார்த்தபடி வெற்றி பெறவில்லை. அதனால் அடுத்தபடியாக தன்னிடம் கதை சொல்ல சுற்றிக்கொண்டிருந்த உதவி இயக்குனர்களிடம், முதல் படமே தோற்று விட்டதால் தொடர்ந்து படம் தயாரிக்க வேண்டும் என்ற மூடே போய் விட்டது என்று அவர்களை விரட்டியடித்து விட்டார்.
இந்தநிலையில், பென்சில் படத்தில் நாயகனாக நடித்து வரும் அவரை மனதில் கொண்டு கதை பண்ணிய மேலும் சில இயக்குனர்களும் முட்டி மோதிக்கொண்டிருக்கிறார்களாம். ஆனால், பென்சில் என்ற ஒரு படத்தில் நடிக்க வந்ததால், நான் இசையமைக்க வேண்டிய சில முன்னணி டைரக்டர்களின் படங்கள் வேறு இசையமைப்பாளர்களுக்கு திரும்பி விட்டன.
அதனால் பென்சில் படத்தின் வெற்றிக்குப்பிறகுதான் அடுத்த படத்தில் நடிப்பது பற்றி முடிவெடுப்பேன். அதனால் அப்படி நான் மீண்டும் நடிப்பதாக இருந்தால் உங்களையெல்லாம் அழைத்து கதை கேட்கிறேன் என்று அந்த டைரக்டர்களிடம் சொல்லி விட்டார் ஜி.வி.பிரகாஷ்.
இதனால் ஜி.வி.பிரகாஷ்குமார் தொடர்ந்து படம் தயாரிப்பார், நடிப்பார் என்று அவருக்காக கதை பண்ணிக்கொண்டு மாதக்கணக்கில் காத்திருந்த இயக்குனர்கள் இப்போது அவர் தனது முடிவை வெளிப்படையாக சொல்லி விட்டதால், அதே கதைகளுடன் வேறு நடிகர்கள் பக்கம் திரும்பி விட்டனர்.
விஜய் படத்தை கைப்பற்ற போட்டிக் கோதாவில் குதித்த நடிகைகள்

முதலில் வில்லனுடன் விஜய்யை மோத விட்ட முருகதாஸ், இப்போது ரொமான்ஸ் காட்சிகளில் சமந்தாவுடன் விஜய்யை மோத விட்டு வருகிறார். ஆக இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில மாதங்களில் முடிந்து விடும் என்று தெரிகிறது.
இந்த நிலையில், தனது அடுத்த படத்தை செப்டம்பர் மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளாராம் விஜய். சிம்புதேவன் சொன்ன ரொமான்ஸ் கலந்த காமெடி கதை ஓ.கே. வாகி விட்டதால், அவருக்கு கால்சீட்டை கொடுத்து விட்டாராம் விஜய். அப்படத்தில் விஜய்க்கு இரண்டு ஜோடிகளாம்.
அதில் ஒருவர்தான் பிரியங்கா சோப்ராவாம். தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையான அவர் தமிழன் படத்திற்கு பிறகு மீண்டும் விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பு என்பதால் டபுள் ஓ.கே சொல்லிவிட்டாராம்.
ஆனால், இன்னொரு கதாநாயகியைத்தான் இதுவரைக்கும் முடிவு செய்யவில்லையாம். தற்போது கதை, லொகேசன் சம்பந்தப்பட்ட வேலைகள் நடந்து கொண்டிருப்பதால் அதை நிலுவையில் வைத்திருக்கிறார் சிம்புதேவன.ஆனபோதும், கோலிவுட்டின் சில முன்னணி நடிகைகள் அந்த வாய்ப்பை கைப்பற்ற போட்டிக்கோதாவில் இறங்கியுள்ளனர். அவர்களில் விஜய்யுடன் ஏற்கனவே நடித்த காஜல்அகர்வால், ஹன்சிகா, அமலாபால் ஆகியோர் முக்கிய இடம் பிடிக்கிறார்களாம்.